Visitors have accessed this post 781 times.
கணவன் -மனைவி இடையேயுள்ள அன்யோன்ய உறவுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்
மனித இனம் ஆனது உறவுமுறையுடன் பின்னி பிணைந்துள்ளது. அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், தாத்தா, பாட்டி என்று நீண்டு கொண்டே செல்லும் மனித உறவுகள், ஏன்? இந்த உறவுமுறை என்று கேட்டால், அனைவரிடத்திலும் ஒரே ஒரு பதில் தோன்றும் அது அன்பினை பரிமாறுவது, அதாவது பிறப்பு விழா, திருமண விழா, இறப்பு என அனைத்து நிகழ்ச்சிகளிலும் உறவுகள் மிக முக்கியமாக கருதப்படுகின்றனர். மகிழ்ச்சியிலும், துன்பத்திலும், உதவியிலும், நன்றியிலும் உறவு என்பது மிக அத்தியாவசிய ஒன்று. பிறகு ஏன் புரிதல் இல்லாமல் உறவில், சில சண்டைகளும் , பூசல்களும் ஏற்படுகின்றன என யாரேனும் சிந்தித்தது உண்டா? “சுருங்கக் கூறின் உறவுமுறை என்பது நம் உறவினரின் எண்ணங்களின் வெளிப்பாடு, நம் உறவினர்களின் எண்ணங்களையும், தேவைகளையும் புரிந்து அதற்கு ஏற்றார் விருந்தோம்பல் செய்தலே உறவுமுறையின் மூல ஆதாரமாகும்.
” இந்த பாகத்தில் நாம் ஒரு கணவன், மனைவி இருவரிடையே எவ்வாறு உறவுமுறை அமைய வேண்டும் அதிலும் முக்கியமாக, இருவரிடையே உள்ள அனியோனிய உறவுமுறை தான் அவர்களது வாழ்வின் இறுதிவரை ஒருவரோடு ஒருவரை புரிந்துகொண்டு பிணைப்பின் இரு உள்ளங்களாக வைத்திருக்க உதவும் என்பதை பற்றியும் அதில் 5 முக்கிய உறவுமுறையில் உள்ள புரிதல்களை பற்றி பார்ப்போம்.
1.கணவன்,மனைவி இருவரின் இடையேயுள்ள நம்பிக்கை.
காதல்/ திருமண பந்தங்களில் இணையும் இரு உள்ளங்களில், ஒருவர் மற்றொருவர் மீது வைப்பது நம்பிக்கை ஒன்றே. அன்பால் இணையும் இரு உள்ளங்களில் ஒருவர் இன்னொருவரின் மீது நம்பிக்கை வைப்பது இன்றியமையாத ஒன்றாகும். கணவன் தன் மனைவியின் ஒவ்வொரு செயல்களையும் செய்ய சுதந்திர உணர்வை அளிக்க வேண்டும். மனைவியின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். மனைவியின் உடைகள், அழகு சாதன பொருட்கள், நண்பர்கள், உறவுமுறைகள் என அனைத்திற்கும் அவளுக்கு சுதந்திர உணர்வினை அளிக்க வேண்டும். மனைவியின் குடும்பத்தினாருடன் சிரித்து பேசுதல், அவர்களுக்கும் சிறந்த மதிப்பளித்தல் தன் கணவன் மீதான அன்பை மேலும் அதிகரிக்கும்.
தன் கணவன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதனை உணரும் பெண் கணவனை அனைத்திற்கும் ஏன், தன் பெற்றோரை விட மேலாக பார்க்கிறாள் . நம்பிக்கை ஒன்று தான் ஆரோக்கியமான மன வாழ்விற்கு அடித்தளம். சிலர் அளவிற்கு அதிக அன்பினை பொலிவதாகக் கூறி கணவனோ? அல்லது மனைவியோ ஒருவரின் மேல் ஒருவர் சந்தேகம் கொள்கின்றனர். அதிலும் சிலர் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் சண்டையில் வந்து முடிகின்றனர். கணவன் – மனைவி உறவு என்றால் என்ன புரியாத புதிராகவே வாழ்ந்து வருகின்றனர். கற்பனைக்கும் எட்டா இந்த பிரபஞ்சத்தில், எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட பல்வேறான கிரகங்களில் ஒரே ஒரு அதிசயத்திலும் அதிசயமான நம் புவியில் ஆண், பெண் என்ற அன்பின் இனாமாய் தோன்றி, இந்த புவியின் அழகிய உறவு இதனை சற்று சிந்தித்து பார்த்தால் தெரியும் நாம் எவ்வளவு சிறப்பானவர்கள் என்று.
சண்டைகள், விவாதங்கள், குடும்ப நிலை, சமுதாய நிலை என அனைத்திலும் கணவன்,மனைவி பிரச்சனையின் தாக்கங்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. இருந்தபோதிலும் அதனை இருவரும் உணர்ந்து தங்களுக்குள்ளாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். இதனை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்வதே பிரச்சினை மற்றும் நம்பிக்கையின்மைக்கு அடித்தளமாய் ஆகிவிடுகிறது.
கணவன் செய்யும் செயலினை மனைவி சந்தேக பார்வையில் பார்பதனை விட கணவனுக்கும் சற்று சுதந்திர உணர்வினை வழங்க வேண்டும். அப்போது தான் தன் மனைவி தன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதனை கணவனும் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரிடையே பிரச்சனைக்கு ஒரு அச்சாரமாக நம்பிக்கையின்மை ஒரு அச்சாணியாக உள்ளது.
நாம் தேர்ந்தெடுக்கும் நம் வாழ்நாள் துணையிடம் நம்பிக்கை எனும் பாலத்தில் கைகோர்த்து ஒருவர் மற்றொருவர் மீது பார்வை செலுத்தி நம்பிக்கை எனும் பாதையை கடந்து இன்புற வாழ்ந்து, நம் சந்ததியினருக்கும் நம் வாழ்வின் மகத்துவத்தை கொண்டு சேர்ப்போம்.
2.கணவன் – மனைவி இடையே விட்டுக்கொடுத்தல் மற்றும் மதிப்பளித்தல்
உண்மையான மகிழ்ச்சி என நாம் ஆராய்ந்தால் அனைவரின் ஆராய்வு முடிவு கூறும் தியாகம் என்பதே, தியாகம் ஒன்றே உண்மையான நிரந்தர மகிழ்ச்சி. கணவன் மற்றும் மனைவி சிறு சிறு செயலுக்குள்ளும் தியாகம் என்பது இருப்பது நிம்மதியான வாழ்கைக்கு வழிநடத்திச் செல்லும். இருவரது உற்றார் உறவினர் என இருவரின் நிலை அறிந்து விட்டுக்கொடுக்கும் கணவன் மனைவி உறவுமுறை என்றும் இனிமையான வாழ்வில் வளம் பொங்கும்.
குடும்பத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போது கணவனோ, மனைவியோ தாமக முடிவெடுக்காமல் ஒருவரின் கருத்தை கவனித்து அதனை ஏற்றுக்கொள்ளும் போது அவ்விடம் சுகம் விளையும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தங்களது எண்ணங்களையும், அதன் வெளிப்பாட்டிற்கும் மதிப்பளிக்க வேண்டும். அவள் என்ன நினைக்கிறாள், அவளுக்கு என்ன பிடிக்கும், அவள் சந்தோசமாக இருக்கிறாளா? அவளுக்கு பிடித்ததை எவ்வாறு வாங்குவது , அவளை மேலும் நன்றாக, சந்தோசமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே கணவனுக்கு தோன்ற வேண்டும்.
திருமணம் தொடங்கி, தங்களது வாழ்நாளில் கணவன் மனைவி உறவில் இணைத்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து தன் சந்ததியினரை உருவாக்கி, அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருந்து குடும்பத்தினை நாள்தோறும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று தாங்கள் வாழ்ந்த வாழ்வின் பதையினை திரும்பி பார்க்கும் போது இருவரின் தியாகம் நினைவுகள் எனும் மலர் தூவிய பதைகளாய் மாறி வாழ்வின் மகத்துவத்தை அடைந்த சாதனையாய் காட்சியளிக்கும்.
இன்றைய காலத்தில் கணவன் மற்றும் மனைவி ஒருவருக்கொருவர் மற்றொருவர் மீது மரியாதை வைப்பது, மதிப்பளிப்பது முக்கியமானது அதுதான் அன்பின் கைப்பிடி. மரியாதை அளிக்கும் போதுதான் இருவரிடம் உள்ள தியாக உணர்வு வெளிப்பட்டு நிற்கும் , தியாக உணர்வு வெளிப்பட்டால் தான் எண்ணங்கள் பரிமாற்றம் இருவரிடையே வெளிப்படும் அதோடு வாழ்வும் சொர்க்கமாக மாறும்.
3.கணவன்/மனைவி இடையேயுள்ள அன்யோநிய உறவு:
ஒவ்வொரு நாட்டிலும் சில முறைகளின் படி திருமணம் நடைபெறுகிறது. காதலித்து திருமணம் செய்கின்றனர். சிலர் பெற்றோர் பார்த்தb பொண்ணையோ, ஆணையோ, திருமணம் செய்கின்றனர். எவ்வாறு இருப்பினும் கணவன்/ மனைவி இருவரிடையேயான அன்யோன்ய உறவு எவ்வாறு சிறக்க வேண்டும் , அந்யோனிய உறவு என்பது ஏதோ நாம் நினைக்கு அளவிற்கு இல்லை அது இருவரிடையேயுள்ள உறவிற்கும் அப்பாற்பட்டது.
ஒரு பெண் ஆணிடத்திலும், ஒரு ஆண் பெண்ணிடத்திலும், மனதால் பேசும் மொழி, இரு கண்களில் பரிமாறப்படும் காந்த ஈர்ப்பலை, அவனது கண்களுக்கோ அவளது கண்களுக்கோ இவ்வுலகில் அழகே நீதான் என் உயிரே என்று தோன்றச் செய்யும் அன்பின் வெளிப்பாடு, அவளுக்கும், அவனுக்கும், இருவரது உடை, நடை, செய்யும் செயல், அவள்/ அவனது உடலில் உள்ள மணம் என அனைத்தையும், புரிந்துணர்ந்து சேரும் உறவுமுறை இவையெல்லாம் ஒன்று சேர்ந்து உருவாகும். மனதால் இணையும் போதுதான் கணவன், மனைவி இடையே அந்யோனிய உறவு ஏற்படுகின்றது.
ஆண்/பெண் இருவரிடையே உள்ள இந்த அந்யோனிய பந்தம் தான், வாழ்வில் இவள்/ இவன் தான் நம் நம்பிக்கை எனவும், இவர்களோடு வாழ்ந்து விடலாம் கொடுக்கிறது. உடலால் வலிமை இவள்/ என்வும், வாழ்வினை விலாம் என்ற தன்னம்பிக்கை கொடுக்கிறது. உடலால் ஒன்று சேரும் போது மனதால் வலிமை பெறும் உறவு கணவன் /மனைவி உறவு, மிகவும் புனிதமான உறவில் முதன்மை யாதெனில் கீழ்கண்டவாறு கூறலாம், கணவன், மனைவி உறவே அன்பின் வித்து என்று கூறுவதில் தவறில்லை. கணவன் வேலைக்கு சென்று திருப்பும் வரை, என்னதான் இருவரும் வேலையில் ஈடுபட்டாலும், தன் பாதி மனதினை எண்ணி மனம் ஊசலாடும். வெகுநேரம் கழித்து இரு மனமும் சந்திக்கு போது, ஏற்படும் உற்சாகம் இவ்வுலகில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஈடாகாது.
கணவன் -மனைவி உறவில் இணையும் அனைவரும் முதலில் தங்களது துணையினை அவரவர் விருப்பத்திலும், பிறரது தூண்டுதல் இல்லாமல் தேர்ந்தெடுங்கள். அப்போது தான் தங்களது எண்ணப்படி, தங்களது துணையுடன் இன்புற்று வாழ முடியும். கணவன், மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் உண்மையாக வாழ்வில் வாழ வழி ஒன்றே, அதுவே நம்பிக்கை, கணவன், மனைவி அந்யோனிய வாழ்வில் அசைக்க முடியாத இணைப்பு கம்பியாக உள்ளது. எனவே இருவரும் ஒருவரை ஒருவர் எல்லையில்லா இன்பத்தையும், உனக்கு என்ன தேவை, எனக்கு என்ன தேவை என்பதனை அறிந்து திகட்ட திகட்ட அன்யோனிய உறவின் பழச்சாறினை சிதறாமல் பருகுங்கள், வாழ்வு என்றும் தித்திப்பாக அமையும்.
4. கணவன் – மனைவி இன்பச் சுற்றுலா
கணவன் மனைவி இருவருக்கும் பிடித்த என்றும் வாழ்வினில் நினைவு கூறத்தக்க இனிய மலரும் நினைவுகள் எதுவென்றால் அது இருவரும் தங்களது வாழ்நாளில் பயணித்த, சுற்றுலா சென்று வந்த இடங்கள் தான். இதில் கணவனுக்கே முக்கிய பங்கு உண்டு. கணவன் தன் மனைவியை, அவளுக்கு பிடித்த இடங்களான, Coffee shop, Restaurant, Resort, tour, picnic, என அவ்வபோது அவளை கூட்டிச் செல்ல வேண்டும். கணவன், மனைவி இருவரு ஜன்னலோரம், குளிர்ந்த காற்று வீச, இனிமையான பாடலைக் கேட்டு இயற்கை அழகை இரசித்த படி, இருவரும் கை கைக்கோர்த்து. சுற்றுலா பயணம் மேற்கொண்டால், அது ஒரு சொல்ல முடியாத, சொல்லி முடிக்க முடியாத இன்பம் – இதனை ஒவ்வொரு கணவன், மனைவியும் விரயம் செய்திட கூடாது.
சுற்றுலா செல்லும்பொது, அங்குள்ள அழகிய காட்சிகள், இயற்கையான காடுகள் வித்தியாசமான உணவுகள், தங்குமிடங்கள் என அணைத்திலும் உள்ள அனுபவம் கணவண்/மனைவி உறவினை மேலும் சிற்றபடையச் செய்யும். யாரும் இடையூறு இல்லா ஒரு புதிய இயற்கை சூழலில் சுற்றி யாருமில்லா அழகிய பூக்ககள் நிறைந்த இடத்திலோ, ஏரியின் நடுவிலோ இருவரும் தங்களது எண்ணங்களை பரிமாறிகொள்ளும் போது அது இரு மனதின் உள்ளார்ந்த வார்த்தை மொழியாக வெளிப்பட்டு நிலையாக இருக்கும். வாழ்வில் இது போதும் இந்த நிமிடம் போதும், இந்த தருணம் போதும், இந்த கணம் போதும் உன்னோடு, நானும் என்னோடு நீயும் என்றும் உயிர் உன்ளவரை, இவ்வுயிர் பிரிந்தாலும், உன்னுடன் போகட்டும் என்ற உணர்வினை ஏற்படுத்தும். பயணம் ஒருவரது வாழ்வில், ஊக்கத்தையும் மேன்மேல் முன்னேற்றத்தையும் அளிக்கும், அதும் கணவன் /மனைவி இடையே உள்ள பயணம் அவர்களது உறவினை ஆணிவேர் போல் ஊன்றச் செய்யும் அது வழ்வினில் எவ்வாறான சூழ்நிலையையும், கடந்து வர உதவும்.
