Visitors have accessed this post 582 times.

நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்

Visitors have accessed this post 582 times.

சுமார் 20 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருகிறார் நயன்தாரா. சினிமா கெரியர் சக்சஸ்புல்லாக அமைந்த இவருக்கு, பர்சனல் வாழ்க்கையில் சில தோல்விகளை சந்தித்துள்ளார். குறிப்பாக 2 முறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார் நயன்.

 

நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் காதல் வயப்பட்டார் நடிகை நயன்தாரா. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்கள் திருமணம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக நடந்ததாகவும், திருமணம் குறித்து அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிப்போம் எனவும் நயன்தாரா தெரிவித்திருந்தார். 

 

  1. இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாம். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமண ஏற்படுகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam