Visitors have accessed this post 695 times.

இணைய உலாவியில் “Incognito Mode” என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

Visitors have accessed this post 695 times.

நாம் பார்வையிடும் அனைத்து இணைய தளங்களைப் பற்றிய விவரங்கள் நம் பிரவுசரில் பதியப்படும்.

நாம் முன்னர் பார்வையிட்ட இணைய தளங்களின் பெயர்களை ஹிஸ்ட்ரி பட்டியலில் பார்க்கலாம்.

நாம் இனைய பயன் பாட்டின்போது வழங்கும் பயனர் பெயர்கள், பாஸ்வர்ட்கள் மற்றும் படிவங்கள நிரப்பபப் படும்போது வழங்கும் விவரங்கள் போன்றன குக்கீ எனும் ஃபைல்களாக எமது கணினியிலேயே சேமிக்கப் பட்டு விடும்.

கூகுல் போன்ற தேடு பொறிகளைப் பயன் படுத்தி நாம் தேடும் தகவல்கள் கூடப் பதிவாகி விடுகின்றன,

இவ்வாறு எமது இணைய செயற்பாடுகள் அனைத்தும் எமது சொந்தக் கணினியிலே பதிவாகி விட்டால் எமக்கொன்றும் பெரிகாகப் பாதிப்புகள் ஏற்படாது.

எனினும் பொது இடங்களில் உள்ள பலரும் பயன் படுத்தும் கணினிகளில் மேற் சொன்ன தகவல்களனைத்தும் பதிவாகி விட்டால் எமது அந்தரங்க விடயங்கள் பகிரங்கமாவதுடன் அது பல தீய விளைவுகளையும் உருவாக்கி விடும்.

எனவே பொது இடங்களில் உள்ள கணினிகளில் இணையத்தைப் பயன் படுத்துவதற்கான விசேட வசதியைத் தற்போதுள்ள அனைத்து பிரவுசர்களும் வழங்குகின்றன.

அந்த வசதியையே பிரைவேட் பிரவுஸிங் எனப்படுகிறது.

இந்தப் பிரைவேட் பிரவுஸிங் செய்வதற்கே incognito mode (மறை நிலைப் பயன் முறை) பயன் படுத்தப்படுகிறது.

இந்தப் பிரைவேட் பிரவுசிங்கில் குக்கிகள் எதுவும் பதியப்பட மாட்டாது.

அதே போன்று நாம் பார்த்த தளங்களை மற்றவர்கள் கண்டறியவும் முடியாது.

இந்தப் பிரைவேட் பிரவுஸிங் வசதியைப் பயன் படுத்தி பொது இடங்களில் உள்ள கணினிகளில் நிம்மதியாக இணையத்தில் உலாவலாம்.

நமது இணய பயன் பாட்டில் எந்தத் தடயத்தையும் அடுத்தவர்களால் கண்டறிய முடியாது.

கூகுல் குரோமில் பிரைவேட் பிரவுஸிங் செய்வதற்கு incognito விண்டோவினுள் நுழைய வெண்டும்,

அதற்குக் குரோம் பிரவுசர் விண்டோவின் வலது பக்க மூலையில் உள்ள மூன்று புள்ளி பட்டனில் கிளிக் செய்து வரும் மெனுவில் New incognito Window என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

Ctrl + Shift + N விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்தலாம்.

அப்போது ஒரு புதிய விண்டோ தோன்றும்.

ஃபயர்பாக்ஸ் பிரவுஸரில் பிரைவேட் பிரவுசிங் செய்ய மூன்று கோடு மெனுவில் New Private Window என்பதைத் தெரிவு செய்யுங்கள்.

Ctrl + Shift + P விசைகளையும் ஒரே நேரத்தில் அழுத்தலாம்.

கூடுதலாக மற்றுமொரு தகவலையும் சொல்லி வைக்கிறேன்.

கூகுல் குரோம் பிரவுசர் இன்காக்னிடோ மோடில் பயனர் தரவுகளைக் கண்காணிப்பதாக அண்மையில் குற்றச் சாட்டு எழுதுள்ளதுடன் கூகுல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை மறுபடி நீதிமன்றில் விசாரிக்கப்படவுள்ளார்

Leave a Comment

Write and Earn with Pazhagalaam