Visitors have accessed this post 298 times.

அழகான குடும்பம் – பாகம் 2

        ”  பேச்சி ” ஓரு குருட்டு தைரியத்தில் மாப்பிள்ளையிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன் என்று கூறினாலும், அவள் மனதில் ஏதோ ஒரு பயமும் பதற்றமும் ஏற்பட்டது உண்மை. 

       இருந்தாலும் கேட்டு விடுவோம் என்று அவளது அலைபேசியில் மாப்பிள்ளையின் தொலைப்பேசி எண்ணிற்கு அழைக்கிறாள். 

             அழைக்கப்பட்ட சிறிது நேரத்தில் மாப்பிள்ளை பதில் அளிக்கிறார் . ஹலோ !, நான் ” மருது ” பேசுறேன் யார் பேசுறது. 

           பேச்சிக்கு வாய் திறக்க முடியவில்லை திறந்தாலும் காற்று மட்டுமே வருகிறது. இருந்தாலும் தைரியத்தை வரவைத்துக்கொண்டு பேசுகிறாள். 

               நான் பேச்சி பேசுறேன் என்றதும் , அவன் யார் பேசுறீங்க?, சரியாய் கேட்கவில்லை!, இருங்கள் வெளியில் வந்து பேசுகிறேன் என்று கூறுகிறான். 

             இவள் பேசியது அவர் காதில் விழவில்லை போலும் என்று இவள் மறுபடியும் நான் பேச்சி பேசுறேன் என்று கூற, அவனோ ம்ம் சொல்லுங்க , இப்போ தான் வீட்ல இருந்து சொன்னாங்க நீங்க என் தொலை பேசி என்ணை வாங்கியிருக்கிறீர்கள் என்று .

          ம்ம் சொல்லுங்க என்னிடம் என்ன பேச வேண்டும், பேச்சியும் இவனிடம் சகஜமாக பேசி தான் கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டு பேச ஆரம்பிக்கிறாள். 

          எப்படி இருக்கீங்க , என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பேச அவனும் பதில் அளிக்கிறான். 

   இப்படியே தொடர அவள் பேசிய  சில நிமிடங்களிலே , உங்களுக்கு மது பழக்கம் உண்டா என்று கேட்க அவனோ இல்லை, என் குடும்பத்தில் யாரும் அப்படி பட்டவர்கள் கிடையாது என்று கூற இவளுக்கோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. 

        சரி என்று கூறி விட்டு , சரி நான் அம்மாவிடம் பேசி கொள்கிறேன் என்று கூறி வைத்து விடுகிறாள் . 

அம்மாவிடம் சென்று , அம்மா எனக்கு மாப்பிளையை பிடித்து உள்ளது  என்று கூற  மலருக்கோ மகிழ்ச்சி நிலை கொள்ளவில்லை.  

 உடனே மாப்பிளை வீட்டாரிடம் இதை பற்றி தெரிவிக்க அவர்களும் மகிழ்ச்சி கொள்கிறார்கள் . இன்னும் சிறிது நாட்கள் கழித்து சொந்தங்கள் அனைவரையும் அழைத்து கொண்டு வந்து பெண்ணுக்கு பூ வைத்து விடுகிறோம் என்று சொல்கிறார்கள் .

                அந்த பூ வைக்கும் நிகழ்வுக்குள் பேச்சியும் மருதுவும் தங்கள் காதலை தொலைபேசி மூலமாக வளர்த்து கணவன் மனைவியாக நினைத்து வாழ தொடங்குகிறார்கள் . 

                மாப்பிளை வீட்டார் சொன்னபடியே சிறிது நாட்களில் வந்து பூ வைத்துவிட்டு செல்கிறார்கள். 

அவர்கள் வந்த சென்ற பாத்து நாட்களிலே நிச்சயதார்த்தமும் முடிவாகுகிறது . 

    நிச்சயதார்த்தத்திற்கு மாப்பிளைக்கு பேண்ட் ஷர்ட் பெண்ணின் வீட்டில் இருந்து எடுத்து கொடுக்க வேண்டும்,. அதற்கு பேச்சி நான் சென்று எடுத்து வருகிறேன் ஆகும் செலவை மட்டும் என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறாள் . 

      அப்பொழுதாவது மருதுவை பார்க்கலாம் என்று. அதன் படியே வெளியூரில் வேலை செய்துகொண்டிருக்கும் மருதுவை திட்டமிட்ட நாளில் ஊருக்கு வர சொல்லி விடுகிறாள் , இவளும் வீட்டில் இருந்து கிளம்பி தெரு முனையில் காத்து கொண்டிருக்கிறாள் .

    மருதுவும் வர இருவரும் காதல் பறவைகளாக பைக் இல் செல்கிறார்கள். சென்று தூரத்தில் இருக்கும் ஒரு நகரத்தில் தேவையான ஆடைகைளை எடுத்து கொண்டு , வீடு திரும்புகிறார்கள் . வரும் வழியில் ஒரு ஆற்றின் ஓரமாக நின்று சிறுது நேரம் பேசி கொண்டிருக்கிறார்கள் . 

           அவளுக்கும் அவனுக்கும் இனம் புரியாத சந்தோஷமும், ஆனால் இன்னும் சிறுது நேரத்தில் வீட்டிற்கு சென்று விடுவோம் என்கிற ஏக்கமும் குடிக்கொள்கிறது.

          இருவரும் பிரிய மனமில்லாமல் முத்தமழை பொழிகிறார்கள். இருந்தாலும் கிளம்பி தானே ஆக வேண்டும்    என்ற எண்ணத்தில் மருது அவளை கொண்டு சென்று அவளது வீட்டு  தெரு முனையில் இறக்கி விடுகிறான். 

          இருவருக்கும் எப்பொழுது திருமணம் ஆகும் என்ற ஏக்கத்தில் நாட்களை கடத்தி கொண்டிருந்தனர் .  அழகான குடும்பம் – பாகம் 2

          இருவருக்கும் எப்பொழுது திருமணம் ஆகும் என்ற ஏக்கத்தில் நாட்களை கடத்தி கொண்டிருந்தனர் .  “

Leave a Comment

Write and Earn with Pazhagalaam