Visitors have accessed this post 706 times.

பித்தப்பை கற்கள்

Visitors have accessed this post 706 times.

பித்தப்பை கற்கள் ( gall bladder

stone )

பித்த நீர் சுரப்பு :

நமது உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000 to 1500 மில்லி லிட்டர் வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. அதில் 97% நீரும் 1 % பித்த நிறமிகளும், 1 – 2 % பித்த உறுப்புகளும் உள்ளன. 

கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன் சிறுகுடலை வந்து சேருகிறது. மேலும் சிறுகுடலை வந்து சேர்வதற்கு முன் வேறு கிளை குழாய் வழியாக கல்லீரலுக்கு வெளிப்புறம் காணப்படும் பித்தப்பை குள் செல்கிறது. அப்போது பித்தப்பையானது பித்த நீரை பெற்றுக்கொண்டு அதன் அடர்த்தியை அதிகரித்து உணவு செரிமானத்துக்கு தயாராக வைத்திருக்கும்.

நாம் உண்ட உணவு இரைப்பையை விட்டு முன் சிறுகுடலை நோக்கி செல்லும்போது பித்தப்பைக்கு நரம்புகளின் வழியாக பித்தநீர் தேவை என தகவல் அனுப்பப்படும். உடனடியாக பித்தப்பை யானது பித்த நீரை பித்த குழாய்கள் வழியாக அனுப்பி வைக்கிறது. அது நேராக முன் சிறுகுடலை அடைந்து அங்குள்ள உணவு  கூலில் உள்ள கொழுப்பை சரியாக செரிக்க செய்கிறது.

பித்தப்பை கற்கள் :

பொதுவாக பித்தப்பை கற்களில் காணப்படும் வேதிப் பொருட்களைக் கொண்டு மூன்று வகைகளாக பிரிக்கலாம்.

1) கொழுப்பு கற்கள் (அ) கொலஸ்ட்ரால் கற்கள் :

பித்தநீரில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் ஆவதால் உண்டாகும் கற்களுக்கு கொழுப்பு கற்கள் என்று பெயர். மேலும் இவை பெரும்பாலும் ஒரே ஒரு கல்லாகவே காணப்படும். வெண்மை கலந்த மஞ்சள் நிறம் கொண்டதாக இருக்கும்.

2) கருத்த நிறமி கற்கள் :

இவ்வகை கற்கள் கால்சியம் கார்பைட் ஆல் உருவாகிறது. மேலும் இவை கசத்த நிரமுடயவை.

3) கலப்பட கற்கள் :

பெரும்பாலான பித்தப்பை கற்கள் கலவை கற்களினால் ஆனவையே ஆகும்.

இவை கொலஸ்ட்ரால், கால்சியம் கார்பனேட், கால்சியம் பிலிறுபினேட் போன்றவற்றால் உருவானவை.

இவை எண்ணிக்கையிலும் அதிகமாக காணப்படும். மேலும் பித்தக் குழாயை அடைத்து பிரச்சினைகளை உருவாக்கும்.

சுமார் 80% மக்களுக்கு இவ்வகை கற்களே காணப்படுகின்றன.

பித்தப்பை கற்கள் உருவாக காரணங்கள் :

பித்தநீர் அளவுக்கு அதிகமாக சுரத்தல்.

கொழுப்புள்ள உணவு பொருட்களை அதிகம் உண்ணுதல்.

நார்சத்து இல்லாத உணவுகளை அதிகம் உண்ணுதல்.

மாவு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுதல்.

அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.

உடல் பருமன்.

ஹார்மோன் குறைபாடு,. குறிப்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரத்தல்.

பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாக பித்தப்பையில் சுழற்சி ஏற்பட்டு அதனை தொடர்ந்து பித்த நீர் தேக்கம் அடைந்து பித்தப்பையில் அடைப்பு உண்டாதல்.கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்கள் சாப்பிடுதல்.

அடிக்கடி விரதம் இருத்தல்.

முறையான உடற்பயிற்சி இன்மை.

சிக்கில் செல் அனிமியா (இரத்த சோகை).

போன்ற பல காரணங்களால் பித்தப்பை கற்கள் உருவாகிறது.

அறிகுறிகள் : 

உண்ட உணவு செரியாமை.

வயிற்று வலி மேலும் வலியானது கடுமையாகி பல மணி நேரம் நீடித்தல்.

குமட்டல்,வாந்தி,ஏப்பம்.

வலது விலா எலும்புகளை சுற்றில் வலி மேலும் வலியானது முதுகு மற்றும் தோள்பட்டை வரை பரவல்.

கொழுப்பு உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் அதிகம் உண்ணும்போது வலி அதிகமாக காணப்படும்.

பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்து விடுவதால் நோயாளிக்கு மஞ்சள்காமாலைஉண்டாகும். 

வயிறு உப்பிசம்.

நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறிகள் காணப்படும். 

பித்தப்பை அலர்ஜி இருந்தால் முதுகு வலி உண்டாகும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam