Visitors have accessed this post 753 times.

பொடுகு வராமல் தடுக்க பயனுள்ள குறிப்புகள்!

Visitors have accessed this post 753 times.

             பொடுகு வராமல் தடுக்க பயனுள்ள குறிப்புகள்!

 

வறட்சியைத் தவிர்க்க உங்கள் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும் என்றாலும், உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பொடுகு சிகிச்சைக்கு தீர்வாகாது. 

இது குளிர் காலம் என்பதால், உங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பு வழக்கத்துக்கு’ சில பருவகால புதுப்பிப்பு (Seasonal updates) தேவைப்படும். ஏனென்றால், குளிர்காலத்தில் உங்கள் முகத்திலும் உச்சந்தலையிலும் சருமம் வறண்டு போகும், இதன் விளைவாக உங்கள் உச்சந்தலையில் பொடுகு மற்றும் உங்கள் முகத்தில் குறிப்பாக மூக்கைச் சுற்றி தோல் உதிர்கிறது. 

வறட்சியைத் தவிர்க்க உங்கள் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க முடியும் என்றாலும், உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பொடுகு சிகிச்சைக்கு தீர்வாகாது.

 

“குளிர்காலத்தில் உச்சந்தலையில் பொடுகுத் தொல்லை அதிகரிக்கும். அத்துடன் முகத்தின் மத்தியில் நெற்றி, மூக்கு, உதடு, நாடி (T-zone) பகுதிகளில் சருமம் வறண்டு உதிரக்கூடும். ஏனென்றால், குளிர்காலத்தில் உங்கள் உச்சந்தலையானது காற்றில் உள்ள வறட்சியை ஈடுசெய்ய அதிக எண்ணெயை உருவாக்குகிறது, மேலும் பொடுகை உண்டாக்கும் ஈஸ்ட் அந்த எண்ணெயை விரும்புகிறது.

 

குளிர்காலத்தில் பொடுகு அதிகரிப்பதற்கான காரணம்.

“என்ன நடக்கிறது என்றால், கோடையில், வானிலை ஈரப்பதமாக இருப்பதால் உங்கள் சருமத்திற்கு அதிக எண்ணெய் தேவையில்லை. ஆனால் குளிர்காலத்தில், உங்கள் முடி மற்றும் தோல் வறட்சியை ஈடுசெய்ய அவை அதிக எண்ணெயை உற்பத்தி செய்கின்றன. பொடுகை உண்டாக்கும் ஈஸ்ட் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது உங்கள் உச்சந்தலையில் மற்றும் உங்கள் தலைமுடியில் உள்ள அனைத்து எண்ணெயையும் விரும்புகிறது, எனவே பொடுகு உருவாகிறது. அதனால்தான் எண்ணெய் தடவுவது பொடுகுத் தொல்லையை மோசமாக்குகிறது, ” 

ஒருவேளை உங்களுக்கு பொடுகுத் தொல்லை வந்துவிட்டால், அதற்கு சிகிச்சை, சாலிசிலிக் அமிலம், ஜிங் பராத்தியான், செலினியம் சல்பைட் அல்லது கெட்டோகனசோல் கொண்ட ஷாம்புவை’ வாரத்திற்கு மூன்று முறை தலையை கழுவுவதற்கு முன், 5-10 நிமிடங்களுக்கு நன்றாக முடியில் தேய்த்து பின்னர் அலசவும். 

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட்டவுடன் உங்கள் உச்சந்தலையையும் முடியையும் எவ்வாறு பராமரிப்பது? 

மீண்டும் பொடுகு வராமல் இருக்க, அந்த ஷாம்பூவைக் கொண்டு வாரத்திற்கு 1-2 முறை உங்கள் தலைமுடியை கழுவுங்கள்.

 

பெண்களே! தினமும் என்ன ஹேர் ஸ்டைஸ் வைப்பது என்று குழப்பமா? இதோ உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!

இந்த விரைவான மற்றும் நேர்த்தியான மீடியம் லென்த் ஹேர் ஸ்டைல்- வழக்கமான ஆஃபிஸ் லுக்-மீட்டிங்-ஃபார்மெல் கெதரிங்- என பல நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருக்கும். 

குறிப்பாக பண்டிகை மற்றும் திருமண காலங்களில் ஆடைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்போது, ​​தலைமுடி உட்பட அழகின் பல அம்சங்களை புறக்கணிக்கிறோம். 

பலருக்கு பெரும் முயற்சி மற்றும் சோதனைகளுக்கு பிறகு சில ஹேர் ஸ்டைல்ஸ் நன்றாக பொருந்துகின்றன. ஆனால், அதன்பிறகு அவர்கள் புதிய ஹேர் ஸ்டைலை பரிசோதிக்கவோ அல்லது புதிதாக எதையும் முயற்சிக்கவோ விரும்புவதில்லை. ஆனால் இந்த ஒரே மாதிரியான தோற்றத்தை உடைக்க வேண்டிய நேரம் இது. உங்களுக்கு ஷோல்டர் அளவு நீள கூந்தல் இருந்தால், சில ஸ்டைலான மற்றும் எளிதான ஃபார்மல் ஹேர் ஸ்டைல். 

பாதி-மேல்-பாதி-கீழ் (Half-up-half-down)

நீங்கள் ஸ்டைலான வைப்ஸ் விரும்பினால் இந்த தேர்வு சரியானது. அடர்த்தியான அலை அலையான கூந்தலுடன், இது மிகவும் அற்புதமான தோற்றத்தை அளிக்கிறது. வழக்கமான ஆஃபிஸ் லுக்ஸ், அல்லது ஏதேனும் ஃபார்மல் கெதரிங்க்கு இந்த ஹேர்-ஸ்டைல் பொருத்தமான தேர்வு.

ஹை போனிடெய்ல் வித் ட்வீஸ்ட் (High ponytail with a twist)

போஹேமியன் கிளாசிக் ஸ்ட்ரைட் தோற்றத்தைப் பெற, ஒரு பக்கத்தில் பிரஞ்சு பின்னலைச் சேர்க்கவும். நிகழ்வுகளைப் பொறுத்து பின்னலின் அளவை மாற்றவும். இது பகல் மற்றும் இரவு என எப்போதும் எளிதாக அணிந்து கொள்ளலாம். 

லோ பன் (Low bun) 

மீடியம் லென்த் ஹேர் பெரும்பாலும் பன் ஹேர் ஸ்டைல்களுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால் உங்கள் கொண்டையை உயர்த்தி கட்டாமல், கீழே கட்டுவது உங்கள் தோற்றத்தில் அற்புதமாக வேலை செய்யும்.

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam