Visitors have accessed this post 949 times.

தோல்வியே வெற்றியின் ஏணிப்படி

Visitors have accessed this post 949 times.

மனிதனது வாழ்க்கையில் அவனது முயற்சிகளுக்கும் தேடல்களுக்கும் ஒரு முடிவு உள்ளது. அந்த முடிவு வெற்றியாகவும் இருக்கலாம் தோல்வியாகவும் இருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் அதனை அடையும் போது ஒருவர் அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

வெற்றி என்பது மனிதனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் இருப்பினும் அவ்வாறான மகிழ்ச்சியை, கவலையை எவ்வாறு அணுக வேண்டும் என்ற விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டும். மனிதனது முயற்சியில் சில சமயங்களில் தோல்வி ஏற்படக்கூடும் தோல்வி ஏற்பட்டால் தான் எம்மில் இருக்கும் பிழைகளை இனங்கண்டு, அவற்றைத் திருத்திக் கொள்ள முடியும். ஆகவே தோல்வி டைய நேரிட்டால் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக நாம் முயற்சிக்க வேண்டும்.

தோல்விகளை சந்திக்கின்ற போது, ஒரு போதும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது. ஏனெனில் நமக்கு ஏற்படும் சிறுசிறு தோல்விகள் நாமடையவிருக்கும் பெரும் வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.

கல்வியில் தோல்வி என்பது தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றது. எனினும் ஒவ்வொரு தோல்வியும்  அனுபவத்தையும் விடாமுயற்சிக்காஊக்கத்தையும் எம்மிடையே ஏற்படுத்த வேண்டும். அந்த தோல்வியை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். இன்னும் ஒரு தடவை தோல்வி ஏற்படாமலிருக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சிந்தித்து செயலாற்றுங்கள்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்.

இவ்வுலகில் உனக்கு வேண்டியதெல்லாம் அறியாமையும் தன்னம்பிக்கையும், பிறகு வெற்றி நிச்சயம் உனக்கே.

இதுவரை வெற்றி அடையாதவர்கள் வெற்றியை மிக இனிமையானதாக நினைக்கிறார்கள்.

வெற்றியைப் போல் வெற்றி பெறுவது வேறு எதுவும் இல்லை.

மற்றவர்கள் தன் மீது விழுந்த கற்களைக் கொண்டு அஸ்திவாரம் போடுபவன் வெற்றி பெறும் மனிதன் ஆவான்.

 நாம் செய்யும் எந்த ஒரு விடயத்திலும் முழு வெற்றி பெற வேண்டுமானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வியோடு வாழ்க்கை நியதி தோல்வியை சந்திக்காமல் நான் வெற்றியை சந்தித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின்  அதிசயம் ஆகும். வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப் பெற அவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும், பட்ட அவமானம் ஏராளமாக இருக்கும்.

பட்ட துன்பங்களும் அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி. உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கையை கூர்ந்து படித்து பாருங்கள். இவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை முறை தோத்தார்கள் என்பதை பட்டியலிடுங்கள்.

வாழ்க்கையில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது இப்போது உங்களுக்குப் புரியும். தோல்வியை கண்டு பயந்து ஓடுபவர்கள் தோல்வியானது தொடர்ந்து துரத்தி சென்று அழித்துவிடும். தோல்விகளை துச்சமென நினைத்து அதை எதிர்த்து போராடுங்கள். அவன் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான்.

தோல்வி நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். வெற்றி என்னும் முகவரியை அடைய பயன்படுத்தும் பாதை தோல்வி. இந்த உலகத்தில் தோல்வியை சந்திக்காதவர்கள் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது.

எதற்கும் கவலைப்படாமல் நம் வாழ்க்கையில் வெற்றி பெற போராட வேண்டும். அன்று தோமஸ் அல்வா எடிசன் பலமுறை தோல்வி அடைந்து விட்டது, என்று நினைத்திருந்தால் இன்று நமக்கு மின்சாரம் கிடைத்து இருக்காது. எனவே தோல்வியே வெற்றிக்கு முதல் படி என நினைத்து வாழ்வோம். வாழ முயற்சிப்போம்.

நாம் அனைவரும் தோல்விக்குப் பயந்தே எதையும் செய்கிறோம். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தோல்வியே மிக முக்கியமான அம்சம். தோல்வியே வெற்றியின் முதல் படி அல்லவா. உண்மையில் தோல்வியால் நமக்கு நன்மைகளே அதிகம். தோல்வியால் என்ன நன்மைகளும் சிறப்பு இருக்க முடியும் என்கிறீர்களா?

