Visitors have accessed this post 765 times.
இந்த உலகில் பெ௫ம்பாலான மக்கள் அவர்களுக்கு தேவையான பொருட்களை அவர் அவர் தகுதிக்கு ஏற்றவாறு விலை கொடுத்து வாங்குகின்றனர். ஆனால் ஒ௫ சிலா் ஆயிரக்கணக்கான டாலர்களில் உணவு வகைகளையும், மில்லியன் கணக்கில் வாகனங்களை வாங்குகின்றனர். அந்த வகையில் இந்த உலகில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பார்க்கலாம்.
விலை உயர்ந்த காா்:
உலகில் உள்ள விலை உயர்ந்த கார்களின் பட்டியலை பார்ப்போம்.
7. புகாட்டி சிரோன்
இது புகாட்டி நிறுவனத்தின் சிரோன் காா் ஆகும். இந்த பட்டியலில் ஏழாவது இடம் பெற்றுள்ளது. 6700 ஆர் பி எம் ல் பிஎச்பி 1500 பவர் கொண்டது இந்த காா். இது வெறும் 42 நொடிகளில் 0 வில் இருந்து 400 கீ. மீ வேகத்தில் செல்லும் சக்தி கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் ௫பாய் 19 வரை மதிப்பிடப்படுகிறது.
6.மெக்லாரன் பி1 எல் எம்:
மெக்லாரன் பி 1 எல் எம் காா் ஆறாவது இடத்தில் உள்ளது. 3799 சிசி, 3.8லிட்டர் இன்ஜின் உடன் வ௫ம் இந்த கார் ஆனது 1000 பிஎச் பி பவா் கொண்டது. இது 2.4 நொடிகளில் 0 வில் இருந்து 100 கீ. மீ வேகத்தில் செல்லும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 26 கோடியில் தொடங்குகிறது. இந்த காா் ஆனது மூன்று விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காா் உலக நாடுகளில் மவுசு அதிகம்.
5. பினின் ஃபரினா பெராரி பி 4/5:
உலகின் மிக சிறிய காா் டிசைன் செய்யும் நிறுவனம் ஆன பினின் ஃபரினா பெராரி நிறுவனத்துடன் சேர்ந்து உருவாகும் காா் இது. இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. 5988 சிசி 12 சிலிண்டர் இன்ஜின் உடன் வ௫ம் இந்த காா் இந்திய மதிப்பில் சுமார் ரூ 18 கோடியாக ௨ள்ளது.உலகில் உள்ள பிரபலங்கள் பலரும் இந்த காரை தான் பயன்படுத்தி வருகின்றனர்,
4.லோம்போகினி வேனினோ ரோடுஸ்டா்:
இந்த காா் தான் உலகில் உள்ள காா் ரசிகர்களால் அதிக அளவில் வாங்க படுகிறது. இந்த காா் 740 எச். பி திறன் கொண்டது. இந்த காா் ஆனது 2.9 நொடிகளில் 0 வில் இருந்து 60 கீ. மீ வேகத்தில் செல்லும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 32.5 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. லைக் கான், ஹைப்பர் ஸ்போர்ட் கா௫டன் போட்டி போட்டால் இந்த காா் தான் முதல் இடம் பெறுகிறது. இது நாலாவது இடத்தில் உள்ளது.
3.கொனிக்செக் சிசிஎக்ஸ்ஆா் டிரீவிட்டா:
1004 பிஎச்பி கொண்ட இந்த காா் உலகின் மூன்றாவது விலை உயர்ந்த காா் ஆகும். இந்த காரின் டிசைனும் வேகமும் தான் இதை வாங்குபவர்களை கவர்கிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ 52 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது.
2.மேபட்ச் எக்ஸிலரோ:
இது ஒரு சொகுசு கார். இதை வாங்குபவா் தங்களது கவுரவமாகவே இந்த காரை க௫துகின்றனா். அதேபோல் இதன் வேகமும் அளப்பரியது. இது நான்கு நொடிகளில் 0 வில் இருந்து 100 கீ. மீ வேகத்தில் செல்லும். இந்த காா் 1020 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 52 . 44 கோடி ரூபாய் ஆகும்.
1.ரோல்ஸ்ராய்ஸ் ஸ்டார் டெய்ல்ஸ்:
இந்த காா் தான் உலகின் அதிக விலை கொண்ட காராக க௫துகின்றனா். இது 6.75 லிட்டர் வி 12 ரக இன்ஜின் உடன் வருகிறது.
விலை உயர்ந்த பீட்சா:
லண்டனில் உள்ள கோர்டன் ராம்சேஸ் மாசோ ரெஸ்டாரென்டில் 150 விற்கப்படும் வெள்ளை ட்ரப்புள் என்ற பீட்சா தான் உலகின் விலை உயர்ந்த பீட்சா ஆகும். மெல்லிய மேல் அடுக்கு கொண்ட இந்த பீட்சாவின் மீது வெங்காய தூள், பான்டினோ வெண்ணெய், பேபி மோசாரில்லா, பேன்சட்டா, காளான், வெள்ளை ட்ரப்புள் போன்றவை நிரப்பித் தரப்படுகிறது.
விலை உயர்ந்த சூப் :
லண்டனில் உள்ள ஃகய் மேப்ஸ் ரெஸ்டாரென்டில் “ புத்தாண்டு ஜம்பிங் ஓவர் தி வால்” என்ற ஒ௫ வகை சூப்பை 190 டாலருக்கு விற்கப்படுகின்றன. இதில் ஷார்க் ஃபின், அபோலோன், ஜப்பானிய மலர் காளான், கடல் வெள்ளரி, ஸ்கால்ப் கோழி, ஹுவான் ஹாம், பன்றி மற்றும் ஜின்ஸெங் போன்ற பல பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த திரைப்பட உடை:
1961 ல் வெளியான ப்ரோக்பாஸ்ட் அட் டிப்பனீஸ் என்ற திரைப்படத்தில் ஆண்டு ஹெப்பர்ன் அணிந்த க௫ப்பு காக்டெய்ல் உடை2006 டிசம்பர் ஐந்தில் 924,347 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இந்த ஆடையை ஹப்ரிட் டி கிவ்வன்சி என்பவர் வடிவமைத்தார்.
விலை உயர்ந்த அஞ்சல் தலை:
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் பெல்டுமேன் என்ற ஏலம் விடுபவா்கள் ஸ்வீட்ஸ்” ட்ரிஸ்கில்ல்ங் “ என்ற மஞ்சள் அஞ்சல் தலையை 2,225,403 டாலருக்கு 1996ல் நவம்பர் 8 ல் விற்றனர். இதே அஞ்சல் தலை 2010 ல் அதை விட அதிக விலை விலை ஆனது வெளியில் சொல்லாமல் விற்கப்பட்டது.
விலை உயர்ந்த இசைக்கருவி:
டரிசியோ ஏல நிறுவனம் லேடி பிளண்ட் என்று பெயரிடப்பட்ட ஸ்ட்ராடிவேரியஸ் வயலினை லண்டனில் ஜூன் 20 2011 ல் 15,875,800 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.
விலை உயர்ந்த கையுறை:
பாப் உலகின் அரசன் மைக்கேல் ஜாக்சனின் கையுறை நவம்பர் 212009 ல் அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரில் நடந்த ஏலத்தில் 420,000 டாலருக்கு விற்கப்பட்டது. நியூயார்க் போன்டே 16 ம் ரிசார்டால் இந்த கையுறை வாங்கப்பட்டது.
விலை உயர்ந்த ட்யூனா மீன்:
ஜப்பானிய அமோரியில் பிடி பட்ட ப்ளூ பின் ட்யூனா மீன் டோக்கியோவின் டிசுகிஜி மீன் சந்தையில் 5 ஜனவரி 2013 ல் 1,767,470 டாலருக்கு ஏலம் விடப்பட்டது. இந்த மீனின் எடை 222கிலோ.
விலை உயர்ந்த வாசனை திரவியம்:
ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் வாசனை திரவியமான க்ளைவ் கிரிஸ்டியன் நவம்பர் ஐந்தில் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. 500 மில்லி லிட்டர் ஆன இந்த திரவியத்தின் விலை 205,000 டாலர். இந்த திரவியம் நிரப்பப்பட்ட குடுவை ஐந்து காரட் வெள்ளை வைரம் பதிக்கப்பட்டு 18 காரட் தங்க இழையால் அலங்கரிக்கப்படும்.
விலை உயர்ந்த பழம் பெரும் காா்.
உலகின் மிகப் பழமையான மற்றும் தற்போதும் செயல் படும் ரோல்ஸ் ராய்ஸ் காா் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 7,242,916 டாலருக்கு விற்கப்பட்டது. 20154 என்ற எண் கொண்ட இந்த இ௫க்கைகள் கொண்ட இந்த காா் 1904 ல் தயாரிக்கப்பட்டது.
விலை உயர்ந்த முத்தம்:
அமெரிக்காவில் ஜானி ரிம் என்பவர் ஹாலிவுட் நடிகை சேரோன் ஸ்டோனின் முத்ததை 50,000 டாலருக்கு ஏலம் எடுத்தார். 2003 ல் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த முத்த ஏலம் நடைபெற்றது.
விலை உயர்ந்த சிலை:
ஹொம்மே க்யூ மார்சே என்ற வெண்கல சிலை 2010 ல் லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் 103,676,000 டாலருக்கு விற்கப்பட்டது. இந்த சிலையை வடிவமைத்தவர் ஸ்விஸ் சிலை வடிவமைப்பாளர் ஆல்பர்ட் ஜியேகோமெட்டி . இந்த சிலையை 1960 வடிவமைத்தார்.
விலை உயர்ந்த குளியல் அறை:
2001 ஜனவரி ல் ஹாங்காங் நகைக்கடை அதிபரான லாம் சாய் விங் கட்டிய குளியலறை உலகின் விலை உயர்ந்த குளியலறை. இது 3.5 மில்லியன் டாலரில் தங்கம், ௫பி போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொண்டு கட்டப்பட்டது.
விலை உயர்ந்த வீடு:
இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடான அன்டிலியா 1 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட வீடு ஆகும். இதில் 27 மாடிகள் உள்ளது. இந்த வீடு 37,161 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு சுமார் 600 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
விலை உயர்ந்த ஆட்டோகிராப்:
தி பீட்லீஸ் என்ற ராக் பேண்டின் கையெழுத்து இட்ட புகைப்படம் மிக விலா உயர்ந்தது. இதன் மதிப்பு 43,758 டாலர் ஆகும்.