Visitors have accessed this post 693 times.

கேரட் செய்முறை விளக்கம்

Visitors have accessed this post 693 times.

கேரட் சாதம்

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

கேரட் கால் கிலோ

பாஸ்மதி ரைஸ்அரை கிலோ

பட்டை1 

கிராம்பு2 

ஏலக்காய்1

புதினாஒரு கைப்பிடி

பாதாம்4

முந்திரி4

காய்ந்த மிளகாய்3

நெய்ஒரு டீஸ்பூன்

கடுகுஒரு டீஸ்பூன்

எண்ணெய்தேவைக்கேற்ப

மல்லித்தழைஒரு கைப்பிடி

உப்புதேவைக்கேற்ப

தண்ணீர்தேவைக்கேற்ப

செய்முறை :

 

  முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 

  பின்னர; ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். 

 

  வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.

 

  பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். 

 

  பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொhpந்ததும் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும். 

 

  கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும். அரிசி மூழ்கும் அளவுக்கு சாறு இருந்தால் போதும், அதற்கேற்ப சாறெடுக்கவும்.

 

  பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும்.

 

  ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தலை தூவினால் கேரட் சாதம் ரெடி.

கேரட் பொரியல்

 

தேவையான பொருட்கள் :

 

பொருள் – அளவு

கேரட் அரை கிலோ 

தேங்காய் துருவல்அரை கப்

கடுகு 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன் 

பெருங்காயத் தூள் 1 சிட்டிகை

பச்சை மிளகாய் 2 (நறுக்கியது)

கறிவேப்பிலை ஒரு கொத்து

எண்ணெய் தேவைக்கேற்ப 

உப்பு தேவைக்கேற்ப 

செய்முறை :

 

  முதலில் கேரட்டை நீரில் கழுவி, துருவி அல்லது பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 

  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 

  பின்பு அதில் கேரட்டை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். 

 

  பிறகு தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி.

 

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை சாதம் மற்றும் ரசத்துடனும் வைத்து சாப்பிடலாம்.

 

 

 

நிறைய ரெசிப்பீஸ் உள்ளது கமெண்ட்ஸ் பண்ணுங்க நண்பர்களே

Leave a Comment

Write and Earn with Pazhagalaam