குழந்தைகளுக்கு நூடுல்ஸ் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களே! இதைப் படியுங்கள்….

Visitors have accessed this post 382 times.

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களே! இதைப் படியுங்கள்…. 

 

இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் கடைகளில் ஒரு ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பொருள் இன்று அனைவரது மளிகை சாமான் ரசீதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதுமே வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு பொருள் தான் நூடுல்ஸ். ஆனால் நம் நாட்டிலோ அதைவைத்து பல மடங்கு வணிகம் செய்து வருகின்றனர் பலர்.

 

 குப்பை உணவு, சத்துஇல்லாதது உடலுக்கு தீங்கானது என அனைவராலும் ஒதுக்கப்பட்ட ஒரு உணவு வகை தான் நூடுல்ஸ்.

 

 நூடுல்ஸில் அதிக விற்பனைக்கு காரணம் என்ன?

 

 உணவியல் நிபுணர்கள் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஒதுக்கப்பட வேண்டிய உணவு என்று ஓரங்கட்டி வைத்திருந்த நூடுல்ஸ் எப்படி இப்படி ஒரு வியாபாரப் பொருளாக மாறியது??? அதற்கான காரணம் என்னவென்றால் அது குழந்தைகளை பெரிதும் கவர்ந்து இழுக்கிறது. அதன் சுவை அவர்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டுகிறது.

 

 சந்தைக்கு வரும் எந்த ஒரு பொருளையும் முதலில் குழந்தைகள் ஆசைப்படும் பொருளாக மாற்றி விட்டால் போதும்அதில் எந்தவித சத்துக்கள் இல்லை என்றாலும் அதன் விற்பனை அமோகமாக இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் இந்த நூடுல்ஸ்.

 

 ஆரம்ப காலகட்டங்களில் நூடுல்ஸை பார்த்தவுடன் இது என்ன புழு புழுவாய் இருக்கிறது என்று அருவருப்பு பட்டனர் மக்கள். ஆனால் ” இருடா கண்ணா இதோ இரண்டே நிமிஷம் “என்று பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தி அதன்பின் மூக்கை துளைக்கும் நம்முடைய ஊரின் மசாலா வாசத்தையும் அதனுடன் சேர்த்து போட்டவுடனே வியாபாரம் கோடி கோடியாகக் கொட்டத் தொடங்கியது இந்த நூடுல்சுக்கு.

 

 நூடுல்ஸில் உள்ள அபாயகரமான வேதிப்பொருள் என்ன?

 

இரண்டே நிமிடங்களில் தட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவும், வாசம் மூக்கை துளைப்பதற்கும் அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் தான் காரணம்.

 நூடுல்ஸில் வாசனைக்காக சேர்க்கப்படும் மோனோசோடியம் குளுட்டோமேட் எனும் வேதிப்பொருள். இது குழந்தைகளின் உடலுக்கு பலவித தீமைகளை செய்கின்றன. இதை அஜினமோட்டோ என்றும் கூறுவார்கள்.

 

 அஜினமோட்டோ வின் ஆபத்துக்கள் 

 

வருஷத்துக்கு பல மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்படும் இந்த மோனோ சோடியம் குளுட்டோமேட் தரும் விளைவுகள் அபாயகரமானதாக இருக்கிறது.

 

 மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் வரை பாதிப்பு தரக்கூடியது இந்த அஜினமோட்டோ.

 

 முதலில் சாதாரண வாந்தி, வயிற்றுவலி இவற்றில்தான் தொடங்கும் இறுதியாக அறிவாற்றலை சிதைத்து பல்வேறு கோளாறுகளை உருவாக்கக்கூடியது இந்த அஜினமோட்டோ என்கிறது பல அறிவியல் ஆய்வுகள்.

 

 மனிதனது ஒருவேளை உணவில் சராசரியாக 3 கிராம் அஜினமோட்டோ சேர்க்கப்படுவதால் நெஞ்சு வலி, தலை வலி குமட்டல், கை கால் மரத்துப் போதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

 

 அஜினமோட்டோ வேறு எங்கு பயன்படுகிறது?

 

 இந்த மோனோசோடியம் குளுட்டோமேட் எனப்படும் அஜினமோட்டோ நூடுல்சில் மட்டுமல்ல பல துரித உணவுகளிலும் பிரைட்ரைஸ், பல சைனீஸ் உணவகங்களிலும் ஏராளமான உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பல இல்லத்தரசிகளும் நானும் காய்கறிகளை போட்டு தான் ப்ரைட் ரைஸ் செய்கிறேன் ஆனால் கடைகளில் இருக்கும் அந்த சுவை வருவதே இல்லை என்று அலுத்துக் கொள்வார்கள். அந்த சுவைக்கு காரணம் என்றால் அதில் கலக்கப்படும் அஜினமோட்டோ என்ற விஷப் பொருள் தான்.

 

 அஜினமோட்டோ எங்கிருந்து கிடைக்கிறது 

 

இந்த வேதிப்பொருள் கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கின் உபரி பொருள்களிலிருந்து கிடைப்பதுதான் அஜினமோட்டோ.

 

 பல கார்ப்பரேட் வியாபாரக் கூட்டங்கள் அஜினமோட்டோ ஆபத்தானது என எந்த அறிவியல் ஆய்வும் சொல்லவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் அமெரிக்க உணவுக் கட்டுப்பாட்டுத் துறை ” கொஞ்சம் பார்த்து பயன்படுத்துங்க” இதில் மசோடியம் குளூட்டாமேட் சேர்த்து இருக்கிறோம் என்று எச்சரிக்கிறார்கள் நூடுல்ஸின் பின்புற அட்டையில் ஆனால், இவ்வளவு ஆபத்துகள் இருப்பது தெரிந்தும் நூடுல்சை விட்டு விலக கூட நாம் நினைப்பதில்லை.

 

 குழந்தைகள் மற்ற உணவுகளை வெறுக்க காரணமாக இருக்கிறது

 

 உடல் எடையை கூட்டி மற்ற சாப்பாட்டு வகையை மறக்கவும், மறுக்கவும் வைக்கும் இந்த நூடுல்ஸ் நம் குழந்தைகளுக்கு தேவையா ?என்று யோசித்துப் பாருங்கள்….

 

ஆபத்து விளைவிக்கும் அஜினமோட்டோ என்ற விஷத்தை நம் கைகளாலேயே குழந்தைக்கு கொடுக்க வைக்கிறது இந்த நவீன அறிவியல் உலகம். அவசர உலகின் ஆதிக்கத்தில் இருக்கும் நாம் அனைவரும் இதைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மட்டும்தான் வருங்கால சந்ததி வளமுடன் வாழ முடியும். 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam