Visitors have accessed this post 744 times.

பால கங்காதர திலகர்

Visitors have accessed this post 744 times.

  1. “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என முழக்கமிட்டவர். முதல் முதலில் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே தூண்டியவர். லால்- பால்- பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கிய தலைவர்களில் ஒருவர். ரத்தினகிரி பெற்ற ரத்தினம் மகாகணபதி விழா எடுத்த மகாராஷ்டிரம் தந்த பாரதத் தாயின் தவப்புதல்வன். மக்களால் “லோகமான்ய ” என்றழைக்கப்பட்ட லோகமான்ய பாலகங்காதர திலகர் ஜூலை மாதம் 23ஆம் நாள் 1856 ஆம் ஆண்டு கங்காதர் ராமச்சந்திர திலக், பார்வதி பாய் இணையருக்கு மகனாகப் பிறந்தார். திலகர் தன்னுடைய பள்ளிப்படிப்பை பூனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் தொடங்கினார் . கணிதத்திலும் , சமஸ்கிருதத்திலும் சிறந்து விளங்கிய இவர் “டெக்கான் கல்லூரியில்” சேர்ந்து கல்வி கற்று , 1877 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். சட்டம் படிக்க முடிவு செய்தவரை , அவருடைய முதல்வரும், பேராசிரியரும் கணிதத்தில் சிறப்பாக உள்ளாய் நீ அதில் சிறப்பு பாடமாக எடுத்துப் படித்து கணித ஆசிரியராக ஆகலாம் என்றனர். அதற்கு திலகர் “என்னுடைய நாடு அடிமைப்பட்டுக் துன்புற்று கிடக்கிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவோர் அடிக்கடி கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர் . அவர்களை காப்பாற்ற வேண்டும் அத்தகைய தேசப்பற்று மிகுந்த வழக்கறிஞர்களை என் நாடு எதிர்பார்க்கிறது. எனவே நான் சட்டம் படிக்க விரும்புகிறேன்” என்றார் அதன்படி செய்தும் காட்டினார்.  1881ஆம் ஆண்டு திலகர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து “கேசரி” என்னும் “மராத்தி”மொழி பத்திரிகையும் மற்றும் “மராட்டா” என்னும் ஆங்கில மொழி பத்திரிகையும் தொடங்கி மக்களின் நிலை குறித்தும் சுதந்திர விழிப்புணர்வை ஊட்டும் விதமாக பல கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஆங்கில அடக்குமுறை மற்றும் சுரண்டல்களை பற்றியும் எழுதினார். இதனால் , ஆங்கில அரசால் கைது செய்யப்பட்டார் . இந்த நாட்களில் சிறைச்சாலையை தவச்சாலையாக்கி, ‘கீதா ரகசியம்’ என்ற நூலை நமக்களித்தார் திலகர். 1885ஆம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார் . 1896ஆம் ஆண்டு மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டதுு.  1897ல் பிளேக் நோய் பூனாவில் மிகவும் தீவிரமாக பரவியது . சிகிச்சைக்காக பல போராட்டங்களில் ஈடுபட்டும் பலனில்லாமல் , அவரே சுகாதார நிலையங்களை திறந்து மக்கள் துயர் துடைத்தார் . ஏற்கனவே நலிவடைந்திருந்த அவர் மேலும் நலிவுற்று 16.6.914 அன்று விடுதலை அடைந்தார் . 1920-ஆம் ஆண்டு நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடைசிவரை தான் கொண்ட லட்சிய வேட்கை மாறாத திலகர் இறைவனடி (1920, ஆகஸ்ட் 1) சேர்ந்தார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam