Visitors have accessed this post 264 times.

நானே வருவேன் – பகுதி 18

Visitors have accessed this post 264 times.

 பாகம் 18

 

அதிகாலையில் இருந்தே செல்வராகவனுடைய இல்லத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய ஒரே மகனின் நிச்சயத்திற்காக உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தாள் செல்வி.

உறவினர்கள் சிலரும் நண்பர்களில் பலரும் நேற்று இரவே வீட்டை நிரப்பி மகிழ்ச்சியில் கொண்டாடிக் கலைத்து உறங்கி எழுந்து மீண்டும் கொண்டாட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க மீதி இருந்த உற்றார் உறவினர்களும் இப்போது வரத் தொடங்கி இருந்தனர்.

தன் வீட்டு சுபகாரியத்திற்கு வீதிக்கும் சேர்த்து பந்தல் போட்டிருந்தார் செல்வராகவன். நேரம் செல்லச் செல்ல அந்த இடமே திருவிழா போன்று களை கட்டியது.

கொண்டாட்டத்தின் மத்தியில் இருக்க வேண்டியவனோ இரவு தாமதமாக தூங்கியதன் விளைவாக மெத்தையின் மையத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். வந்தவர்கள் அனைவரையும் நன்றாக கவனிக்க வேண்டும் என்ற அக்கறையில் செல்வி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு வந்த உறவினர்களை கவனிப்பதற்காக ராதாவுடன் சேர்த்து மேலும் இரண்டு பெண்களையும், இரண்டு ஆண்களையும் கூடுதலாக வேலைக்கு அமர்த்தி பரபரப்பாக அவர்களிடம் வேலைகளை சொல்லிக் கொண்டிருந்தாள்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் வீரராகவனின் நெருங்கிய நண்பன் ஆதர்ஷ் தன்னுடைய உயர்ரக மகிழுந்தில் ஒரு துடிப்புடன் வந்து இறங்கினான். கெத்தாக இறங்கி மாஸாக நடந்துவரும் அவனை அங்கு கூடி இருக்கும் அனைவரும் இமைக்க மறந்து பார்க்கத் தொடங்கினர்.

அவன் நேராக செல்வியிடம் வந்து “அம்மா! ” என்று பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள திடுக்கிட்டு திரும்பிப் பார்த்த அவள் ஆதர்ஷின் முகத்தைக் கண்டதும் முகம்மலர்ந்து “ஓ ஃபிரண்டோட நிச்சயத்துக்கு வர்ர நேரமாப்பா இது? ” என்று அதட்டலாக கேட்க “சாரிமா ஆபீஸ்ல ஒரு முக்கியமான ஒர்க் இருந்துச்சு முடிச்சிட்டு வர்றதுக்கு கொஞ்சோ லேட் ஆயிடுச்சு” என்று தன் காதை பிடித்துக் கொண்டு சிறுபிள்ளை போல் மன்னிப்பு கேட்டான் அவன்.

“இன்னூ நீ கொஞ்சங் கூட மாறவே இல்ல” என்று அவனைப் பார்த்து செல்வி சிரிக்க அவனும் சிரித்து “வீர் எங்க மா ரெடி ஆயிட்டானா? ” ,  “ஓ ஃபிரண்டு ஒன்ன மாதிரி தான இருப்பா, நடுராத்திரி வரைக்கூ ஆபீஸ் வேலயப் பாத்துட்டு இன்னூ எந்திரிக்காம டயர்டுல தூங்கிட்டு இருக்கா” .

“சரிமா நா போய் அவன பாக்குறே” , “சீக்கிரமா போய் அவன எழுப்பி ரெடி பண்ணி கூட்டிட்டு வா” ,  “சரிமா” என சிரித்துக் கொண்டே மாடிப்படிகளில் ஏறினான் அவன்.

வீரராகவனின் அறைக்கதவு பலமாக தட்டப்பட்டுக் கொண்டிருக்க இந்த அரவம் கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் விழித்து அருகில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். அதில் மணி 10:30 என்று காட்ட வேகமாக எழுந்தவன். இன்னும் தட்டப்பட்டுக் கொண்டிருந்த கதவைத் திறந்தான்.

இரண்டு வருடம் கழித்து தன் நண்பனை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் அவனை கட்டித் தழுவிக் கொண்டான் ஆதர்ஷ். தூக்க கலக்கத்தில் இருந்தவனுக்கு இந்தத் தழுவல் தன்னுடைய நண்பன் ஆதர்ஷுடையது என்பதை அவனுடைய மூளை உணர்ந்த அரைகுறை உறக்கம் சட்டென கலைந்தது.

சில வினாடிகளுக்குப் பிறகு அவனை விடுவித்த ஆதர்ஷ் “ரெண்டு வருஷத்துல ஆளே மாறிட்ட நண்பா ” ,  “நா எங்கடா மாறிருக்கே நீ தாண்டா ஃபிரெஞ்சு தாடியெல்லா வச்சு வித்யாசமா வந்து நிக்கிற” என தன் நண்பனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் வீரராகவன்.

“நிச்சயதார்தத்தன்னக்கி லேட்டா எந்திரிச்சுட்டு என்ன நக்கல் பண்ணிட்டு இருக்கியா நீ, கீழ அம்மா ரொம்ப டென்ஷனா இருக்காங்க சீக்கிரமா கெளம்பு” என்று தன் நண்பனை குளியலறைக்குள் தள்ளியவன் தன்னுடைய அலைபேசியை எடுத்து யாருடனோ பேசத் தொடங்கினான்.

குளித்துவிட்டு வெளியே வந்த வீரராகவன் ஆதர்ஷ் சாளரத்தின் அருகில் நின்று யாருடனோ மெய் மறந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான். அமைதியாக அவன் அருகே வந்தவன் அவன் காதில் இருந்தா அலைபேசியை பிடுங்கி தன் காதில் வைத்தான். “நா ஒன்ன எவ்ளோ மிஸ் பண்றே தெரியுமா? ” என்று மறு முனையில் ஒரு பெண்ணின் குரல் சினுங்கிக் கொண்டிருக்க தன் நண்பனை முறைத்து அவன் கையில் அலைபேசியை கொடுத்து விட்டுச் சென்றான். தன் நண்பனின் செய்கையை பார்த்து சிரித்த ஆதர்ஷ் மேற்கொண்டு அந்த பெண்ணிடம் பேசத் தொடங்கினான்.

சில நிமிடங்கள் பேசிவிட்டு வீரராகவனை திரும்பிப் பார்த்தவன். “என்னடா! கேஷுவலா டிரஸ் பண்ணி இருக்க” என்று அதிர்ச்சியாய் கேட்க “ஃபங்க்ஷன் ஈவினிங் தான்டா, யார் அந்த பொண்ணு? யாழினி அம்மாவுக்கு இந்த விஷயோ தெரியுமா? ” ,  “தெரியாதுடா நீ தா அம்மாகிட்ட பேசி எப்படியாவது அங்கள கன்வென்ஸ் பண்ணனூ” .

“அப்ப நீ என்னோட நிச்சயத்துக்கு  வரல ஓ நிச்சயத்துக்கு அம்மா கிட்ட சம்மதோ வாங்குறதுக்கு ஹெல்ப் கேட்டு வந்துருக்க” ,  “என்னடா இப்படி சொல்லிட்ட? ஒனக்கு நல்லது நடக்கும் போது உன்னோட நண்பன் எனக்கூ ஒரு நல்லது நடக்கனும்னு நீ நெனைக்க மாட்டியா நண்பா? சோ ஷேட்! ” ,  “சரி சரி ரொம்ப சீன் போடாத, வா மொதல்ல கீழ போய் சாப்டலா எனக்கு ரொம்ப பசிக்குது” .

நண்பர்கள் இருவரும் கீழே இறங்கி வர அவர்களை வயதான பெண்கள் வட்டாரம் சூழ்ந்து கொண்டது. ஆளாளுக்கு வீரராகவனின் கையை பிடித்துக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருக்க ஒரு கிழவி ஆதர்ஷின் கன்னத்தைப் பிடித்து “என்னப்பா ஒனக்கு தாடி வளரலன்னு பென்சில்ல வரஞ்சு இருக்கியா? ” என்று கேட்க ‘இந்தக் கெழவிக்கு நக்கல பாத்தியா?’ என்று மனதுக்குள் திட்டிய ஆதர்ஷ் அந்தக் கிழவியை முறைக்க வீரராகவன் சிரிக்க ஆரம்பித்தான்.

வீரராகவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாக வாசலில் வந்து நின்றவன் “ஏன்டா அந்தக் கெழவி என்ன கிண்டல் பண்ணிட்டு இருக்கு நீ என்னடான்னா சிரிச்சுட்ருக்க” , “கோவப்படாதடா நீ வச்சிருக்கறது ஸ்டைல் தாடீன்னு தெரியுமா அதுக்கு? அது ஏதோ ஐப்ரோ பென்சில்ல வரஞ்சுருப்பன்னு நெனச்சு கேட்ருக்கு” என்று கூறிக்கொண்டே அவன் சிரிக்க “அது பென்சில்னு மட்டுந்தா சொல்லுச்சு நீ என்னடான்னா ஐப்ரோ பென்சில்னு என்ன கூடக்கொஞ்சோ கலாய்க்கிறியா? ” என்று செல்லமாக நண்பனின்  தோள்பட்டையில் இரண்டு அடிகளைக் கொடுத்தான்.

அப்போது அங்கே வந்த செல்வராகவன் “ஆதர்ஷ்! எப்படி டா இருக்க? ” ,  “நல்லா இருக்கே பா” ,  “எதுக்கு ரெண்டு பேரூ வாசல்ல நின்னு சின்ன பிள்ள மாதிரி சண்ட போட்டுட்டு இருக்கீங்க” என்று இருவரின் புஜத்திலும் தன்னுடைய இரண்டு கைகளை படர விட்டு அவர்களை உள்ளே அழைத்து வந்தார்.

“ஃபங்க்ஷன் முடியிற வரைக்கூ இவே எங்கேயு போகக்கூடாது அதுக்கு நீதா பொறுப்பு” என்று ஆதர்ஷைப் பார்த்து அவர் கூற “ஏம்பா? ” என்று தந்தையை ஏறிட்ட வீரராகவனை கண்டு கொள்ளாமல் “அதெல்லா நா பாத்துக்குறே அங்கிள்” என்று ஆதர்ஷ் பதில் கொடுத்தான்.

“சரி நீ சாப்டியா?” , “இன்னூ நானூ சாப்பில்ல இவனூ சாப்பில்ல அங்கிள்” , “இன்னூ ரெண்டு பேரூ சாப்டாம என்ன பண்றீங்க? ஏய் செல்வி! ” ,  “என்னங்க?” ,  “பிள்ளைங்க ரெண்டு பேத்துக்கு சாப்பாடு கொடுக்காம என்ன பண்ணீட்டு இருக்க” , “இல்லங்க நா வந்தவங்கள கவனிச்சுட்ருந்தே” ,  “அதுக்கு தா வேலக்காரங்க இருக்காங்கல்ல போ போய் மொதல்ல பிள்ளைங்கள கூட்டிட்டு போய் சாப்பாடு குடு” ,  “சரிங்க” என்று செல்வி முன்னாள் செல்ல அவளை பின் தொடர்ந்த இருவரையும் சாப்பாட்டு மேசையின் நாற்காலியில் அமர வைத்து உணவை பரிமாறினாள் செல்வி.

“ரெண்டு பேரூ ஒழுங்கா எடுத்து வச்சு சாப்பிடுங்க நா போய் வந்தவங்கள பாக்குறே” என்று செல்வி அந்த இடத்தை விட்டு செல்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த வீரராகவன் ஆதர்ஷை நிமிர்ந்து பார்த்தான். அவனைப் பார்த்தவுடன் பாட்டி கூறியது நினைவுக்கு வர சிரிக்க ஆரம்பித்தான். இவன் ஏன் சிரிக்கிறான் என அவனை ஏறிட்ட ஆதர்ஷ் அவனுடைய கேலிப் புன்னகையை பார்த்து “போதும்டா சிரிக்கிறத நிறுத்திட்டு சாப்டு” என்று உணவில் கவனத்தை செலுத்தினான்.

“ஈவினிங் ஒனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு” , “என்ன வேலடா யாரையாவது மண்டபத்துக்கு பிக்கப் பண்ணிட்டு வரணுமா? ” ,  “ஆமா, ஆனா மண்டபத்துக்கு இல்ல நா சொல்ற எடத்ல கொண்டு போய் அந்த பொண்ண விட்ரு” , ” எது பொண்ணா! ” என்று ஆச்சரியமாய் அவனை திரும்பி பார்த்த ஆதர்ஷிடம் “நா ஏற்கனவே ஓ கிட்ட பேசுனேன்ல அந்த பொண்ணு தா” ,  “ஓ அந்தப் பொண்ணா” என்று அமைதியானான் ஆதர்ஷ்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam