Visitors have accessed this post 672 times.

நம்பிக்கை

Visitors have accessed this post 672 times.

ஒரு அழகான கிராமத்தில் வசித்து வரும் அழகான குடும்பம், அந்த குடும்பத்தில் தாத்தா பாட்டி இவர்களின் மகன் கன்னப்பன் இவரின் மனைவி கோகிலா மற்றும் மூன்று மகன்களும் இரு மகள்களும் உள்ளனர் முதல் மகன் ஆசிரியராகவும் இரண்டாவது மகன் பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டார் மூன்றாவது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மகள்கள் இருவரும் படிப்பினை முடித்து விட்டு ஒரு மகள் படிப்பிற்கேற்ற வேலையயும் மற்றொரு மகள் திறமைக்கேற்ற வேலையையும் செய்து வருகின்றார்கள் ஒரு நாள் கண்ணப்பனை அவரது உறவினர் சந்திக்கும் பொழுது அந்த உறவினர் கண்ணப்பனிடம் மகன்களும் மகள்களும் என்ன செய்கின்றார்கள் என்று கேட்டார் அப்பொழுது கண்ணப்பன் முதல் மகன் ஆசிரியராகவும்  ஒன்றாவது மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து  வருகின்றார்கள் என் மகள்களும் படிப்பிற்கேற்ற வேலையை செய்து வருகின்றார்கள் அப்பொழுது அந்த உறவினர் முதல் மகனுக்கு திருமணம் செய்து விட்டீர்கள் பின்பு ஏன் இரண்டாவது மகனுக்கு இன்னும் திருமணம் செய்யவில்லை என்று அந்த உறவினர் கேட்டார் கண்ணனிடம் அப்போது கண்ணப்பன் என் இரண்டாவது மகன் பத்தாம் வகுப்பு தான் படித்து இருக்கிறான் என்று உறவினரிடம் கூறினார் அவனைத் திருமணம் செய்ய எந்தப் பெண்களும் முன்வரவில்லை அப்பொழுது அந்த உறவினர் என் மகளை உன் மகனுக்கு திருமணம் செய்ய எனக்கு சம்மதம் அதற்கு அந்த கண்ணப்பன் என் மகன் தான் படிக்கவில்லை என்று சொல்கிறேனே பின்பு எந்த நம்பிக்கையில் உங்கள் மகளை என் மகனுக்கு திருமணம் செய்ய விரும்புகிறீர்கள் அதற்கு அந்த உறவினர் உன் இரு மகன்கள் படித்திருந்தாலும் அவர்கள் இருவரை விட இவர்தான் என் மகளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு அவர் நினைத்தபடி இவர்கள் இருவருக்கும் திருமணமும் நல்லபடியாக நடந்தது அந்த உறவினர் தனது மருமகனுக்கு ஒரு மளிகை கடையை திறந்து வைத்தார் அந்தக் கடையை கண்ணப்பனின்  இரண்டாவது மகன் ஆகிய இரண்டாவது மகன் நல்லபடியாக நடத்தி வருகின்றார் அந்த மருமகன் சிறு கடையாக இருந்ததை பெரிய மளிகை கடை யாக மாற்றி தன் மீது தன் மாமனார் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி உள்ளார் அப்பொழுது அந்த உறவினர் கண்ணப்பனை பார்க்க இல்லத்திற்கு செல்கிறார் கண்ணப்பனை பார்த்து என் மருமகன் மீது நான் வைத்த நம்பிக்கை பொய்யாகவில்லை என் மகளை நான் நினைத்ததைவிட உன் மகன் நன்றாகவே பார்த்து கொள்கின்றார் நான் உன் மகன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகவில்லை  

        நம்பிக்கை என்பது படித்தவன் மீது மட்டுமல்ல படிப்பறிவு இல்லாத நபரிடம் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும் 

           இதற்கு இந்த கதையில் வரும் கண்ணப்பனின் இரண்டாவது மகனே எடுத்துக்காட்டாக அமையும் 

             “காகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்று அக்காலத்தில் நம் முன்னோர்களின் நம்பிக்கை” 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam