Visitors have accessed this post 344 times.
இளநரையை போக்கும் கரிசலாங்கண்ணி !
காலம் போகும் போக்கிலே,
கண் இமைக்கும் நேரத்திலே!
காணாமல் போகும் கருமை முடிக்கு,
இயற்கை தாயின் ஓர் அற்புதம்
கரிசலாங்கண்ணி !
பொதுவாக காரிசலாங்கன்னியில் வெள்ளை,சிவப்பு ,நீலம் ,மஞ்சள் என்று நான்கு வகைகள் இருந்தாலும் பொதுவாக அனைவரும்
பயன்படுத்துவது மஞ்சள் காரிசலாங்கண்ணியை மட்டுமே.
எவ்வாறு கரிசலாங்கண்ணியை அடையாளம் காணுவது?
இன்றைய கால நடைமுறையில் இரு வகைகளை மட்டுமே காண முடிகிறது. அதில் பெரும்பாலும் மஞ்சள் கரிசலாங்கண்ணியே அதிகம்
பயன்படுத்தபட்டு வருகிறது. அதில் உள்ள பூக்களின் நிறங்களை வைத்து அதன் வகைகளை அறிந்துகொள்ள இயலலும். வெள்ளை
கரிசலாங்கண்ணியை அதன் வெள்ளை நிற பூக்களை கொண்டும். மஞ்சள் கரிசலாங்கண்ணியை அதன் மஞ்சள் நிற பூக்களை கொண்டும்
அடையாளம் காணலாம்.
கரிசலாகண்ணியின் மருத்துவ பயன்கள்:
பொதுவாக கரிசலானகண்ணி பல மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது. அதிலும் இன்றைய தலைமுறை மக்களுக்கு அவசியமான உணவு
பொருளாகவும் உள்ளது. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இளம் வயதிலே முடி நரைத்தல் மற்றும் முடி கொட்டுதல் போன்ற பல
பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இதற்கு கரிசலாங்கண்ணியை வைத்து இயற்கையாக எண்ணெய் தயாரித்து பயன்படுத்தி வர இளநரை, முடி கொட்டுதல் போன்ற இன்னல்களில்
இருந்து விலகி நமது முடிகள் கருமையாகவும் நன்று வலிமையாகவும் மாறும்.
எண்ணெய் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்
- கரிசலாகண்ணி – தேவையான அளவு
- கருவேபிலை – சிறிதளவு
- நெல்லிக்காய் – 10
- நல்லெண்ணெய் – லிட்டர்
செய்முறை:
- கரிசலாகண்ணி,கருவேப்பிலை,நெல்லிக்காய் ,சுத்தம் செய்து சில துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.
- பின் இம்மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும் .
- பிறகு வாணலியில் 1 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சூடான பிறகு அரைத்ததை சேர்த்து 18-20 நிமிடம் வரை காய்ச்சவும்.
- பிறகு வடிகட்டி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:
1. எண்ணெயை தலையில் ஊற்றி உச்சந்தலையில் இருந்து நன்றாக தேய்க்க வேண்டும். பின் தலையை அலசி கொள்ளவும்.
2. இதை தினமும் வாரத்திற்கு 1 முறையும் பயன்படுத்தி வரலாம்.
3. சூடு அதிகம் உள்ளவர்கள் இரவில் தேய்த்து விட்டு பகலில் குளித்து கொள்வதன் மூலம் உடல் சூடு குறையும்.
இளநரையைப் போக்க பல வேதி பொருட்களை பயன்படுதுவாதற்கு பதிலாக நம் இயற்கை தாயின் மூலிகைகளை பயன்படுதினால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமாக நமது முடிகளை பரமாரிக்காலம்.