Visitors have accessed this post 640 times.

உங்களுக்கு தெரியுமா அறுகம்புல்லின் மருத்துவ நன்மைகள்? இதோ காணுவோம் மூலிகை மருத்துவத்தில்.

Visitors have accessed this post 640 times.

 

 

 

குறுகலான நீண்ட இலைகளையும் நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகை. தமிழகத்தினுன் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.

 

றுகம்புல்லின் மருத்துவக் குணங்கள்  ;

               1. கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி  50 மி.லி.  அளவாக 2 மணி நேரத்துக்கு ஒரு முறை குடித்து வந்தால் 

                 காது, 

                 மூக்கு, 

                 ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். 

                 வெப்பம் தணியும் மாத விலக்குச் சிக்கல் நீங்கும். 

 

 



 

               

               2. கணு நீக்கிய அறுகம்புல் 30 கிராம் வெண்ணை போல் அரைத்து சம அளவு வெண்ணை கலந்து 20 முதல் 40 நாள் வரை சாப்பிட 

               ✅  உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும்.

               ✅  அறிவு மிகுந்து முக வசீகம் உண்டாகும்.

 

                3. அறுகம்புல்  30 கிராம், கீழா நெல்லி 15 கிராம் இவற்றை மையாய்  அரைத்த்து தயிரில் கலக்கி காலையில் குடிக்க 

               ✅  வெள்ளை மேக அனல், 

               ✅   உடல் வறட்சி, 

               ✅   சிறுநீர் தாரையில் உள்ள புண்ணால் நீர் கடுப்பு,

               ✅   சிறுநீருடன் ரத்தபோதல் ஆகியவை தீரும்.

 



 

   

                 4. அறுகம்புல்  30 கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வர

                 ✅  இரத்த மூலம் குணமடையும். 

 

                  5. வேண்டிய அளவு அறுகம்புல் எடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தடவி சில மணிநேரம் கழித்து குளித்து வர 

                  ✅ சொறி சிரங்கு, 

                  ✅  அடங்காத தோல் னாய், 

                  ✅ வேர்க்குரு, 

                  ✅ தேமல், 

                  ✅ சேற்றுபுன், 

                  ✅ அரிப்பு, 

                   வேனல் கட்டி தீரும்.

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam