Visitors have accessed this post 794 times.

அன்பின் மதிப்பு!

Visitors have accessed this post 794 times.

அன்பின் மதிப்பு!

அக்பர் என்ற அரசன் நோய்வாய்ப்பட்டு பல நாட்கள் படுக்கையில் கிடந்தான்.அவரைப் பார்க்க தினமும் பல முக்கியஸ்தர்கள் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது,ஒரு விவசாயி தடுத்து நிறுத்திய காவலர்களையும் பொருட்படுத்தாமல், அரசனின் படுக்கைக்குச் சென்றார்.கலைந்த தலைமுடியும், உடையில் தூசியும் படிந்த நிலையில் தான் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்ததை அக்பரிடம் கூறினார். 

அரசனிடம், “அரசே, உங்கள் உடல் நலம் சீராக இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் வைத்து அந்தப் பிரசாதத்தை நான் கொண்டு வந்துள்ளேன் ஏற்றுக்கொள்ளுங்கள்“என்றார்.

காணிக்கையான பொங்கலை எடுத்தபோது அது கெட்டுப்போயிருந்தது.அரசன் காணிக்கையை எடுத்து,கழுத்தில் இருந்த முத்தை அகற்றி,விவசாயிக்கு பரிசாக கொடுத்தான். 

அரசே மாண்புமிகு அரசே,அவன் தந்த பொங்கலுக்கு முத்து மாலை பரிசா?என மந்திரி கேட்டார்.அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டு, அது கெட்டு இருந்தாலும்,குணமாக வேண்டும் என்று மாசற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரமாக நடந்து வருகிறான் அவன் என்று மந்திரியிடம் கூறினார் மன்னன். 

அவன் அன்பு உண்மையானது.உண்மையான அன்பின் மதிப்பு மிக அதிகம்.நான் கொடுத்த முத்து கூட அவன் அன்புக்கு ஈடாகாது என்றார்.

நீதி:

நம் அன்பு உண்மையாக இருந்தால்,கடவுளே கையை கட்டிக்கொண்டு வந்து நிற்பார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam