Visitors have accessed this post 680 times.

நூலகம்

Visitors have accessed this post 680 times.

ஒவ்வொரு ஊரிலும் கோவில் மற்றும் பள்ளிக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டியது நூலகமே ஆகும் . ஒவ்வொரு கிராமத்திலும் அரசு இலவச நூலகத்தை நிறுவியுள்ளது .நமக்கு பயனுள்ள புத்தகங்கள் மட்டும் அல்லாது பொழுதுபோக்கு சம்பந்தமான புத்தகங்களும் நூலகங்களில் கிடைக்கிறது. கல்வி அறிவை பெற நகரங்களில் உள்ள புத்தக அங்காடிக்கு சென்று பணத்தை செலவு செய்ய இயலாத கிராமப்புற மாணவர்களுக்கு பொது நூலகம் ஒரு வரப்பிரசாம் ஆகும்

நூலகத்தின் முக்கியத்துவம்

Noolagam Katturai in Tamil

அறிவை தேடும் ஒவ்வொருவரும் புதிய புதிய புத்தகங்களை வாங்கும் செல்வந்தர்களாக இருப்பதில்லை , வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும் புத்தகத்தை நம்மால் வாங்க முடிவதில்லை.இது போன்ற நேரங்களில் நூலகங்கள் நமக்கு பயன்தரக்கூடியதாக இருக்கின்றன .ஒரு பாடம் அல்லது பிரிவில் இன்னும் எத்தனை புத்தகங்கள் உள்ளன அல்லது புதிதாக என்ன புத்தகம் வந்துள்ளது என்று தெரியாத ஒருவர் நூலகம் சென்று பார்வையிடும்போது அவருக்கு பல புதிய அல்லது முக்கியமான புத்தகம் அவருக்கு கிடைக்கிறது.

அரசு நடத்தும் நூலகம் அல்லது சிறு பொருட்செலவில் அதிக பயன்தர கூடிய கட்டணம் வசூலிக்கும் நூலகளும் இயங்கி வருகின்றன ,அவற்றில் அதிக மதிப்புள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன.அவற்றில் எண்ணிக்கையில் அதிகமான பிரிவுகளில் புத்தகங்கள் கிடைக்கின்றன.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam