Visitors have accessed this post 359 times.

மனமும் உடலும்

Visitors have accessed this post 359 times.

 இன்றைய கால கட்டத்துல எத்தனை பேர் நல்ல உடல் நலத்தோட ஆரோக்கியமா இருக்காங்கனு சொல்ல முடியும் . அப்படி இருந்தாலும் அது கொஞ்ச பேர் தான். ஆனா நாம் யோகா செய்றது மூலமா நம்ம உடலையும் மனசையும் ஆரோக்கியமா வைச்சிக்க முடியும்னு தெரியுமா!.

 

                 நீ சொல்றது நியாயமா அப்படினு  கேக்குறது எனக்கு புரியுது,தினமும் காலைல சத்துமாவு கஞ்சி தான் குடிக்கிறேன், ராகி தோசை தான்  சாப்பிடுறேன், கவுனி அரிசி தான்  சமைச்சி சாப்பிடுறேன் அப்படினு  நீங்க சொன்னாலும் நான் அதை ஏத்துக்க மாட்டேன்,  நான் சொல்லுறது நீங்க யோகா பண்ண 200 வயசு வரைக்கும் வாழலாம் அப்படினு  இல்லை , நீங்க சாப்பிடுற அந்த சாப்பாட்டோட சக்தியையும் பலனையும் பெறுவதற்கு கண்டிப்பா யோகாசனம் உதவி பண்ணும்.

 

                 எப்படி?, நீங்க யோகா செய்யும் பொழுது உங்க மனசும் உடம்பும் ஒரு அளவுக்கு ஒண்ணா வேலை செய்ய ஆரம்பிக்கும் , நீங்க தொடர்ந்து ஆசனங்கள் செய்யும் பொழுது உங்க உடம்பு உங்களுக்கு தேவையான எல்லா நல்ல வேலைகளையும் பாக்க ஆரம்பிச்சிடும் , உங்களுக்கு நல்ல தூக்கமோ ,நல்ல  இரத்த ஓட்டமோ , செரிமானமோ எல்லாத்தையும் கொடுத்துவிடும் . 

 

                  சாதாரணமா ஒரு மூச்சி பயிற்சி பண்றது  மூலமா உங்களுக்கு இவ்ளோ பலன் கிடைக்கும் அப்படினா கண்டிப்பா அது நல்ல விஷயமா தானங்க இருக்க முடியும்.

 

                நம் உடலுக்கும் மனதுக்கும் நேரடி தொடர்பு உண்டு. மனமும் உடலும் இணைவதே யோகா. நம் உடலில் ஏதாவது வலி, வேதனை, தோன்றுவதனால் அது நம் மனதை பாதித்து மனோ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் . 

               மனிதன் தோன்றிய நாளில் இருந்தே மனமும் உடலும் தான் இச்சை படியே இருந்து வருகின்றது. அதற்கு கடிவாளம் போட்டு கண்டபடி அலைய விடாமல் நிலையான மனதுடனும் அமைதியான மூச்சி பயிற்சியை செய்து நம் உடலை நாம் சிறப்பாக மேம்படுத்த முடியும் என்பது உண்மை. 

           நீடித்த வாழ்வும், நிலையான வாழ்க்கையும் நாம் நினைத்த உடன் கிடைத்து விடுமா?. 

நாம் தான் அவதியரை நோக்கி செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட வயது, குறிப்பிட்ட உடல் பலம், ஓரளவு பணம், இவைகளை வைத்து கொண்டு மனதையும் உள்ளத்தையும் நிலைப்படுத்த  இயலாது . மன அமைதிக்கும் உடல் அமைதிக்கும் அடிப்படையே தியானங்கள். 

            நாம் உண்ணும் உணவு கூட மனம்  உடல் இவைகளை கட்டுப்படுத்துகிறது . நம் உடலுக்கும் மனதுக்கும் எளிய உணவுகள் போதும் . இவைகளாலேயே உடலையும் மனதையும் கட்டுப்படுத்த முடியும். 

 

 

            மனமும் உடலும் தெளிவு பெற பல தியானங்கள் , மூச்சி பயிற்சிகள் உள்ளன. அவைகளில் சிலவற்றை செய்தேனும் நம் ஆரோக்யத்தை காப்பாற்ற முடியும் என்று கூறி முடிக்கின்றேன் .

 

 

 

 

 

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam