Visitors have accessed this post 766 times.
தேவையானப் பொருட்கள் :
கேழ்வரகு மாவு 2 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் அரை கப்
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்புன்
பொடித்த முந்திரி 2 டேபிள்ஸ்புன் (நெய்யில் வறுத்தது)
நெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து வரும்வரை அடுப்பில் வைத்து இறக்கவும் பின்பு நன்கு வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.பின்னர் வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
பிறகு கேழ்வரகு மாவு சேர்த்து நன்கு கிளறிக் கொண்டு இருக்கவும் ரொட்டி பதத்திற்கு வரும் வரை கிளறவும் பின்பு இத்துடன் ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.கடைசியாக வாழை இலையில் அல்லது ஒரு தட்டில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்தங்கள் தேவைக்கு ஏற்ப அளவில் தட்டி எடுத்தும் கொள்ளலாம் பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சுடானதும் தட்டி வைத்த அடைகளைப் போட்டு, சுற்றிலும் சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சத்து நிறைந்த கேழ்வரகு இனிப்பு அடை தயார்.
பயன்கள்
கேழ்வரகின் தாயகம் எத்தியோப்பியா இதன் அறிவியல் பெயர் ‘ எல்லுசீன் குரோகனோ’
இது வறண்ட நிலத்திலும் மற்றும் மிதமான வெப்பத்திலும் வளரக்கூடியவை இந்தியாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து கேழ்வரகு பயிரிடப்படுகின்றன.தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அரிசி மற்றும் கோதுமை இவ்வளவு முதன்மை உணவு பொருளாக உள்ளது அதற்கு மாற்றாக தான் சிறு தானிய பொருட்கள் உள்ளன அவற்றுள் ஒன்றான கேழ்வரகு இவற்றில் கார்போஹைட்ரேட் மற்றும் அதிகமான புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை அடங்கி உள்ளன.இந்தக் கேழ்வரகு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது பின்பு எலும்பு அடர்த்தியாக வளர்வதற்கு உதவி செய்கிறது. இதில் வலைன் அமினோ அமிலம் திசுக்களின் செயல்பாட்டிற்கும் தசைகளுக்கு வலுவூட்ட பயன்படுகிறது. இவை இயற்கையாகவே இரும்புச் சத்து உடையது எனவே ரத்த சோகைக்கு இது பயனளிக்கிறது. நரம்பு மண்டல செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது இதயத்தை பலப்படுத்துகிறது.
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்துக் கொண்டால் கல்லீரல் நோய்கள்,ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு இது உதவுகிறது.புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருந்தால் அடிக்கடி உணவில் கேழ்வரகு சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.கேழ்வரகு கூழ் குடித்தால் தோல் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கிறது. இது சிறுநீரகம் மற்றும் நுரையீரல் உள்ள கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுக்கிறது.
கேழ்வரகு குறைவான கொழுப்புகளை உள்ளடக்கியுள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 1.5% கொழுப்பு தான் உள்ளது.உடலுக்கு தேவையான கால்சியம் இதில் அதிக அளவு உள்ளது. இத்தகைய பயன்தரக்கூடிய கேழ்வரகை தங்கள் அன்றாட வாழ்வின் சேர்த்து பயன்பெறுங்கள்.