ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச 10 தனிநபர் ஓட்டங்கள்

டிசம்பர் 10, 2022 வரை ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச 10 தனிநபர் ஓட்டங்கள் 1.      ரோஹித் ஷர்மாவின் 264 ரன்கள் நவம்பர் 13, 2014 அன்று ஈடன் கார்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக 173 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியாவின் ரோஹித் ஷர்மா ஒரு நாள் சர்வதேச இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோருக்கான உலக சாதனையை முறியடித்தார்.   2.      எம்.ஜே.கப்தில் 237 ரன்கள் 21 … Read moreஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகபட்ச 10 தனிநபர் ஓட்டங்கள்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை   படித்த ஒரு கதை   முள்ளம் பன்றிகள் கூட்டமாக  வாழ்ந்த ஒரு இடத்தில் கடும் பனிக்காலம் வந்தது. பனியில் இருந்து காத்து கொள்ள முள்ளம் பன்றிகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தன. இதனால் ஒன்றின் முள் மற்றொன்றின் மீது குத்தி காயம் ஏற்பட்டது.  சில பன்றிகள் காயத்தை  பொறுத்துக் கொண்டு இருந்தன. சில பன்றிகள் தனித்து சென்றன.   பனிக்காலம் முடிந்து பார்த்த பொழுது ஒன்றாய் இருந்த பன்றிகள் சிறு காயங்களோடு  பிழைத்துகொண்டன.  தனித்து சென்ற பன்றிகள் பனியில் விறைத்து இறந்து  போயின.   எனவே உறவுகளுக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து சென்றால் பெரிய ஆபத்துகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம். சிறு   வயதில்  படித்த  ஒரு  கதை  … Read moreகூடி வாழ்ந்தால் கோடி நன்மை

நகர்ப்புற விவசாயம்

நகர்ப்புற விவசாயம்      விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு . உழவுத் தொழில் நமது முதன்மையான தொழில் .      உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்     நிதம் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்      ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை      உழவன் சேற்றில் கால் வைத்தால்தான்     நாம் சோற்றில் கை வைக்க முடியும்      ஆனால் இன்று விளைநிலங்கள் பார்ப்பதே அரிதாகிவிட்டது. விவசாயிகள் என்ற ஒரு வர்கத்தினரே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. நாள்தோறும் கிராமங்களில் இருந்து நகர்ப்புறத்தை நோக்கி மக்கள் குடிப்பெயர்ந்து கொண்டிருகின்றனர். விவசாயிகள் கூட தங்களுடைய அடுத்த தலைமுறை நம்மை போல் கஷ்டபடக்கூடாது என்று நினைத்து அவர்களை மற்ற தொழில்களில் திசை திருப்புகின்றனர்.      எனவே விளைநிலங்கள் கான்க்ரிட் நிலங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. விளைநிலங்கள் அரிதாகப் போய்விட்ட நிலையில் எதிர்காலத்தில் உணவுப் பொருள்களும், காய்கறி, பழங்கள், கீரைகள், தானியங்கள், பூக்கள் அனைத்தும் மனிதனுக்கு எட்டாத பொருளாகவே ஆகிவிடுமோ என்ற பயம் ஏற்படுகிறது.      பணம் உள்ளவன் மட்டுமே சாப்பிட முடியும். அடுத்தவன் அதை அடித்து பிடுங்க வேண்டும் என்ற நிலையும் உருவாகிவிடும். அப்படி ஒரு மோசமான சூழலை உருவாகாமல் தடுக்க இப்பொழுதே முயற்சிகள் எடுத்தாக வேண்டும்.      பொருள்களின் விலை ஏற்றத்திற்கு மிக முக்கியமான காரணங்கள் போக்குவரத்து செலவும், இடைத்தரகர்களும்தான்.      இன்று எரிப்பொருள்களின் விலை தினம் தினம் ஏறிக்கொண்டேஇருக்கின்றது. இதனால் மற்ற பொருள்களின் விலையும் மறைமுகமாக ஏறுகிறது.எந்த ஒரு பொருளும் உற்பத்தியாவது ஒரு இடத்திலும் அதை பயன்படுத்துவது வேறு ஒரு இடத்திலும் இருப்பதால் அந்த பொருள் பயணப்பட வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. உணவுப் பொருள்கள் பல கிலோமீட்டர் பயணப்பட்டு நகரங்களை அடைய வேண்டியுள்ளது. எனவே அந்தப் பயணத்திற்கான செலவும் அந்தப் பொருளின் விலையில் திணிக்கப்படுகிறது. இரண்டாவது இடைத்தரகர்கள். உற்பத்தியாகும் பொருளின் அடிப்படை விலை அது கைமாறும் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அவர்களின் இலாப நட்ட கணக்கை பொறுத்து உயர்த்தப்படுகிறது. அந்தப் பொருளுக்கு உண்மையாக நாம் கொடுக்கும் விலை அதை விளைவித்த விவசாயிக்கு போய் சேர்வதில்லை. எனவேதான் விவசாயம் ஒரு இலாபமில்லாத தொழிலாகவும், விவசாயி ஏழையாகவும் உள்ளான்.   இதைத் தவிர்க்க ஓர் எளிய வழி நகர்ப்புற விவசாயம் ஆகும்.   நகரங்களில் … Read moreநகர்ப்புற விவசாயம்

Write and Earn with Pazhagalaam