Visitors have accessed this post 709 times.

உடல்நலம்

Visitors have accessed this post 709 times.

உட்காராதே -“#குந்த” பழகிகொள்..!!

கழித்தலில் எந்த முறை சிறந்தது??

 

இன்று தமிழ்நாட்டில் எழுப்படும்

கட்டிடங்களில் “#குந்தும்முறை” கழிவறை இருக்கிறதோ இல்லையோ அமர்ந்து அசுத்தபடுத்தும் கழிவறை இல்லாமல் தமிழர்கள் வீடு கட்டுவதில்லை பெரும்பாலும்.

என்னடா னு கேட்டால் “FASHION”

என்கிறார்கள்.

 

அறிவியல் ரீதியாக நடந்திருக்கும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. மனிதன் தனது கழிவுகள் வெளியேற்றம் செய்யும் பொழுது அவன் அமர்ந்த முறையில் மேற்கத்திய கழிவறைகளில் உட்கார்ந்து போகும் முறை தவறானது. ஏனெனில் உடல்கழிவுகள் முழுமையாக  வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படுத்தும் மற்று பல நோய்களை ஏற்படுத்த முக்கிய காரணமாக் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

நாம் தான் இந்த சமுகத்தில் உயர்ந்தவன் என்று காட்ட கழிவறைகளை கூட மாற்றி

விடுகின்றனர். அதிலும் சிலர் இந்த

மேற்கத்திய கழிவறைகளை எவ்வாறு

உபயோகம் செய்வது தெரியாமல், கேட்பதற்கு வெட்குண்டு சிலர் கழிவறையில் உட்கார்ந்து போகமால், எப்படி நம்ம பாரம்பரிய கழிவுகளை அகற்ற குந்தி போவது மாதிரி அதன் மேல் உட்கார்ந்து போகின்றனர்.

 

மேற்கத்திய கழிவறை முறைகளை

பயன்படுத்தினால் சுகாதாரதிற்கு கேடு, அதிலும் அதை தவறாக பயன்படுத்தினால் உயிருக்கு கேடு…

 

மேலும், பழைய முறையில் அதாவது குந்தி போகும் முறையில், கழிவு எளிமையாக வெளியேறுகிறது, அதிகநேரம் ஆகாது. இது உடலுக்கு மிகவும் நல்லது..

 

ஆனால் இன்று வெஸ்டர்ன் டாய்லெட்டில் (உட்கார்ந்து கழிக்கும்முறை) பலமணி நேரம் உட்கார்ந்தாலும் முழுமையாக கழிவுகள் வெளியேறுவதில்லை, அதிகநேரம் உட்கார்ந்து பழகுவதால் குதம் கீழிறங்குவதால் மூலநோய் (piles) எளிதாக வர வாய்ப்புகள் உண்டு என்பதனை உணருங்கள்..

 

தற்பொழுது, உட்கார்ந்து செல்லும் முறையால் செல்போன் பயன்பாடுகள் அதிகமாகிப்போனதால் அதிக நேரம் உட்கார்ந்து நேரம் கடத்துவது உங்களின் உடல்நலம் சீர்கேடும் என்பதனை உணருங்கள்…

 

பழைய முறையில் செல்போன் உபயோகப்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது..

 

புதிதாக கட்டும் வீடுகளில் நாகரீகம் கருதி வெஸ்டர்ன் டாய்லெட் வைத்து கட்டினாலும் பழைய முறையில் தனியாக ஒன்றை கட்டிக்கொண்டு கழிவுகளை கழியுங்கள்… ஏனெனில் உடல்நலம் என்றும் உங்களின் கையில் என்பதனை மறவாதீர்கள்..

Leave a Comment

Write and Earn with Pazhagalaam