மேலும் ஜே கே ரவுலிங் கூறுகையில் உங்களது மதிப்பெண்களும் தகுதிகளும் உங்கள் வாழ்க்கை அல்ல. ஆனால் இவை தான் உங்கள் வாழ்க்கை என்று கூறும் பலரை நீங்கள் சந்திக்க நேரும். அவர்களிடமிருந்து ஒதுங்கி இருப்பதே நல்லது, என்று கூறுகிறார். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் உங்கள் சாதனைப் பட்டியலில் இல்லை.

தோல்வியின் அர்த்தம், நாம் ஒரு விஷயத்தில் மோசமாக உள்ளோம் என்பதே. நாம் வெற்றி பெற இன்னும் பல வழிகளை முயற்சி செய்ய வேண்டும்.

பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தோல்வியே இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், உண்மையில் அது சாத்தியமில்லை. நம் அனைவரின் கட்டுப்பாட்டையும் தாண்டி கடினமானது வாழ்க்கை. வாழ்க்கையில் சில தோல்விகள் தவிர்க்க முடியாதவை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக வாழ்ந்தால் மட்டுமே தோல்வியை தவிர்க்கலாம். ஆனால் அப்படி தோல்விக்கு பயந்து வாழும் வாழ்க்கையே தோல்வியானது. தோல்வி தானே ஆகையால் தோல்வியே கூடாது என்பதற்கு பதில் தோல்வியை எப்படி சமாளிப்பது என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்வியை கையாளத் தெரியாத மாணவர்கள் தோல்வி அடைவோம் என்ற பயத்தில் முயற்சி செய்வதையே தவிக்கிறார்கள். தப்பு எங்கே என்பதை அறியும் முன்பே முயற்சியை கைவிடுகிறார்கள்.

உண்மையில் நாம் மாணவ-மாணவிகளை தோல்விக்கு தயார்படுத்தும் போது நாம் அவர்களுக்கு கெடுதலையே செய்கிறோம். அவர்கள் எப்படி தோல்வியை எதிர்த்து முன்னோக்கிச் செல்வது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும். தோல்வியை நாம் சாதாரணமாகப் பார்த்தால் அது மேலும் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள உதவும்.

நாம் எங்கும் கற்க முடியாததை தோல்வியே நமக்குக் கற்றுத் தரும். நம்முடைய வலிமையும் மன உறுதியையும் தோல்வியின் போது நமக்கு முழுமையாக தெரியும். வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்றுக்கொள்வது. முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம். ஆகவே தோல்வியை பலவீனமாகக் கருதினால் நமக்கு நன்மை கிட்டும்.

முடியும் என்று முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று சொல்வார்கள். முடியாதது என்று எண்ணும் கடினமான காரியங்களைக் கூட திரும்ப திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். எந்த செயலை செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடியும். எந்த காரியம் தொடங்கும் போதும் மலைப்பாகத்தான் தோன்றும்.

 ஏன் குழந்தைகள் கூட நடப்பதற்கு முன்பு விழுந்து எழுந்துதான் நடக்கின்றனர். கீழே விழுகின்றனர் என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்காது. புத்தகங்களை தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்கள் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்து விட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கைமண் அளவுதான் என்று புத்தகங்களை படிக்க படிக்க புரியும்.

பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியே அவரை உலக அறிஞர் ஆக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக மேடம் கியூரி, மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அஹிம்சைக் கொள்கை தானே நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தது. உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகின்றது.

அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள் சாதனை படைத்தார்கள். இந்த உலகில் முயற்சியை விட அவர் ஒன்றும் சிறந்த இடத்தைப் பெற்று விடமுடியாது. திறமை மேதைதனம் கல்வி இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும் அதை அடைய வேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழி காட்டும். சர்வ வல்லமை படைத்த திருவள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார். முயற்சி திருவினை ஆக்கும். முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.

நமது வாழ்க்கையில் ஆயிரம் தடைகள் வருகின்ற போதும் நாம் இயற்கையோடு போராடுகின்ற அவர்களே வெற்றி அடைவர் என்பது திண்ணமாகும். நாம் வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் வெற்றி அடைகின்றோம், தோல்வி அடைகின்றோம். ஆனால் முயற்சியினை ஒருபோதும் கைவிட கூடாது.

கடலின் அலைகள், பூமியின் சுழற்சி, சூரியனின் உதயம், எப்போதும் மாறுவதில்லை. அது போல் நாமும் முயற்சியை கை விடாது போராடினால் ஒரு நாள் வெற்றி பெற முடியும். உழைக்காமல் யாரும் வென்றதாக சரித்திரமே கிடையாது.

ஆகவே தான் மனதை கட்டுப்படுத்தி, தியாக உணர்வோடு இலக்கை நோக்கி ஓடினால் நிச்சயம் ஓர் நாள் வெற்றி கிட்டும் என்பதில்  ஐயமில்லை. “விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.” முயலுங்கள் ஒரு நாள் வானம் வசப்படும்.

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam