ஜென் கதைகள் – ஒரு கை ஓசை கேட்குதா!

ஜப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு அவர். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட. ஒரு கோடையில், ஜப்பானின் தென் தீவிலிருந்து ஒரு மாணவன் வந்தான், தத்துவம் பயில. அவனை சுவோவிடம் அனுப்பினார் தலைமை குரு. மாணவனுக்கு முதல் பரீட்சை வைத்தார் சுவோ. “உனக்கு ஒரு கை ஓசை கேட்கிறதா?” – இதுதான் அந்த சோதனை. அவனுக்குக் கேட்கவில்லை. அந்த சோதனையில் தேர்ந்தால்தான் சுவோவிடம் பயிற்சி பெற முடியும். எனவே ஒரு கை … Read moreஜென் கதைகள் – ஒரு கை ஓசை கேட்குதா!

ஜென் கதைகள் – தானம்

ஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது. அடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்? தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள். மனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த … Read moreஜென் கதைகள் – தானம்

ஜென் கதைகள் – ஒன்பது திருடர்கள்

ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது.. இங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள். இவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர். கிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த … Read moreஜென் கதைகள் – ஒன்பது திருடர்கள்

ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்

அது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை. யாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்! அந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு … Read moreஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்

ஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்!

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல. சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்! சரி, இதை … Read moreஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்!

ஜென் கதைகள் – கடவுளுடன் ஒரு பேட்டி

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு. “உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?” “ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன். கடவுள் சிரித்தார். “என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?” “மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?” கடவுள் சொன்னார்… “மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான். … Read moreஜென் கதைகள் – கடவுளுடன் ஒரு பேட்டி

ஜென் கதைகள் – மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

இரு நண்பர்கள்… பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான். விரல்களால் இப்படி எழுதினான்: “இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!” மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் … Read moreஜென் கதைகள் – மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

ஜென் கதைகள் – குரு சிஷ்யன்

ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர். ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’ ‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம்  அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு. ‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’ ‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் … Read moreஜென் கதைகள் – குரு சிஷ்யன்

ஜென் கதைகள் – மூன்று தலைகள்

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்! இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் … Read moreஜென் கதைகள் – மூன்று தலைகள்

ஜென் கதைகள் – வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் … Read moreஜென் கதைகள் – வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

Write and Earn with Pazhagalaam