கணவன், மனைவி உறவில், ஒருவர் மற்றொருவருக்கு எப்போதும் மகிழ்ச்சியை வழங்கிட வேண்டும் இந்த எண்ணம் எவ்வயது ஆனாலும் தொடர வேண்டும். எனவே கணவன், மனைவி இருவரும் முடிந்த வரை சுற்றுலா சென்று தங்களின் அன்பின் பாதிக்கு மகிழ்ச்சியினையும் புதுபுது வியபினையும் ஏற்படுத்தி கொடுத்து வாழ்வினில் சுகமடையுங்கள்.
5. உளவியல் ரீதியான உறவுமுறை
கணவன் மற்றும் மனைவி இருவரின் மணம் அறிந்து, அவர்களது தேவைகளை ஒருவர் மற்றொருவர் பூர்த்தி செய்தல் என்பது முக்கியமான ஒன்று. மனைவியோ, கணவனோ தங்களது வீட்டில் அல்லது வெளியில் வேலை செய்து வரும் போது அவர்களுக்கு, உடல் அசதி உள்ளதா, அதற்கு தேவையான உதவி செய்யலாமா, கை கால், தேய்த்து விடுதல், முடிகளை கோதி விடுதல் சில சில நேரங்களில் சிறு சிறு முத்தமிடுதல் போன்ற செயல்கள் அவர்களை என்னதான் சோம்பேறியாய் இருந்தாலும் சுறுசுறுப்பாக்கும்
அவள் மற்றும் அவனது, எண்ணங்களை வெளிப்படுத்து கண்ணாடியாக இருவரும் இருக்க வேண்டும்.சில நேரங்களில் தவிர்க்க முடியாத பிரச்சனைகள் உருவாகும் போதும் சண்டையிட்டாலும் பிறகு, இருவரும் ஒன்று சேர்தலே நன்று இல்லை யாரேனும் ஒருவர் முன் சென்று சமாதானம் செய்வது வாழ்வினை செழிக்கச் செய்யும். கணவன்- மனைவி உறவில் Ego என்பது வாழ்வினை சிதைத்து விடும் மாறாக எண்ணங்களை புரிந்து அதற்கு ஏற்றார் போல் மனதினை அமைதியாக வைத்து போசித்து முடிவெடுத்து வாழ்வினை வாழ வேண்டும் இருவரிடையே சுய ஒழுக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனக்கு என்ற அவள் மற்றும் அவனுக்கு ஒழுக்க உணர்வு தலை தூக்கி இருக்க வேண்டும். கணவன் மற்றும் மனைவி உறவில் இது Sensitive வான ஒன்று இன்று பெரும்பாலும் கணவன் – மனைவி ஒழுக்க உறவுமுறையில் தான் பிறச்சனைகள் குவிகின்றன. எனவே, இருவருள் குழுக்க நெறிமுறை என்பது கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.
இருவரும் ஒருவரையொருவர் மகிழ்ச்சியளித்த்தும், விட்டுக்கொடுத்தும் இருவரின் எண்ணங்களை புரிந்து, அன்புடன் வாழ கற்றுக்கொண்டால் கணவன் மனைவி உறவில் பிரச்சினையே இருக்காது.
“கணவண் – மனைவி உறவுமுறை என்றும் அழியா உறவுமுறை அது கடவுளின் வரத்திற்கும் மேலானது, அன்பின் பிறப்பிடத்திற்கும் மேலானது அதனை கைகோர்த்து கொண்டு இன்பமான வாழ்ந்தால் வாழ்வு வளமாக மாறும்.