Visitors have accessed this post 718 times.

மூலிகை மருத்துவம்

Visitors have accessed this post 718 times.

 

 

கானாம் வாழை..

தமிழ்நாட்டில் ஈரமான இடங்கள் கடற்கரை அடுத்த நிலங்களில் தானாக வளரும் சிறு செடி. இனம்..
கானாம் வாழை..
கானாம் வாழைக்கு ஸ்தன விருத்திரிதி, ஆகும்..

வெப்பசுரம், தணியும்..

இரத்த பேதி இவை நீங்கும்..

சுக்கில விருத்தியாகும்..
கப பெருக்கம் உண்டாகும்..
கானாம் வாழைக் கீரை ( உலர்த்தியது-100 கிராம் ) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் அனைத்தும் தலா 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.. விந்து முந்துதல் பிரச்சனை தீரும்..
கானாம் வாழை கீரைச் சாறெடுத்து அதனுடன் ஜாதிக்காயை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி,தினமும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால், ஆண்மைக் குறைவும் நரம்புத் தளர்ச்சியும் குணமாகும்.. கானாம்வாழைக் கீரைச் சாறு எடுத்து அதனுடன் கசகசாவை ஊற வைத்து அரைத்து,தேனில் குழைத்து.. 2 ..கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் காம உணர்வு அதிகரிக்கும்.. கானாம் வாழைக் கீரையுடன் துத்தி இலையையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குணமாகும்.. கானாம்வாழைக் கீரையை அரைத்து, பெண்களின் மார்பில் ஏற்படும் புண்கள் மீது பற்றுப் போட்டால் அவை உடனே ஆறிவிடும்.. கானாம் வாழைக் கீரையை மட்டும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் தீரும்.. கானாம் வாழைக் கீரையுடன் சிறிது மிளகு(10) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜுரம் உடனே குணமாகும்.

மருத்துவக்குணங்கள்: தொழுநோய் புண்களை சுத்தப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தினர். கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தினர். தீப்புண் குணமாகவும் இதைப் பயன்படுத்தினர். சமூலத்தைக் குடிநீராக்கிக் குடிக்க எளிய சுரம் போகும். சமூலத்துடன் மிளகு, சீரகம் சேர்த்து குடிநீராக்கிக் கொடுக்கத் தாகம் மிகுதியாக உள்ள சுரத்தில் தாகமும் சுரமும் நீங்கும். சமூலத்துடன் அறுகம்புல் சமனாக மைய அரைத்துக் கொட்டைப் பாக்களவு காலை, மாலை பாலில் கொடுக்க இரத்தப் பேதி நிற்கும். சமூலம், அசோகுப் பட்டை, அறுகு சமன் அரைத்துக் காலை மதியம், மாலை நெல்லிக்காயளவு கொடுத்து வர பெரும்பாடு தீரும். சமூலம், தூதுவாளைப் பூ, முருங்கைப் பூ ஒரு குவளை நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப் பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ளத் தாது பலப்படும். இலையுடன் சம அளவு கீழாநெல்லி மைய அரைத்துத் தயிரில் நெல்லிக்காயளவு காலை, மதியம், மாலை கொடுக்க வெள்ளைப் போக்கு தீரும். இலையை அரைத்துக் கட்டப் படுக்கைப் புண், மார்பு காம்பைச் சுற்றி வரும் புண்கள் தீரும். இலையைக் கசக்கி முகப்பருவிற்கு வைக்க விரைவில் குணமடையும். கானா வாழைச்சாறு எடுத்து அல்லது நீரில் இட்டு தீநீர் ஆக்கி வாயைக் கொப்பளிப்பதால் வாயில் பற்றித் துன்பம் தருகின்ற நோய்க் கிருமிகள் விலகிப்போகும். இதனால் தொண்டைக்கட்டு, தொண்டைக் கம்மல், டான்சில் எனப்படும் தொண்டை அழற்சி, குரல்வளைத் தொடர்பான தொல்லைகள் அத்தனையும் அகன்று போகும். கானா வாழை இலையை அரைத்து மேல் பற்றாகப் போடுவதனால் பால்தரும் தாய்மார்களுக்குப் பால் கட்டிக் கொண்டு பல துளைகள் கொண்ட கட்டியாக வீக்கமும், எரிச்சலும், வேதனையும் தரக்கூடிய மார்புக் கட்டி விரைவில் கரைந்து குணமாகும். கானா வாழையை அடிக்கடி உணவாகச் சமைத்து உண்ணுவதால் ஆண்மையை அதிகரித்துப் பெண்ணின் பால் இச்சையை உண்டாக்கும். பிள்ளைப் பேற்றுக்கான விந்துக் குறைபாடுகளையும் விலக்கி வைக்கும். ஒரு அவுன்ஸ் அளவு சுமார் 20 மி.லி. அளவு கானா வாழைச் சாற்றை உள்ளுக்குக் குடிப்பதாலோ அல்லது தீநீர் இட்டுக் குடிப்பதாலோ இரத்தக் கழிச்சல், வயிற்றுப் புண்ணால் வயிற்றில் ஏற்படும் இரத்தக் கசிவு, ஆசன வாயினின்று கசியும் இரத்தம் ஆகியன கட்டுப் படுவதோடு அதற்கான நோயும் குணப்படும்.. கானா வாழை இலை கைப்பிடி அளவு எடுத்து அதனோடு பத்து மிளகு தூள் செய்து சேர்த்து சுவைக்காக பனை வெல்லமோ உப்போ சேர்த்துத் தீநீராக்கிக் குடிப்பதாலோ கடுமையான காய்ச்சல் காணாமல் போவதோடு வலியும் விலகிப் போகும்..
கானா வாழையைச் சமூலமாக எடுத்து அதற்குச் சமமான அளவு அறுகம்புல் சேர்த்து அரைத்து அந்தி சந்தி என தினம் இரு வேளை நெல்லிக்காய் அளவு உண்டு வர விரைவில் இரத்த, சீதபேதி நின்றுவிடும்.. கானா வாழை இலையைச் சுத்தம் செய்து அதனுடன் சம அளவுக்கு கீழக்காய் நெல்லி சமூலத்தைச் சேர்த்து நன்கு மைபோல அரைத்துப் புளிப்பில்லாத புதிய தயிரில் கலந்து தினம் 3 வேளை என உள்ளுக்குக் கொடுப்பதால் பெண்களின் வெள்ளைப் போக்கு விரைவில் குணமாகும்.. பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களின் இந்திரிய ஒழுக்கு கூட அடங்கிப் போகும். கானா வாழை இலையை அரைத்து அதனோடு சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்கு உறவாகும்படிக் குழைத்துப் படுக்கைப் புண்கள் மேல் பூச்சாகப் பூசுவதாலும் அல்லது கானா வாழை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு புண்களின் மேல் தூவி வருவதாலும் படுக்கைப் புண் மட்டுமல்லாது நீண்ட நாட்பட்ட புண்கள் கூட ஆறிப் போகும். கானா வாழை இலையைக் கசக்கி சாறு பிழிந்து தேனோடு சிறிது மஞ்சள் சேர்த்துக் குழைத்து முகப் பருக்களின் மேல் பூசி வர விரைவில் பருக்கள் உடைந்து காயம் விரைவில் ஆறிப் போகும்.கானா வாழையை உணவாக அடிக்கடிப் பயன்படுத்துவதால் புற்று நோய், நெறிக்கட்டி நோய் ஆகியன தடுக்கப்பெறும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam