Visitors have accessed this post 662 times.

சளி என்றால் என்ன

Visitors have accessed this post 662 times.

  • சளி என்றால் என்ன? வந்தபிறகு என்ன செய்யலாம்?  

மனித உடல் அமைப்பு லட்சக்கணக்கான செல்களால் உருவானது..நல்ல தூய பிராணன்  நமது நுரையீரல் செல்லும் போது அது தனது கழிவுகளை சளியாக வெளியேறும் போது அதை தங்கு தடையின்றி வெளியே தள்ள நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்  

(முறை 1)

 1.சின்ன வெங்காயம், 2.தூதுவளை,3.முட்டைக்கோஸ் தலை,4.துளசி, 5.கற்பூரவள்ளி தலை,6.மிளகு இவை அனைத்தும் நமது அன்றாட உணவில் சேர்க்கும் போது நேரடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்து..உடலின் வெப்பத்தை ஏற்றி சளியை வெளியே தள்ளும்,வரட்டு இறும்பலாக இருந்தால் இனிப்பும் உப்பும் மண்ணீரலுக்கு  பற்றக்குறையே.. சளி இருந்தால் இனிப்பு மற்றும் உப்பின் அளவை குறைக்க கூடாது இதற்கு தேன்(சர்வ நிவாரணி) சாப்பிடலாம்(முறை 2). உடலில் எந்த தோற்று வந்தாலும் நமது உடலின் அமிலத்தன்மை(Ph value below 7) அதிகரிக்கும்..உடல் காரத்தன்மையுடன் (ph value above 7) இருந்தாலே நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்..இந்த அமிலத்தன்மை காரத்தன்மைக்கு மாற்ற(முறை3) இயற்கை வரபிரசாதம் எலுமிச்சை ஜீஸ் இதில் கருப்பு சக்கரை(try to avoid white sugar for better result)மற்றும் ஒரு சிட்டீகை உப்பு சேர்த்து குடிக்க வேண்டும் அதற்கு மாற்று பகல் நேரங்களில் கரும்பு ஜீஸ் குடிக்கலாம்..இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை குடிக்க வேண்டும்..முன்று நாட்கள் காலை மற்றும் இரவு மிளகு பால் (10மிளகை தட்டி போட்டு 1 Spoon கரும்பு சக்கரை மற்றும் தேவைக்கு மஞ்சள் சேர்த்து)குடிக்க வேண்டும் இது தொண்டை வலிக்கு சிறந்தமருந்து மற்றும்  கல்உப்பை சுடு தண்ணீரில் கலந்து காலை மாலை வாய் கொப்புளிக்கலாம்.. இந்த முறைகளில் ஏதாவது ஒன்றை கடைபிடித்து உங்கள் சளியை வெளியேற்றலாம்.

நுரையீரல் கழிவு வெளியேற்றம் தான் சளி என்று முந்தைய பதிவில் பார்த்தோம்..உடலில் செரிமானம் ஆகாத கழிவு வெளியேற்றம் மண்ணீரல் நுரையீரல் மூலமாக நடத்தும் நிகழ்விற்கு பெயர் சளி தான்..உடலில் நீரோட்டம் பிரதான ஒன்று நீரோட்டத்தின் தலைவர் மண்ணீரல்(Spleen). தனது நண்பன் கல்லீரல் ஜீரணம் என்னும் பணியை  செய்ய உதவுபவர் அவர் நண்பர் மண்ணீரல் தான்.ஜீரணம் நடைபெறும் போது உணவு ஜீரணித்தல் சரியாக நடக்காத போது உடல் கழிவுகளை நுரையீரல் மூலமாக வெளியேற்றப்படும் இந்த பணியை மண்ணீரல் செய்கிறது.

குழந்தைக்களுக்கு இது போன்று பெரும்பாலும் நடைபெறும் அடிக்கடி சளி பிடித்தல் என்பார்கள் காரணம் ஜீரணித்தல் (செரிமானம்)கெட்டதால் கழிவை நுரையீரல் மூலமாக வெளியேற்றுகிறது இதற்கு தான் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது.. மண்ணீரல் பலம் இல்லாமல் போவதாலே இந்த நிகழ்வு நடக்கிறது. நுரையீரல் தரும் பிராண சக்தி கல்லீரல் ஜீரணித்தல் மூலம் தரும் பிராண சக்தி இந்த இரண்டும்  சேர்ந்து உடல் உறுப்புகளுக்கு பிராண சக்தியை தருவது மண்ணீரல் செயல்களில் ஒன்று..பஞ்ச பூதங்களில் நிலம் வகையை சேர்ந்தது மண்ணீரல். இரத்ததில் உள்ள கழிவுகளை நீக்கவும் மலத்தில் கழிவுகளை வெளியேற்றம் செய்யும் பணியை செய்வது மண்ணீரல் வேலை..நீர் சக்தியை நம் தோலுக்கு அடியில் செமிக்கும் பணியை செய்கிறது.. நீர்சக்தி பிரிக்காத போது ஈரப்பதமாக மாறும் அதை Damness என்று கூறுவார்கள்..இது சளிக்கழிவாக மாறும்..நம் உண்ணும் நீராகாரம் மற்றும் நீர் செரிமானம் கெட்டால் நீர் தேக்கம் Edema வரும்.. இதை அனைத்தும் கையாளுபவர் நீரோட்டங்களின் மன்னன் மண்ணீரல் தான்.. தன் நண்பன் கல்லீரல் துணைக்கொண்டு நுரையீரல் இடம் சளிக்கழிவாக ஒப்படைத்து விடுவார்.. நம்மில் பலருக்கு சுயமாக முடிவு எடுக்கமுடியவில்லை, நினைவாற்றல் மற்றும் Concentration power இல்லையேன்றால் மண்ணீரல் பலம் இல்லை என்பது கூட காரணம்.. மண்ணீரல் இயற்கையாக குளிர்ச்சி உறுப்பு..சளிக்கு வைத்தியம் சென்ற பதிவில் கூறிய அனைத்தும் கடைபிடிக்கவும்.. மேலும் நுரையீரல் பலப்படுத்த நாடிசுத்தி தினமும் செய்ய வேண்டும்..  நீங்கள் தூங்கும் அறை காற்றோட்டம் உள்ளதாக இருக்க வேண்டும்..அதாவது பழைய காற்று வெளியே சென்று புதியக்காற்று உள்ளே வருகின்ற சூழலில் உறங்க வேண்டும்.. மின்விசிறி கீழே உறங்குவதை தவிர்க்கவும்.. 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam