Visitors have accessed this post 747 times.

ஏன் வாகனங்களுக்கு “பிரேக்குகள்” தேவை?”

Visitors have accessed this post 747 times.

அறிவியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவ, மாணவியர்களிடம் ஒரு சந்தேகம் கேட்டார்…

 

“ஏன் வாகனங்களுக்கு “பிரேக்குகள்” தேவை?”

 

பல வகையான மாறுபட்ட பதில்கள் அந்த வகுப்பு மாணவ/மாணவியர்களிடம் கிடைத்தன…

 

ஒரு மாணவன் சொன்னான், வாகனத்தை “நிறுத்துவதற்கு”…

 

ஒரு மாணவி சொன்னாள், “வேகத்தைக் குறைப்பதற்கு”…

 

ஒருவன்,“வேறு வாகனத்துடன் மோதலைத் தவிர்ப்பதற்கு”…

 

வேறு ஒரு மாணவி சொன்னாள், “மெதுவாக செல்வதற்கு”…

 

மற்றொரு மாணவன் சொன்னாள், “சராசரி வேகத்தில் செல்வதற்கு”…

 

இவ்வாறாக பல்வேறு பதில்கள் பல்வேறு மாணவ/மாணவியர்களிடமிருந்து வந்தது…

 

“வேகமாக ஓட்டுவதற்கு” என்று ஆனித்தரமாகச் சொன்னான் ஒரு மாணவன்…

 

அந்த மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் வாய்விட்டு சிரித்தனர்… சில மாணவிகளுக்கும் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை…

 

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தேர்வு செய்யப்பட்டது…

 

ஆம்… பிரேக்குகள் நாம் வாகனங்களில் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை…

 

நம் டூ வீலரிலோ இல்லை காரிலோ பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொண்டால், நாம் நம் வாகனத்தை எவ்வளவு வேகமாக ஓட்டுவோம்??? நிச்சயமாக நம்மால் வேகமாக ஓட்டமுடியாது…

 

“பிரேக்குகள்” இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக நம் வாகனத்தில் நாம் செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது… அதுபோலத் தான் நம் வாழ்வில் நமக்கு வரும் தடைகளும்…

 

தடைகள் நமக்கு வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம்…

 

தடைகள் நமக்கு எரிச்சலூட்டுவது போலவும், நமது நம்பிக்கைகளை அவைகள் சிதைப்பது போலவும், நாம் நினைத்துக் கொள்கிறோம்…

 

அப்படி உருவாகும் தடைகளை தாண்டிச் செல்லும் சிலரே சாதனையாளர்களாக ஆங்காங்கே ஒளிர்கிறார்கள்!!!

 

நீதி: நம் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” நிச்சயமாக நம் வேகத்தை குறைப்பதற்கு அல்ல… நாம் வேக வேகமாக முன்னோக்கி செல்வதற்கு தான்…

Leave a Comment

Write and Earn with Pazhagalaam