Visitors have accessed this post 794 times.

ஆரோக்கியம்

Visitors have accessed this post 794 times.

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா? இல்லையா?

எப்படி தெரிந்துக்கொள்வது?

 

“மாஸ்டர் செக்கப்” செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது “சொந்தக்காசில் சூனியம்” வைத்துக்கொள்வது போன்றது!

 

நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை, “நீ நோயாளிதான்” என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும் “தந்திர வியாபார வலை” தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது, 

           அல்லது “அப்படியிருக்கும், இப்படியிருக்கும்” என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது!

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்!

 

எப்படி?

          ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்!

சர்க்கரை நோய் ரீடிங் 80/140, இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, சிறுநீரக நோய் ரீடிங் 1.02,

கொழுப்பு அளவு, உப்பு அளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று, WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன மருத்துவம்!

 

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்!

இத்தகய “ரீடிங்குகள்” நவீனவிஞ்ஞானத்தின் “நன்கொடைகள்”! நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது! ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொரு மாதிரி இயங்குகிறது!

உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது! “யாருக்கும் கைரேகை ஒன்று போலிருக்காது”!

 

உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள மனிதனும்,

வெவ்வேறு தட்பவெப்ப நிலை,

வெவ்வேறு உணவுபழக்கம்,

வெவ்வேறு உணவு உண்ணும் முறை,

வெவ்வேறு கலாச்சாரம்,

வெவ்வேறு “ஜீன்கட்டமைப்பு”…….!

      இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடைய தாகத்தானே இருக்கும்!

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது! அப்படியானால்,

“உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்”,

என்று ஆங்கில மருத்துவ உலகம், “அடம் பிடிப்பது” எப்பேற்பட்ட “முட்டாள் தனம்”! இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய “அறியாமை”!

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் “Master check-up”

இந்த நூற்றாண்டின் “மாபெறும் வியாபார மோசடி”! அப்படியானால் ஒரு மனிதன் ஆரோக்யமாக இருப்பது, இல்லாதது, எப்படி தெரிந்துக் கொள்வது? வரும் முன் காப்பது எப்படி? 

 

இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள்!

(1) தரமான பசி.

(2) தரமான தாகம்.

(3) தரமான தூக்கம்.

(4) தரமான தாம்பத்ய உறவு.

           “தரம்” என்ன என்பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்! இங்குதான் குழப்பம் ஆரம்பம்!

இதை இன்னுமொரு பதிவில் தனிதனியாக புரிந்துக்கொள்ள முயல்வோம்! எனவே மேற்சொன்ன நான்கும் திருப்தியாக இருந்தால், “நீங்கள் ஆரோக்யமாக இருக்கிறீர்கள்” என உறுதி செய்துகொள்ளலாம்!

 

ஏதாவது ஒன்று திருப்தியில்லையானாலும்,

ஆரோக்கிய குறைவு உள்ளது என்பதையும் உறுதியாக்கிக்கொண்டு ஆரோக்கியம் தேட துவங்கலாம்..

Leave a Comment

Write and Earn with Pazhagalaam