Visitors have accessed this post 910 times.

ஆன்மீக ஞானம்

Visitors have accessed this post 910 times.

                                                                             ஆன்மீக ஞானம்

காகத்திற்கு ஏன்  உணவு வைக்க வேண்டும்?

நாம் அன்றாடம் வீட்டில் காகத்திற்கு சாப்பாடு வைக்கின்றோம் இது நல்லதா இதனால் என்ன பயன் எப்போது நாம் சாப்பிட்டாலும் நமது உணவை இறைவனுக்கு அர்பணித்துவிட்டு அதன் பிறகு ஒரு உயிர்க்கு உணவு கொடுத்துவிட்டு பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும் என்று ஒரு நியதி உண்டு அதனால் தான் அன்றாடம் சாப்பாடு  சமைத்த உடனே சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு ( அதில் இரண்டு சொட்டு நெய் மட்டும் விட வேண்டும் ) பிறகு அதை காக்கைக்கு வைக்க வேண்டும்.

 

இந்த காகத்திற்கு அன்றாடம் சாதம் வைத்து பழகினோம் என்றால் காக்கையும் நமக்கு செல்ல பிராணி ஆகிவிடும் .சரியாக 12 மணிக்கு சாதம் வைத்து பழகினால் அது எங்கிருந்தாலும் சரியான நேரத்திற்கு வந்து விடும் .

 

ஒரு வேலை நாம் சாதம் வைக்க நேரம் ஆகிவிட்டால் அது நம்மை கூப்பிடும் அதுதான் இயற்கை காகத்திற்கு அன்றாடம் உணவு வைத்தால் அதில் நிறைய புண்ணிய பலன்கள் உண்டு ,1.ஒரு உயிருக்கு சாப்பாடு கொடுத்தோம் என்கிற சந்தோசம் ,அதற்கு உணவு கொடுத்த புண்ணியம் நமக்கு கிடைக்கும் .2.காகத்தை நமது முன்னோர்களுக்கு சமமாக மதிக்கப்படுகிறது .

 

முன்னோர்கள் வரக்கூடிய பல்வேறு ரூபங்களில் இதுவும் ஒன்று அதனால் தான் அமாவாசை அன்று காகத்திற்கு நாம் உணவு வைக்கிறோம் .காகம் என்பது யாருடைய வாகனமாக இருக்கிறது என்றால் சனீஸ்வர பகவானிடம் ,எனவே சனீஸ்வர பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் .காகம் என்பது பகிர்ந்து உண்ணக்கூடிய ஒரு ஜீவராசி ,தான் மட்டும் சாப்பிடாது ,தனக்கு ஒரு பொருள் கிடைத்தால் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிடும் அந்த மாதிரி ஒரு ஜீவராசிக்கு உணவு கொடுத்த நல்ல பலனும் கிடைக்கும் .

வாசனை இல்லாத மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்யலாமா ?                                                                                                                                                                                                                                 

வாசனை இல்லாத மலர்களை நாம் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலபேருக்கு உண்டு .நம் நாட்டில் பூக்களுக்கு பஞ்சம் இல்லை அந்த காலத்தில் வாசனை நிறைந்த மலர்களை வீட்டிலேயே வளர்த்தார்கள் ,செடி ,கொடி ,மரங்களில் வளர்ந்தது அதை இறைவனுக்கு அர்ச்சனை செய்து பழகிவிட்டோம் ,ஒரு வேலை வீட்டில் இல்லை என்றால் கூட கடைகளில் வாங்கினோம் ஆனால் காசு கொடுத்தாலும் இவைகளை வாங்க முடியாத நிலை பல நாடுகளில் இருக்கின்றது .

 

நமது இந்தியாவை எடுத்து கொண்டால் வட மாநிலங்களில் வாசனை மலர்களே கிடையாது ,இன்றைக்கும் வட மாநிலங்களில் உள்ள கோவில்களில் கேதார்நாத் முக்திநாத் காசி போன்ற கோவில்களில் துளுக்க சமைத்து சாமந்தி என்ற மலர்களால் மலையை கட்டி இறைவனுக்கு சாத்தப்படுகிறது ஏனென்றால் இந்த ஒரே ஒரு மலர்தான் அங்கு விளைகிறது .

 

வாசனை மலர்கள் கிடைக்காதவர்கள் என்ன செய்வது .உங்களுக்கு எந்த வகையான பூக்கள் கிடைக்கின்றதோ அதை இறைவனுக்கு மனமுவந்து வையுங்கள் .இதில் யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை .இறைவன் எல்லாவற்றிலும் குடியிருக்கிறார் ,அனைத்தயும் படைத்தது இறைவனே ,அது கூடாது இது கூடாது என்று சொல்வதற்கில்லை .எல்லாமே இறைவனுக்கு உகந்தவைதான் அவனுடைய படைப்பில் ஆகாதது என்பது எதுவுமே கிடையாது அதனால் வாசனை மலர்கள் கிடைக்காதவர்கள் மற்ற மலர்களை தாராளமாக வைக்கலாம் .

கோவில்களில் தரப்படும் திருநீறு ,சந்தனம் ,குங்குமம் ,மாலை போன்ற ப்ரசாதங்களை என்ன செய்வது ?

நாம் கோவிலுக்கு செல்லும் போது இரண்டு சிறிய டப்பாக்கள் (அ ) பேப்பர் எடுத்து செல்ல வேண்டும் கோவில்களில் கொடுக்க கூடிய திருநீறு ,குங்குமம் டப்பாவில் போட்டு வீட்டுக்கு கொண்டுவந்து நாம் அன்றாடம் வைத்துக்கொள்ளலாம் .இது போல் பல கோவில்களில் இருந்து கிடைக்கும் பிரசாதங்களை ஒன்றாக டப்பாவில் போட்டு பயன்படுத்தும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

கோவில்களில் கொடுக்கும் பூக்களை பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளலாம் (அ ) வீட்டு வாசலின் நிலைப்படியில் போடுவது விசேஷம் .சுவாமிக்கு போட வேண்டாம் .மாலையும்  அதேபோல்தான் பூஜை அறையின் நிலைப்படியில் போடலாம் (அ ) வாசலின் நிலைப்படியில் போடலாம் .அம்பிகையின் கோவில்களில் எலுமிச்சை பழம் மாலை பிரசாதமாக கொடுப்பார்கள் அதை நாம் பயணம் செய்யக்கூடிய வாகனங்களில் போடலாம் .

 

வீட்டின் வாசல் நிலைப்படியில் போட்டு கொள்ளலாம் ஓன்று ,இரண்டு எலுமிச்சை பழம் பிரசாதமாக கொடுத்தால் அதை வீட்டின் பூஜை அறையில் வைக்கலாம் ,அவை  காய்ந்த பிறகு ஏரி குளம் கிணறு ஆகியவற்றில் சேர்த்து விடலாம் .பூஜை பொருள்களை ஒன்றாக சேர்த்து 1 மாதம் (அ ) 2 மாதம் அவற்றை ஒன்றாக சேர்த்து எரித்து சாம்பலாக்கி நீர்நிலைகளில் கரைக்கலாம் .இது போன்ற முறைகளில் கோவில்களில் கொடுக்கும் பிரசாதத்தை நாம் பயன்படுத்தலாம் .


பூஜை நிறைவில் கற்பூர ஆரத்தி காட்டுவது எதற்காக ?

பூஜை நிறைவில் கற்பூர ஆரத்தி காட்டும் வழக்கம் நமக்கு உண்டு , தொன்றுதொட்டு இந்த கற்பூரத்தைத்தான் நாம் ஆரத்திக்கு பயண்படுத்தி இருக்கிறோம் .கற்பூரம் என்பது நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய அருமையான ஆரோக்கியமான ஒரு பொருள் .இதில் உடல் ஆரோக்கியமும் நிறைய அமைந்திருக்கிறது நன்கு சுத்தமான கற்பூரத்தை வெளியே வைத்தால் அது காற்றில் கரைந்துவிடும் .

 

அந்த காலத்தில் குழைந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் பெரியோர்கள் என்ன செய்தார்கள் என்றால் கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் போட்டு நன்றாக காய்ச்சி குழந்தைகளுக்கு உடம்பு முழுக்க தடவி விடுவார்கள் இதனால் சளி சம்மந்தப்பட்ட உபாதைகள் சரியாகும் .

 

கற்பூரம் உடலுக்கு ஏற்ற மருந்தாகவும் அந்த காலத்தில் பயன்படுத்தினார்கள் .நம்முடைய வழிபாட்டில் சுத்தி போடுவதற்கு கற்பூரத்தைத்தான் பயன்படுத்துகிறோம் ,அதே போல் சுவாமியின் ஆரத்தி நேரத்தில் இந்த கற்பூரத்தை தான் பயன்படுத்துகிறோம் .இந்த கற்பூரத்தை சுவாமிக்கு காட்டுகின்ற போது ( அது எரியும் போது ) அதில் இருந்து வரக்கூடிய அந்த வாசம் மற்றும் புகையானது உடலுக்கு பல்வேறு நன்மைகளை பெற்று தரும் என்பதாலும் பெரியோர்கள் கற்பூர தீபம் காட்டினார்கள் .

 

முக்கியமான காரணம் இந்த சூடம் எப்படி கரைந்து விடுகிறதோ அதுபோல நம்முடைய ஆன்ம இறைவனிடம் கரைந்துவிடவேண்டும். இந்த சூடம் ஆன்மாவுக்கு சமமானது .கோவிலுக்கு போகும் போது எல்லா  பூஜை பொருள்களும் கொண்டு செல்கிறோம் .கொண்டு போகும் பல பொருள்கள்   திரும்பி வரும் ஆனால் ஒன்று மட்டும் திரும்ப வராது அது கற்பூரம் . ஏனென்றால் இந்த கற்பூரம் இறைவனிடம் இரண்டற கலப்பதற்காகவே பூமியில் கிடைத்த அற்புதமான மூலிகை .

 

புராண இதிகாச நூல்களை வீட்டில் படிக்கலாமா ?

வீட்டில் ராமாயணம் மஹாபாரதம் கந்தபுராணம் இந்த மாதிரி இதிகாச புராணங்களை வீட்டில் படிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு .கண்டிப்பாக இவையெல்லாம் படிக்க வேண்டிய நூல்கள் .ஒரு காலத்தில் இவை அனைத்தையும் வீட்டில் வைத்து பாராயணம் செய்தார்கள் .ஆனால் இப்போது பலபேர் வீட்டில் வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள் ஒரு குடும்பம் என்று இருந்தால் அதில் இருக்க வேண்டிய தெய்வீக நூல்கள் என்று சில இருக்கின்றது .

 

அதில் மிக முக்கியமானது நமது சமய நூல்கள் ராமாயணம் மஹாபாரதம் ,பகவத்கீதை ,கந்தபுராணம்,திருப்புகழ்,பன்னிரு திருமுகனைகள் இவை எல்லாம்.கண்டிப்பாக வைத்துக்கொள்ள  வேண்டியவைகள் . இவை பூஜை அறையில் நாம் வைத்துக்கொள்ள வேண்டிய நூல்கள் . இதை எப்படி படிக்க வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை ,ராமாயணத்தில் ஒரு பகுதியாக விளங்குகின்ற சுந்தரகாண்டத்தை வீட்டில் வாசிக்கும் பழக்கம் உண்டு .

 

ஒரு நல்ல நாள் பார்த்து படிக்க ஆரம்பிப்பார்கள் .சுந்தரகாண்டம் எதற்காக படிக்கிறார்கள் என்றால் திருமணம் நடக்கணும்  ,குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கணும் ,நோய் இருந்தால் அது நீங்கனும் ,கர்பமான பெண்கள் இதை கேட்கணும் என்பதற்காக இதை பாராயணம் செய்வார்கள் வீட்டில் வெற்றி கிடைக்கனும் ,வீட்டின் வளமைக்காக பாராயணம் செய்வார்கள் புராண நூல்களை வீட்டில் பாராயணம் செய்யும் போது வீட்டின் வளம் அதிகமாகும் .

 

இன்னொரு முக்கியமான விசயமும் உண்டு ,இந்த ராமாயணம் எங்கெல்லாம் பாராயணம் செய்யப்படுகிறதோ அங்கே ஆஞ்சநேயர் வருவார் ,அதனால் ராமாயணம் பாராயணம் செய்யும் போது பக்கத்தில் ஆஞ்சநேயர்க்கு ஒரு இடம் போட்டு படிக்கனும் என்று நியதி இருக்கிறது .குழந்தை இல்லாத வீட்டில் கம்பசேர்வை என ஒன்று நிகழ்த்துவார்கள் ,இப்போது பலபேருக்கு அது தெரிவதில்லை .

 

கம்பசேர்வை என்றால் என்ன ,கம்பராமாயணத்தை முதல் காண்டத்திலிருந்து ஆரம்பித்து நிறைவு நாள் வரைக்கும் எவ்வளவு நாட்கள் படிக்க முடிகிறதோ அவ்வளவு நாள் படிப்பார்கள் .ஒரு மாதம் படிக்கிறார்கள் என்றால் தினமும் இதை கேட்க ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு தினமும் உணவு கொடுக்க வேண்டும் ,இறைவனுக்கு பூஜை நெய்வேத்தியம் பன்ன வேண்டும் .

 

ஒரு வேளையாவது வந்தவர்களுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்து தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும் இவ்வாறு செய்து அதன் பலனாக குழந்தை பிறக்கின்ற போது க என்ற முதல் எழுத்தை வைத்து பேர் வைப்பார்கள் ,ஏனென்றால் கம்பசேர்வை செய்து பிறந்த குழந்தை என்பதனால் .க என்ற முதல் எழுத்தை கொண்டு குழந்தைக்கு பேர் வைத்து வளர்கின்ற வழக்கம் நம்முடைய நாட்டில் இருந்தது ஆனால் இப்போது வீட்டில் இதை படிக்கின்ற பழக்கம் கிடையாது ,ஆனால் இதை வீட்டில் படிக்க வேண்டும் .

 

ஸ்ரீராமஜெயம் எதற்காக எப்படி எழுத வேண்டும் ?

எம்பெருமானின் திருநாமங்களை நாம் சொல்லுகின்ற போது அதில் முக்கியமான நாமம் ஸ்ரீராமஜெயம் .இந்த ஸ்ரீராமஜெயம் என்ற தாரக மந்திரத்தை ஆஞ்சநேயர் முதன் முதலாக ராமர் வெற்றி பெற்ற தகவலை அசோக வனத்தில் சீதையிடம் தெரிவித்த மந்திரம் .அவர் நிறைய பேசாமல் ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார் .

 

ராமர் வெற்றி பெற்று விட்டார் ,அவர் எப்படி சொன்னார் என்றால் ஸ்ரீராமஜெயம் .ஆஞ்சநேயரால் நமக்கு கிடைத்த அற்புதமான மந்திரம் இந்த ஸ்ரீராமஜெயத்தை எப்படி எழுதுவது ,இப்படி எழுதுவதை என்ன செய்ய வேண்டும் .ஸ்ரீராமஜெயம் எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் ,யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து எழுதலாம் .

 

குழந்தைகளுக்கு நல்ல படிப்பு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து குழந்தைகள் எழுதலாம் . வாழ்க்கையில் வெற்றி என்ற பயணத்தை நோக்கி செல்லக்கூடியவர்கள் எழுதலாம் .இதை எழுதுகின்ற போது முக்கியமான முறை உண்டு .ஸ்ரீராமர் ஜெயம் என்று முழுமையாக எழுதனும் அதன் பிறகு ஸ்ரீராமஜெயம் என்று எழுத வேண்டும் .இந்த நாமத்தின் முழு பயனும் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படி எழுத வேண்டும் .

 

இதை எழுதும் போது அமைதியாக அமர்ந்து எழுத வேண்டும் .இப்படி எழுதியதை ராமர் (அ ) ஆஞ்சநேயர் ஆலயம் கட்டுகிறார்களோ அவர்களிடம் கொடுத்தால் அதை அப்படியே அஸ்திவாரத்தில் ஸ்ரீராமஜெயம் என்கிற மந்திரத்தை பதித்து விடுவார்கள் .இதை பூமிக்கு அடியில் புதைத்து அதற்கு மேலே கோயில் கட்டுவார்கள் .இந்த ராமஜெயத்தை முறைப்படி எழுதினோம் என்றால் கண்டிப்பாக எம்பெருமானின் அருள் ,மஹாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் .

 

கடவுள் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம் ?

கடவுள் நாமத்தை காலையில் சொல்லலாமா (அ )மாலையில் சொல்லலாமா (அ )இரவு சொல்லலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது .கடவுள் நாமத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் குறிப்பிட்ட இடத்தில் ,குறிப்பிட்ட நேரத்தில் தான் சொல்ல வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் கிடையாது அதற்குதான்  நாமம் வைத்திருக்கிறார்கள் .

 

இந்த நாமத்தை காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை சொல்லலாம்,நீங்கள் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் மனதுக்குள் சொல்லி கொண்டிருக்கலாம் இந்த நாமத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தாள் தேவையற்ற வார்த்தைகளை தேவையற்ற சிந்தனைகளை அது நமக்குள் விடாது .அந்த நாமத்தின் மீது முழு கவனம் இருக்கும் .

 

சிவனுக்கு செய்யும் அன்னாபிஷேகத்தின் சிறப்பு என்ன ?

பொதுவாக சிவனுடைய ஆலயங்களில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான விசயம் அன்னாபிஷேகம் ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று செய்யக்கூடியது இந்த அன்னாபிஷேகம் .சிவபெருமானுக்கு வழிபாட்டுக்கு உரிய சிறந்த மாதம் இந்த ஐப்பசி மாதம் சிவனுக்கு ஐப்பசி மாதம் வீட்டிலேயே அன்னாபிஷேகம் செய்து வழிபடலாம் வீட்டில் லிங்கம் வைத்திருந்தால் காலையில் அதற்கு அபிஷேகம் எல்லாம் செய்து முடித்து அவரை நன்றாக துடைத்துவிட்டு ( அது என்ன லிங்கமாக இருக்க வேண்டும்.

என்பது முக்கியம் கருங்கல்லில் ஆனதாக இருக்கலாம் (அ ) ஸ்படிக திருமேனியாக இருக்கலாம் )அபிஷேகத்திற்கு உரிய விக்ரகங்களாக இருக்கு வேண்டும் .அதன் பிறகு பச்சரிசி கொண்டு சாதம் வடித்து அதை சுவாமியின் திருமேணி முழுக்க சாத்தி மலர்களை வைத்து தீப தூப ஆராதனைகள் செய்து வழிபடுவது அன்னாபிஷேகம் என்று சொல்லப்படுகிறது .

கோவில்களில் செய்யப்படும் அன்னாபிஷேகத்திற்கு எல்லா வகையான காய் கனி உணவு பொருள்கள் எல்லாமே பயன்படுத்துவார்கள் .அதன் பிறகு மாலையில் அன்னாபிஷேகத்தில் இருக்கும் பொருள்களை எடுத்து ஒரு லிங்கமாக பிடித்து வைத்து கொண்டு மற்றவைகளை கூடையில் எடுப்பார்கள் .பிறகு அதை நீர்நிலைகளில் ஆறு ஏரி குளம் கோவில்களில் இருக்கும் திருக்குளம் போன்ற இடங்களில் சேர்க்கப்படும் .

 

இது எதற்காக என்றால் ஜல வாழ் பிராணிகளுக்கும் எம்பெருமானின் கருணை கிடைக்க வேண்டும் என்பதற்காக .பூஜைக்கு நீர் ஆறு ஏரி  குளம் ஆகியவற்றில் இருந்து தான் எடுக்கிறார்கள் அந்த தண்ணீரை சுத்தம் செய்ய கூடியவை ஜல வாழ் பிராணிகள்  அதற்காகத்தான்   இவ்வாறு செய்யப்படுகிறது .

 

அதே போல் வீட்டில் செய்யக்கூடிய அன்னாபிஷேகத்தையும் இவ்வாறு செய்ய வேண்டும் .ஒரு பிடி எடுத்து வைத்த உணவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம் அன்னாபிஷேகத்தை பார்த்தால் என்ன பலன் ,இதை பார்க்கும் போது நமக்கு அன்ன குறை என்பதே ஏற்படாது ,சோறு கண்ட இடம் சொர்கம் ,அதாவது சிவபெருமானை சோறு மூடி எந்த இடத்தில் காண்கிறோமோ அந்த இடம் முதல் சொர்க வாழ்க்கை என்பது திறக்கிறது .சுவாமி அன்னாபிஷேகத்தில் இருக்கின்ற போது அவரை தரிசனம் செய்தால்  நமக்கு மோட்சம் என்ற உயர் நலனையும் அவர் நமக்கு பெற்று தருவார் .

 

சிதலம் அடைந்த சுவாமி படங்களை பூஜை அறையில் வைக்கலாமா ?

பூஜை அறையில் செல்லரித்து போன பழைய சுவாமி படங்களை வைக்கலாமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது .முதலில் இறைவனை நாம் ரூபங்களில் வேண்டுமானாலும் வைக்கலாம் நமது முன்னோர்கள் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்ட படங்கள் நல்ல முறையில் ,சிதிலம் அடையாமல் இருக்கிறது என்றால் அதை தாராளமாக வைத்து கொள்ளலாம் .

 

அதே போல் தஞ்சாவுர் ஓவியம் என்று சொல்வார்கள் அவை நவரத்தின கற்களாலும் தங்கத்தினாலும் தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளினாலும் செய்யப்பட்ட  அந்தகாலத்து படங்கள் பூஜை அறையில் வைத்திருப்பார்கள் ,அவையும் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான படங்கள் ,அவைகளை தாராளமாக வைத்து கொள்ளலாம் எந்த மாதிரியான படங்களை நாம் வைக்க கூடாது.

 

உடைந்து இருக்ககூடிய படங்களை வைக்க கூடாது ,கண்ணாடி உடைந்த படங்களாக இருந்தால் கண்ணாடி மாற்றி வைக்க வேண்டும் அதே போல் ஓரத்தில் செல்லரித்த படங்களை வைக்க கூடாது ,பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய சுவாமி படங்களை தருவார்கள் (அ ) நாம் வாங்குவோம் அந்த படங்களை தொடர்ந்து பூஜை அறையில் வைக்க கூடாது .இறைவனுடைய சானித்தியம் என்பது நிறைந்து இருக்க கூடிய இடம் பூஜை அறை .பூஜை அறை என்பது பார்த்தவுடனே மங்களகரமாக இருக்க வேண்டும் .


சிவன் சொத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா ?

பொதுவாக சிவன் சொத்து குலநாசம் என்ற வார்த்தையை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் அப்படி என்றால் என்ன? கோவில்களில் இருந்து என்னென்ன எடுத்து கொண்டு வரலாம் என்னென்ன எடுத்து கொண்டு வரக்கூடாது என்று சில நியதிகள் உண்டு .அந்த வகையில் சிவன் கோவில்களில் இருந்து அர்ச்சகர் கொடுக்கும் எல்லா பொருளையும் கொண்டு வரலாம் .

 

கோவில்களில் வேறு யாராவது (அ ) அடியார்கள் கொடுக்கும் பிரசாதங்களை கொண்டு வரலாம் .கோவிலுக்கு உரியவை என்று இருக்கும் அது சிவனுடைய சொத்து நாமாக எடுத்து கொண்டு வரக்கூடாது .பழங்கள் காய்க்கும் மரங்கள் இருக்கும் ,பழங்கள் நல்லா இருக்கும் என்று நாம் பறித்து கொண்டு வரக்கூடாது ,மருதாணி மரம் இருக்கும் அதை நாம் பறித்து கொண்டு வரக்கூடாது ,இந்த கொன்றை மலர் எங்கேயும் கிடைக்காது சிவன் கோவிலில் தான் இருக்கிறது  இதை கொண்டு போய் நம் வீட்டில் இருக்கும் சாமிக்கு போடலாம் என்று பறித்து கொண்டு வரக்கூடாது.

 

இறைவனுக்கு சாத்துவதாக இருந்தால் கோவிலில் இருக்கும் சிவனுக்கு சாத்த வேண்டுமே தவிர ,அதை எடுத்து கொண்டு போய் வீட்டில் இருக்கும் சாமிக்கு அர்ச்சனை செய்யலாம் (அ ) வேறு இடத்திற்கு எடுத்து சென்று அர்ச்சனை செய்யலாம் என்று எடுத்து செல்ல கூடாது .

 

சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் என்று ஒருவர் இருக்கிறார் அவரிடம் சென்று சொடக்கு போட்டு கை தட்டி அவரை கும்பிட கூடாது அவரை எப்படி வணங்க வேண்டும் என்றால் ,கையை துடைத்து காட்டி தான் வணங்க வேண்டும் .அவர்தான் அங்கு உட்கார்ந்து கணக்கு எழுதுபவர் சிவன் கோவில்களில் இருந்து என்ன சொத்து யார் எடுத்து கொண்டு செல்கிறார்கள்  என்ற கணக்கு ,அதனால் அவரிடம் சென்று கையை துடைத்து காட்டி ,இந்த கோவிலில் இருந்து எம்பெருமானின் கருணையை தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என்று காட்டுவதற்காக ,கையை துடைத்து காட்டி அவரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு அதன் பிறகு கோவிலில் இருந்து வெளியே வர வேண்டும் .

 

விரதம் இருக்கும் போது வீட்டில் தூங்கலாமா ?

நம்மில் பல பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது விரதம் இருக்கும் போது பகலில் தூங்கலாமா (அ ) இரவில் தூங்கலாமா என்று தூங்ககூடாத விரதம் என்று எடுத்து கொண்டால் இரண்டு விரதம்தான் 1.சிவராத்திரி 2.ஏகாதசி ,சிவராத்திரி மற்றும் ஏகாதசி இந்த இரண்டு நாட்களிலும் இரவு முழுக்க தூங்கக்கூடாது .

 

அதே போல் அடுத்த நாளும் தூங்கக்கூடாது ,அந்த விரதத்தை நிறைவு செய்து அடுத்த நாள் தீபம் பார்த்த பிறகு தான் நாம் தூங்கனும் என்ற முறை உண்டு .இந்த நாட்களில்தான் இரவு தூக்கத்தை தவிர்க்க வேண்டுமே தவிர மற்ற எந்த விரத காலமாக இருந்தாலும் இரவில் தூங்கலாம் .

 

 முன்னோர்கள் வழிபட்ட விக்ரகங்களை என்ன செய்வது ?

வீட்டில் பழைய மூர்த்தங்கள் இருந்தால் அவற்றை என்ன செய்வது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு ,நம் முன்னோர்கள் வழிபட்ட மூர்த்திகள் அது சிவலிங்கமாக (அ )விநாயகராக (அ )முருகராக (அ )சாலக்ராமமாக (அ )கைலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மூர்த்தங்களாக இருக்கலாம் ,எந்த வழிபாட்டு பொருளாக இருந்தாலும்  சரி ,அதை நாம் என்ன செய்வது.

அதாவது நம்முடைய கொள்ளு பாட்டி ,கொள்ளு தாத்தா கும்பிட்டார்கள் ,அதன் பிறகு தாத்தா பாட்டி ,அதன் பிறகு நம்முடைய அப்பா அம்மா பூஜை செய்து வந்தார்கள், இப்போது நம்மால் அதற்கு சரியாக பூஜை செய்ய முடியவில்லை என்றால் (விக்ரகங்களை ஒரு பெட்டிக்குள் வைத்திருப்பார்கள் )அந்த பெட்டியை அப்படியே பூஜை அறையில் வைத்திருக்கலாமா என்ற சந்தேகம் இருக்கும் .நாம் அதை அப்படி வைக்க கூடாது ,முன்னோர்களால் பூஜைகள் செய்யப்பட்டு மூர்த்தங்களாக கருதப்பட்டு தெய்வங்களாக வழிபட்டவை .

நாம் அதை அப்படியே போட்டு வைத்தோம் என்றால் அது முன்னோர்களுடைய வழிபாட்டை நிந்தித்தற்கும் ,அந்த வழி பாட்டை தொடராத சாபத்திற்கும் ஆளாவோம் .இந்த மூர்த்தங்களை நம்மால் வழிபட முடியும் என்றால் மாதத்திற்கு ஒரு முறையாவது சாலக்கிராமம் இருந்தால் ஏகதேசி அன்று அதில் கொஞ்சம் நீர் விட்டு அபிஷேகம் செய்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும் .

 

ஒரு சிவலிங்கம் இருக்கின்றதென்றால் கண்டிப்பாக பிரேதாஷம் அன்று நீர் மற்றும் பால் விட்டு அபிஷேகம் செய்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும் .இப்படி எந்த மூர்த்தங்களை உங்களுடைய முன்னோர்கள் உங்களுக்கு கொடுத்தார்களோ அவைகளை அந்தந்த காலங்களில் வீட்டில் இருப்பவர்கள் யாராவது ஒருவர் (அ )குழந்தைகள் கூட இதை செய்யலாம் .

 

கோவில்களில் நமது வேண்டுதல்களை வைக்கும் இடம் எது ?

நாம் சிவன் கோவிலுக்கு சென்றாலும் சரி ,பெருமாள் கோவிலுக்கு சென்றாலும் சரி கோவிலில் விழுந்து வணங்க வேண்டிய இடம் கொடிமரம் .பலபேருக்கு இந்த கொடிமரத்தின் வழிபாட்டை பற்றி தெரிவதில்லை .கொடிமரம் என்பது கோவிலின் முதுகுத்தண்டு ,நமக்கு எப்படி முதுகுத்தண்டு இருக்கிறதோ அதே போல் கோவிலுக்கு பிரதானமாக அமைந்திருப்பது கொடிமரம்தான் .

 

இந்த கொடிமரமும் சரி நம்முடைய முதுகுதண்டும் சரி இயற்கையிலேயும் சரி வடிவத்திலேயும் சரி வலையங்களிலும் சரி ஒற்றுமையாக ஒன்றாக அமைந்திருக்க கூடியது ,கொடிமரத்தில் கொடியேற்றும் முறையானது  கொடியை நேராக ஏற்ற மாட்டார்கள் சுழற்றி சுழற்றிதான் ஏற்றுவார்கள் ,அதே மாதிரிதான் நம்முடைய முதுகுத்தண்டில் சுழன்று சுழன்றுதான் சுசும் நாடி இருக்கக்கூடிய நரம்புகளின் இணைப்பு இப்படிதான் செல்கிறது .நம்முடைய உடம்பும்  ஆலயமும் ஓன்று,

 

உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பே ஆலயம் வள்ளல் பிறனார்க்கு வாய் கோபுரவாசல் தெள்ளத்  தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலன் ஐந்தும் காணா மணிவிளக்கே ,என்று திருமூலர் பாடல் வழியே சொல்லியிருக்கிறார் .அது மாதிரி நம்முடைய முதுகுதண்டுதான் கொடிமரம் ,கோவிலில் விழுந்து வணங்க கூடிய இடம் கொடிமரம்தான் .

 

பலபேர் கோவிலுக்கு சென்று எங்கெல்லாம் சன்னதி இருக்கிறதோ அங்கெல்லாம் விழுந்து வணங்குவார்கள் ,அப்படி விழுந்து வணங்க கூடாது .ஆலயத்தில் நாம் விழுந்து வணங்க கூடிய ஒரே இடம் கொடிமரம்தான் .அதில் ஒரு சந்தேகம் ,கோவிலுக்கு உள்ளே செல்லும் போது வணங்க வேண்டுமா (அ )வெளியே வரும்போது வணங்க வேண்டுமா என்று .வெளியே வரும்போதுதான் வணங்க வேண்டும் இது தான் முறை .

 

கொடிமரத்திற்கு முன்னாடி  பலிபீடம் இருக்கும் அங்கே தான்  நாம் விழுந்து வணங்கி நம்முடைய தீய எண்ணங்களை பலியிட்டுவிட்டு இறைவனிடத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் உள்ளதோ அதை நாம் வேண்ட கூடிய இடமே   கொடிமரம்தான் .சன்னதியில் வேண்டக்கூடாது ,அங்கே நன்றிதான் சொல்ல வேண்டும் .என் வாழ்க்கையில் இவ்வளவு நன்மைகளை செய்திருக்கிறாயே அதற்கு நன்றி என்று சொல்ல வேண்டும் .நம்முடைய பிரார்த்தனைகளை வேண்டுதல்களை முழுமையாக நாம் வைக்க வேண்டிய இடம் கோவிலின் கொடிமரம்தான் .கொடிமரம் இல்லாத கோவில்களில் பலிபீடம் இருக்கும் அதற்கு முன்னாடி விழுந்து வணங்கி நம்முடைய வேண்டுதல்களை வைக்க வேண்டும் .

 

கோவில்களில் தானம் எப்போது செய்ய வேண்டும் ,உள்ளே போகும் போதா ?(அ )வெளியே வரும் போதா ?

பொதுவாக தானம் செய்வதற்கு நேரம் காலம் இடம் எதுவுமே கிடையாது .இவை எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டது தானம் ,அது எந்த தானமாக இருந்தாலும் சரி ,பூஜை செய்யும் போது எந்திரிக்க கூடாது என்று ஒரு நியதி இருக்கிறது .

 

பூஜை செய்யும் போது உட்கார்ந்து விட்டால் முடிந்த பிறகு தான் எழுந்திருக்க வேண்டும் .ஆனால் ஒருவர் பசி என்று வந்து நிற்கும் போது அவருக்கு அன்னம் பாலிப்பதாக இருந்தால் பூஜையில் இருந்தும் எழுந்து செல்லலாம் என்ற  நியதி இருக்கின்றதே .அப்படி என்றால் தானத்திற்கு பூஜை கூட தடையில்லை என்ற பொருள் உண்டு ,கோவிலுக்கு போகும் போதும் தானம் செய்து விட்டே செல்லலாம் ,வந்துதான் தானம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை .

 

கோவிலில்  உடைக்கும்  தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா ?

கோவில்களில் தேங்காய் உடைக்கும் முறை உள்ளது ,பலபேருக்கு தேங்காய் எப்படி உடைப்பது ,அதை உடைப்பதற்கு என்ன காரணம் ,என்று தெரியாமலேயே இருக்கிறார்கள் .தேங்காய் என்பது மும்மனங்களின் கூட்டு ,ஆணவம் ,கண்மம் ,மாயை மேலே இருக்க கூடிய தேங்காய் மட்டை மாயை ,நார் கண்மம் ,அதன் ஓடு ஆணவம், இவை அனைத்தையும் தாண்டி உள்ளே வெள்ளையாக இருப்பது ஆத்மாவின் வெளிப்பாடு .எதற்கு சுவாமிக்கு தேங்காய் உடைத்து வைக்கின்றோம் என்றால் இந்த ஆணவம் ,கண்மம் ,மாயை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு நாங்கள் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய அந்த தேங்காய் போல எங்களுடைய ஆத்மாவை உங்கள் திருவடியிலேயே சமர்பணம் செய்கிறோம் என்பதற்காகத்தான் தேங்காய் உடைப்பது .

 

கோவிலுக்கு செல்லும் போது கண்டிப்பாக தேங்காய் உடைத்து தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை .

நீங்கள் சாதாரணமாக சுவாமி கும்பிடலாம் ,ஆனால் கோவிலுக்கு செல்லும் போது வெறும் கையுடன் போகக்கூடாது ,பூ வாங்கி கொண்டு செல்லவும் (அ )ஒரு சூடமாவது ஏற்றி வழிபடனும் .இந்த தேங்காய் கோவிலில் அர்ச்சனைக்கு உடைக்கும் போது அழுகி போனால் அது அபசகுனமா ?என்ற கவலை பலபேருக்கு இருக்கும்.

 

இப்போதெல்லாம் தேங்காய் அழுகிவிட்டது என்ற  விசயத்தை பல கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு சொல்வது கிடையாது ,ஏன் என்றால் அவர்கள் ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக அர்ச்சனை செய்ய கொடுத்திருக்கலாம் எனவே இந்த விசயத்தை அவர்களிடம் சொன்னால் அந்த காரியம் சரியாக நடக்காது என்று நமக்கு நாமே மனதுக்குள் வருத்தத்தை ஏற்படுத்திக்கொண்டு அதில் கவனம் செலுத்தாமல் அதில் கவனக்குறைவோடு தவறுகள் ஏற்பட நாமே தயாராகிவிடுவோம் ,அதனால் மனதளவில் அந்த விசயத்தை தெரிவிக்காமல் இருந்து விட்டால் எந்த கவலையும் ஏற்படாது .

 

சில கோவில்களில் சில அர்ச்சகர்கள் மற்றும் பட்டாச்சாரியார்களுக்கும் அந்த பழக்கம் உண்டு .ஒரு வேலை  தேங்காய் அழுகிவிட்டால் அதை மறைத்து விட்டு வேறு ஒரு தேங்காயை வைத்து ஒன்றுமே நடக்காததுபோல் குடுத்து விட்டு சுவாமியை நன்றாக  வேண்டி கொள்ளுங்கள் ,அவர் உங்களுக்கு துணை இருப்பார் என்று சொல்லி அனுப்புவார்கள் .ஒருவேளை ஐயர் தேங்காய் அழுகி விட்டது என சொன்னார் என்றால் என்ன செய்வது ,அதை பற்றி கவலை கொள்ள தேவையில்லை ஏனென்றால் இந்த உலகத்தில் இயற்கை பொருள்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை .


பூஜை செய்யும் போது மணி அடித்து வழிபாடு செய்வது ஏன் ?

நாம் வீட்டில் பூஜை செய்யும் போதும் சரி (அ )கோவில்களில் பூஜை செய்யும் போதும் சரி எதற்காக மணி அடிக்கிறோம் என்றால் பொதுவாக பூஜை செய்கின்ற நேரத்தில் நல்ல விசயங்கள் தான் நம் காதில் விழவேண்டும் ,தேவையற்ற வீண் பேச்சுக்கள் நம் காதில் விழகூடாது என்ற காரணத்திற்காக நல்ல மங்கள வாத்தியங்களை எழுப்பி நம்மை சுற்றி யாரவது தேவையற்ற வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தாள் அது நம் காதில் விழக்கூடாது என்பதற்க்காக இந்த மங்கள ஒலி எழுப்புதல் என்ற விசயத்தை முன்னோர்கள் கற்று கொடுத்து இருக்கிறார்கள் .அதில் ஒன்றுதான் இந்த மணி .எங்கு மணி ஓசை ஒலிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் துர்தேவதைகள் நடமாட்டம் இருக்காது .

 

இந்த  மணி ஓசையை கேட்டோம் என்றால் நம் உடலில் ஓம்கார மந்திரத்தின் உடைய வெளிப்பாடு நம் உடல் முழுக்க பரவும் .அது ஒரு விதமான ஆற்றலை நம் உடலுக்குள் ஏற்படுத்தும் ,இந்த மணியின் ஓசையை கூர்ந்து கவனித்தால் கோவிலில் அடிக்கும் பெரிய மணியாக இருந்தாலும் சரி,வீட்டில் அடிக்கும் சிறிய மணியாக இருந்தாலும் சரி ,நம்முடைய மனம் முழுவதும் நிரம்பி உடல் முழுவதும் அந்த ஓசை பயணிப்பது போன்ற உணர்வை நம்மால் பெறமுடியும் .

 

ஒவ்வொரு நாளும் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை வெளியேற்றுவதற்கு மணி அடித்து வழிபாடு செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் .அதே போல் பூஜை இல்லாத நேரத்தில் மணி அடிக்க கூடாது பூஜை நேரத்தில்தான் மணி அடிக்க வேண்டும் .இந்த மணியை வீட்டில் நாம் தரையில் வைக்க கூடாது .

 

நாம் பயண்படுத்தும் மணியில் நந்திதேவர் ,கருடன் ,அனுமன் திரிசூலத்தின் வடிவம் இருக்கும் .இந்த மாதிரி பல வடிவங்கள் மணியில் இருக்கும் எனவே மணியை தரையில் வைக்காமல் ஒரு செப்பு (அ )பித்தளை தாம்பாளத்தில் தான் வைக்க வேண்டும் .மணியை எடுத்து அடிப்பதற்கு முன்னாள் அதற்கு நாம் பூஜை செய்ய வேண்டும்.

 

மணிக்கு சந்தனம் குங்குமம் வைத்து மலர்கள் வைத்து பூஜை செய்து  விட்டு அதன் பிறகுதான் மணியை எடுத்து அடிக்க வேண்டும் ஒவ்வொரு நாளும் வீட்டில் மணியோசை கேட்டுக்கொண்டே இருந்தால் துர்தேவதைகள் நடமாட்டம் அறவே அகன்று விடும் கோவில்களில் பெரிய  மணியை ஏன் அடிக்கிறார்கள் என்றால் கோவிலில் பூஜை நடக்கிறது என்பது தூரமாக இருப்பவர்களுக்கு கேட்க வேண்டும் என்பதற்காக .

Leave a Comment

Write and Earn with Pazhagalaam