Visitors have accessed this post 701 times.

சாபங்களும்.. நேரும் துயரங்களும்

Visitors have accessed this post 701 times.

  1. *சாபங்களும்.. நேரும் துயரங்களும்!*

 

1. பெண் சாபம்:

பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படக்கூடும். இந்த சாபத்தால் வம்சம் அழியும்.

2. பிரேத சாபம்:

இறந்த மனிதரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலை தாண்டுவது, இறுதி சடங்கு காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதி மறுப்பது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3. பிரம்ம சாபம்:

தமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அந்த வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அந்த வித்தையை மறைப்பது பிரம்ம சாபத்துக்கு வழிவகுக்கும். இதனால் படிப்பு தடைபடும்.

4. சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்படும்.

5. பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை, தாத்தா-பாட்டி போன்றவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.

6. கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் சுரப்பு நின்ற பசுவை இறைச்சிக்கு வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7. பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை காலால் உதைப்பதும், பாழ்படுத்து வதும், பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8. கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் படுத்துவதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் நேரும். இந்த சாபத்தால் சொந்த நிலத்தில் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9. விருட்ச சாபம்:

மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீட்டு மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10. தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11. ரிஷி சாபம்:

கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12. முனி சாபம்:

எல்லை தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13. குலதெய்வ சாபம்:

நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை வழிபடாமல் இருப்பதால் இந்த சாபம் நேரும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam