நானே வருவேன் – பகுதி 12

 பாகம் 12 காலை 10 மணி அளவில் செல்வராகவனும் செல்வியும் அருள் வீட்டிற்கு சென்றனர். “வாங்க சம்மந்தி ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பனே” பரபரப்பானார் அருள். “சில விஷயங்கள நாங்களே நேர்ல வந்து சொல்றது தான மொற” என்று செல்வராகவன் செல்வியைப் பார்க்க அவர் பேச்சைத் தொடர்ந்தார் “ஜோசியர் கிட்ட போய்ருந்தோ ரெண்டு வாரோ கழிச்சு புதன் கெழம நல்ல நாளுன்னு சொன்னாரு அன்னக்கி நிச்சயத்த வச்சுக்குவோமாணே”. அருளும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் … Read moreநானே வருவேன் – பகுதி 12

நானே வருவேன் – பகுதி 11

 பாகம் 11 அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போதிலும் அனைவரிடமும் அன்பாகப் பழகி அனைவருடைய மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் வித்யா. அந்தப் பக்கமாகச் சென்ற அலுவலக சேவகன் “வித்யா மேடம் ஒங்களுக்கு  ஏதாவது உதவி வேணும்னா கூச்சப்படாம ஏ கிட்ட கேளுங்க நா செய்றே” என்று சிரித்துக் கொண்டே கூற வித்யாவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இதை கவனித்த வித்யாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுமதி “என்னபா நீ ஆஃபீஸ் பியூனையு … Read moreநானே வருவேன் – பகுதி 11

நானே வருவேன் – பகுதி 10

 பாகம் 10   தூக்கத்திலிருந்து கண்விழித்த வீரராகவனுக்கு அவனுடைய அம்மா நேற்று இரவு பயந்து நடுங்கியது நினைவிற்கு வந்தது. சட்டென எழுந்தவன் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தட்டினான் கதவு பூட்டப் படாமல் இருக்க அது தானாகவே திறந்து கொண்டது உள்ளே யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு வேகமாக கீழே இறங்கி வந்தான். செல்வியின் குரல் பூஜை அறையில் இருந்து வெளிப்பட அங்கே வேகமாக சென்றான். உள்ளே தன் அம்மா தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு இசைப் பாமாலையை … Read moreநானே வருவேன் – பகுதி 10

நானே வருவேன் – பகுதி 9

 பாகம் 9 செல்வராகவன், செல்வி, வீரராகவன் மூவரும் சேர்ந்து ஒன்றாக இரவு உணவை உன்னு கொண்டிருந்தனர். செல்வி செல்வராகவனைப் பார்த்தார். அவர் உணவை நன்றாக ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்தாக வீரராகவனைப் பார்த்தார் சாப்பிடுவதை ஏதோ ஒரு வேலையை செய்வதுபோல் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உன்னு கொண்டிருந்தான். ‘இவங்க ரெண்டு பேரூ சாப்புட்றதுக்கு மட்டுந்தா வாயத் தொறப்பாங்களே தவிர ஏ கிட்ட ஒரு வார்த்த கூட பேச மாட்டாங்க’ என்று மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டார் … Read moreநானே வருவேன் – பகுதி 9

நானே வருவேன் – பகுதி 5

 பாகம் 5 வேகமாக ஐஸ்வர்யாவின் வீட்டிற்குள் நுழைந்த ரஞ்சிதாவை பார்த்த ஐஸ்வர்யாவின் பாட்டி பார்வதி. “என்ன கல்யாணப் பொண்ணே ஏ இவ்வளவு வேகோ பாத்து பொறுமையா வா” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.   பாட்டியின் புன்னகை நிறைந்த முகத்தை பார்த்தவுடன் ரஞ்சிதாவின் மனநிலையும் மாறியது. “அதுக்குள்ள ஒங்களுக்கு நியூஸ் வந்திருச்சா” ரஞ்சிதாவின் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த ஐஸ்வர்யாவின் அம்மா திலகவதி “அதா அவங்க வீட்லயே ஒரு ஸ்பைய வச்சுருக்காங்களே யாரு வீட்ல என்ன நடந்தாலூ … Read moreநானே வருவேன் – பகுதி 5

நானே வருவேன் – பகுதி 3

வேகமாக உள்ளே வந்த வைஷ்ணவி கழிவறை கதவைத் தட்டினார். எந்த சத்தமும் இல்லாமல் இருக்கவே மீண்டும் “ரஞ்சிதா!” என்று அழைத்துக் கொண்டே கதவைத் தட்டினார். “ஒரு நிமிஷோ! கதவு வெளிய பூட்டிருக்கு பாருங்க” என்று வைஷ்ணவியிடம் செல்வி கூற அவளும் அதை பார்த்துவிட்டு “ஐயய்யோ எங்க போனான்னு தெரியலையே இந்த ஆள் நம்மல கொல்ல போறாரு” என்று மனதுக்குள் கலவரப்பட்டுக் கொண்டே அறையின் மையப் பகுதிக்கு வந்து நின்று “ரஞ்சிதா! ரஞ்சிதா!” என்று சத்தமாக அழைத்தாள். “என்னம்மா” … Read moreநானே வருவேன் – பகுதி 3

நானே வருவேன் – பகுதி 2

 பாகம் 2 செல்வராகவன் வாசலின் முன்பு வந்து நின்று ” சுரேஷ் சுரேஷ் ” என்று சத்தமாக ஓட்டுநரை அழைத்தார். ” என்னங்கய்யா ” என்று வேகமாக ஓடி வந்தார் ஓட்டுநர் சுரேஷ் . ” கார ரெடியா எடுத்து வைங்க கொஞ்சோ வெளியே போகணூ ” ,  ” சரிங்கய்யா ” என்று கூறிவிட்டு சுரேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். தன் மனைவியைத் தேடி வீட்டுக்குள்ளே சென்ற செல்வராகவன் செல்வி பூஜை அறையில் மலர்களைக் கொண்டு அங்கிருந்த தன்னுடைய … Read moreநானே வருவேன் – பகுதி 2

நேர்மைக்குப் பரிசு

நேர்மைக்குப் பரிசு பள்ளி விடுமுறை விடப்பட்டது. சிறுவர்களின் கொண்டாட்டத்தைக் கேட்கவும்  வேண்டுமா? அனைத்து மாணவர்களின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. புனிதன், பாண்டியன், வசந்தன் ஆகியோர் உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  விடுமுறையை எப்படிக் கொண்டாடுவது என்று அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளனர்.  பாண்டியனும் புனிதனும் பல வருடங்களாக ஒன்றாகப் படித்து வருகின்றனர்.  ஒரே தெருவில் வசிக்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள் விடுமுறையை ஒன்றாகக் கழிப்பார்கள். அதனால் விடுமுறையை எப்படி கழிப்பது என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.  வசந்தன் அவர்களுடன் இந்த … Read moreநேர்மைக்குப் பரிசு

Write and Earn with Pazhagalaam