Visitors have accessed this post 744 times.

அறிவியல் திருவிழா

Visitors have accessed this post 744 times.

 

முன்னுரை:

இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் திருவிழாவான இந்தியன் சயன்ஸ் காங்கிரஸ், சென்னையில் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஏதாவது ஒரு நகரத்தில் அறிவியல் மாநாட்டை நடத்தி வரும் இந்தியன் சயன்ஸ் காங்கிரஸ் அசோஷியேஷன் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டது. நமது நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகளை வடிவமைப்பதிலும் பங்காற்றுகிறது.

அறிவியல் திருவிழாவின் தொடக்கம்:

ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் அறிவியல் மாநாட்டின் போது இளம் விஞ்ஞானி களுக்கான விருது உள்பட பல பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2006 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் தலைசிறந்த உலக தரத்திலான விஞ்ஞானி ஒருவருக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

இவற்றுக்கெல்லாம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, நிதி உதவி அளிக்கிறது. உலக அளவில் புகழ் பெற்ற நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் மாநாட்டை இந்தியப் பிரதமர் தொடங்கி வைப்பது வழக்கம் , இந்த வகையில் நடந்து முடிந்த அறிவியல் மாநாடு பிரதமர் தொடங்கி வைத்ததோடு மத்திய அமைச்சர்கள், நோபல் விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.

சென்னையில் கிண்டி ,அடையாறு, தரமணி பகுதியை அறிவியல் நகரம் என்பார்கள் .அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைகள், ஐஐடி, மத்திய பாலிடெக்னிக் ,பல பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் ,தமிழக அரசின் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் போன்ற ஏகப்பட்ட கல்வி மற்றும் அறிவியல் அமைப்புகள் உள்ள இடம். அதுமட்டுமில்லாது தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் எல்லோரும் எளிதாக கலந்து கொள்ள வசதியான இடம் எவ்விதச் சார்பும் அற்று மக்களின் அறிவியல் திருவிழாவாக நடக்க வேண்டிய இந்த மாநாடு ,இப்போது தனியார் விருந்தோம்பலில் ஒரு தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து முடிந்துள்ளது.

லட்சக்கணக்கில் பணம் பெற்று மருத்துவ பொறியியல் சீட் கொடுக்கும் ஒரு தனியார் பல்கலைக் கழகத்தால் இப்படிப்பட்ட அறிவியல் மாநாட்டை எளிதாக நடத்த முடியும் என்பது தெரிந்ததே. மேலும் அது அவர்களது கல்வி நிறுவனத்தின் சந்தை மதிப்பை லாபகரமாக வளர்ப்பதற்கான அரிய வாய்ப்பு .ஏற்கனவே கல்வி, மருத்துவம் என்று எல்லாம் தனியார் பிடியில். அவர்கள் லாபம் அடைவதற்காக ஆகிவிட்டது. இனி எல்லாருமே முற்றிலும் தனியார் மயம் தான். தமிழகத்தின் மிகப் பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெறும் மாணவர்கள் பெரும்பாலும் மேல்தட்டு மற்றும் வட நாட்டு பணக்காரர்கள் ,டாலர்களில் பணம் ஈட்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகியோரின் வாரிசுகள், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாணவர்களுக்கும் இவ்வகை பல்கலைக்கழகத்திற்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான தொடர்பு எதுவும் இல்லை .அதைவிட இவ்வகை கல்வித் தந்தைகள் அறிவியல் மாநாடுகளை நடத்திக் கொண்டு சாதி சங்கங்களை நிறுவி அவற்றுக்கும் தந்தையாக இருக்க இருக்க முடிவது இந்தியாவில் மட்டுமே.

முடிவுரை:

திருவிழா நம்ம தெருவிழா ,உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்றவை அரசோ ,அரசின் உதவியுடனும் நடக்கும் போது தமிழகத்தில் அபூர்வமாக நடக்க இருக்கும் அறிவியல் திருவிழா, அரசு துறையின் உதவியுடனோ,சென்னை பல்கலைக்கழகம் அல்லது அண்ணா பல்கலைக்கழகம் இருவரின் கூட்டு முயற்சியில் நடத்தப்பட்ட இருந்தால், மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam