நானே வருவேன் – பகுதி 14

 பாகம் 14 மாலை நேரம் மகிழுந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வீரராகவன் சாலையில் வித்யா நடந்து செல்வதை கவனித்தான். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவன் சென்ற சாலையில் நிறுத்தற்குறி விளக்கு ஏறிய மகிழுந்தை அணைத்து விட்டு காத்திருந்தான். சாலையின் ஓரத்தில் வித்யா ஒரு நாயை கையில் தூக்கிக்கொண்டு வந்தாள். அந்த நாயின் காலில் கட்டு போடப்பட்டு இருந்தது. சாலையை கடப்பதற்காக வந்தவள் அங்கே நின்றிருந்த பார்வையற்றவரின் கையை பிடித்து அவருடன் சேர்ந்து சாலையைக் கடந்தாள். இருவரும் சில … Read moreநானே வருவேன் – பகுதி 14

நானே வருவேன் – பகுதி 12

 பாகம் 12 காலை 10 மணி அளவில் செல்வராகவனும் செல்வியும் அருள் வீட்டிற்கு சென்றனர். “வாங்க சம்மந்தி ஒரு வார்த்த சொல்லி இருந்தீங்கன்னா நானே வீட்டுக்கு வந்துருப்பனே” பரபரப்பானார் அருள். “சில விஷயங்கள நாங்களே நேர்ல வந்து சொல்றது தான மொற” என்று செல்வராகவன் செல்வியைப் பார்க்க அவர் பேச்சைத் தொடர்ந்தார் “ஜோசியர் கிட்ட போய்ருந்தோ ரெண்டு வாரோ கழிச்சு புதன் கெழம நல்ல நாளுன்னு சொன்னாரு அன்னக்கி நிச்சயத்த வச்சுக்குவோமாணே”. அருளும் வைஷ்ணவியும் ஒருவரை ஒருவர் … Read moreநானே வருவேன் – பகுதி 12

நானே வருவேன் – பகுதி 11

 பாகம் 11 அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த போதிலும் அனைவரிடமும் அன்பாகப் பழகி அனைவருடைய மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள் வித்யா. அந்தப் பக்கமாகச் சென்ற அலுவலக சேவகன் “வித்யா மேடம் ஒங்களுக்கு  ஏதாவது உதவி வேணும்னா கூச்சப்படாம ஏ கிட்ட கேளுங்க நா செய்றே” என்று சிரித்துக் கொண்டே கூற வித்யாவும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே தலையாட்டினாள். இதை கவனித்த வித்யாவின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த சுமதி “என்னபா நீ ஆஃபீஸ் பியூனையு … Read moreநானே வருவேன் – பகுதி 11

நானே வருவேன் – பகுதி 10

 பாகம் 10   தூக்கத்திலிருந்து கண்விழித்த வீரராகவனுக்கு அவனுடைய அம்மா நேற்று இரவு பயந்து நடுங்கியது நினைவிற்கு வந்தது. சட்டென எழுந்தவன் பக்கத்து அறைக்குச் சென்று கதவைத் தட்டினான் கதவு பூட்டப் படாமல் இருக்க அது தானாகவே திறந்து கொண்டது உள்ளே யாரும் இல்லாமல் இருப்பதைக் கண்டு வேகமாக கீழே இறங்கி வந்தான். செல்வியின் குரல் பூஜை அறையில் இருந்து வெளிப்பட அங்கே வேகமாக சென்றான். உள்ளே தன் அம்மா தன்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு இசைப் பாமாலையை … Read moreநானே வருவேன் – பகுதி 10

நானே வருவேன் – பகுதி 9

 பாகம் 9 செல்வராகவன், செல்வி, வீரராகவன் மூவரும் சேர்ந்து ஒன்றாக இரவு உணவை உன்னு கொண்டிருந்தனர். செல்வி செல்வராகவனைப் பார்த்தார். அவர் உணவை நன்றாக ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அடுத்தாக வீரராகவனைப் பார்த்தார் சாப்பிடுவதை ஏதோ ஒரு வேலையை செய்வதுபோல் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் உன்னு கொண்டிருந்தான். ‘இவங்க ரெண்டு பேரூ சாப்புட்றதுக்கு மட்டுந்தா வாயத் தொறப்பாங்களே தவிர ஏ கிட்ட ஒரு வார்த்த கூட பேச மாட்டாங்க’ என்று மனதுக்குள் வேதனை பட்டுக்கொண்டார் … Read moreநானே வருவேன் – பகுதி 9

நானே வருவேன் – பகுதி 8

 பாகம் 8 தனியாக அமைக்கப்பட்டிருந்த பெண்கள் கழிவறைக்குள் சென்ற வித்யா நீண்ட வரண்டாவில் இருந்த கண்ணாடி முன்பு நின்று தன்னைத் தானே பார்த்துக் கொண்டு குழாயை திருகி தண்ணீரில் முகத்தை கழுவிக் கொண்டு மீண்டும் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து “என்ன ஆச்சு வித்யா? காம்டவுன் காம்டவுன் இந்த ஜாப் உனக்கு எவ்ளோ முக்கியோனு தெரியும்ல சொதப்பாம பெர்ஃபெக்டா செஞ்சுடு” என்று தனக்குத்தானே தன்னம்பிக்கை ஊட்டிக் கொண்டு துப்பட்டாவால் தன் முகத்தை துடைத்து விட்டு வெளியே வந்தாள். … Read moreநானே வருவேன் – பகுதி 8

நானே வருவேன் – பகுதி 7

 பாகம் 7 உதவியாளருடைய கனிவான பேச்சு வீரராகவனுடைய கோபத்தை சற்று தனித்து இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழியைப் பற்றி சிந்தனை செய்ய வழி வகுத்தது. “கொஞ்ச நேரோ என்ன தனியா விடுங்க சார்” என்று தாழ்ந்த குறலில் வீர் சொன்னவுடன் அவனுக்கு தனிமை தேவை என்பதை புரிந்து கொண்ட உதவியாளர் ராமு மௌனமாக வெளியே சென்றார். நடந்தவற்றையெல்லாம் ஒரு முறை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவன் “எஸ் அவர் சொல்றது தா சரி” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு தன்னுடைய … Read moreநானே வருவேன் – பகுதி 7

நானே வருவேன் – பகுதி 6

 பாகம் 6 ரஞ்சிதா கூறிய விஷயத்தை சில வினாடிகள் ஆழமாக யோசித்த வீரராகவன் “எனக்கு ஒங்கள கல்யாணம் பண்ணிக்க ஓகே தா” என்று ரஞ்சிதாவைப் பார்த்து கூறிவிட்டு தன்னுடைய உதவியாளரைப் பார்த்து கண்ணசைத்தான். அவனுடைய செய்கையை புரிந்து கொண்ட உதவியாளர் வேகமாக அவனுடைய அருகில் வந்து அவனுடைய முகத்திற்கு அருகே குனிந்தார். அவர் காதில் அவன் எதையோ சத்தமில்லாமல் சொல்ல அவர் அங்கிருந்து கண்ணன் இருக்கும் இடத்தை நோக்கி சென்று அவனை கையோடு வீரராகவனிடம் அழைத்து வந்தார். … Read moreநானே வருவேன் – பகுதி 6

நானே வருவேன் – பகுதி 5

 பாகம் 5 வேகமாக ஐஸ்வர்யாவின் வீட்டிற்குள் நுழைந்த ரஞ்சிதாவை பார்த்த ஐஸ்வர்யாவின் பாட்டி பார்வதி. “என்ன கல்யாணப் பொண்ணே ஏ இவ்வளவு வேகோ பாத்து பொறுமையா வா” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.   பாட்டியின் புன்னகை நிறைந்த முகத்தை பார்த்தவுடன் ரஞ்சிதாவின் மனநிலையும் மாறியது. “அதுக்குள்ள ஒங்களுக்கு நியூஸ் வந்திருச்சா” ரஞ்சிதாவின் சத்தம் கேட்டு சமையலறையில் இருந்த ஐஸ்வர்யாவின் அம்மா திலகவதி “அதா அவங்க வீட்லயே ஒரு ஸ்பைய வச்சுருக்காங்களே யாரு வீட்ல என்ன நடந்தாலூ … Read moreநானே வருவேன் – பகுதி 5

நானே வருவேன் – பகுதி 4

பாகம் 4 இரவு உணவிற்காக அருளும் ரஞ்சிதாவும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருந்தார்கள். ரஞ்சிதா நொடிக்கொரு முறை தன் அப்பா என்ன சொல்லப் போகிறாரோ என்று திரும்பித் திரும்பி அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள். இதைக் கண்டும் காணாததைப் போல அருளும் மௌனமாக அமர்ந்திருந்தார்.   இரவு உணவை எடுத்துக்கொண்டு மேஜைக்கு வந்த வைஷ்ணவி தயாராக இருந்த இருவருடைய தட்டிலும் உணவை பரிமாறி விட்டு தானும் அமர்ந்து உன்ன ஆரம்பித்தார். “இப்போ வந்திருக்க சம்பந்தோ ரொம்ப பெரிய எடோ நா … Read moreநானே வருவேன் – பகுதி 4

Write and Earn with Pazhagalaam