Visitors have accessed this post 704 times.

சிக்கன் மஞ்சூரியன்

Visitors have accessed this post 704 times.

சிக்கன் மஞ்சூரியன்:

தேவையான பொருட்கள்:

மைதா மாவு: 115 கிராம்

பேக்கிங் பவுடர்: 1 டீஸ்பூன்

மிளகு தூள்: 1/2 டீஸ்பூன்

கார்ன்பிளவர்: 50 கிராம்

வெங்காயம்: 30 கிராம்

பூண்டு: 50 கிராம்

மிளகாய்: 75கிராம்

குடை மிளகாய்: 30 கிராம்

சோயா சாஸ்: 1 டீஸ்பூன்

வினிகர்: 1/4 டீஸ்பூன்

முட்டை: 1

 அஜினோமோட்டோ: 1/4 தேக்கரண்டி

உப்பு, தண்ணீர்: தேவையான அளவு

ஸ்பிரிங் ஆனியன் : பொடியாக நறுக்கியது சிறிதளவு

செய்முறை:

   மேலே கொடுக்கப்பட்ட முட்டை,மாவுகளை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொண்டு அதில் கறி துண்டுகளை சேர்த்து பிரட்டி காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் 2 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், பூண்டு, குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சோயா சாஸ், வினிகர், அஜினோமோட்டோ,உப்பு சேர்த்து கலந்து,1 டீஸ்பூன் கார்ன்பிளவரை கரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்

சிறிது கட்டியான பின் தனியாக பொரித்த சிக்கன் துண்டுளை போட்டு கலந்து மல்லி இலை, ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி.

குறிப்பு:

    பிராய்லர் கோழி தான் உபயோகிக்க வேண்டும். மற்ற கோழியாக இருந்தால் கறியை சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam