Visitors have accessed this post 318 times.
சரியும் விருட்சமும் சாந்தி பரிகாரமும்
நவீன உலகின் மாயத் தோற்றம் விலகி, தெய்ய்வீக நெறியில் உலகம் குறிப்பாக நம் யாழ்ப்பாணதிருநகரம், சுபீட்சம் அடைய ஒரு கடவுள் வரமாகக் கருதி இந்த ஆன்மீகக் கட்டுரையை எழுதி, பொது வெளியில் உலா வரச் சமர்ப்பணம் செய்கிறேன் ஒரு முக்கியமான விடயம் குறித்து இப்போது , இன்றைய மிக மோசமான கால கட்டத்தில் இதை ஒரு இறை பணியாகக் கருதி எழுத வேண்டியது எனக்கு ஒரு தார்மீகக் கடமையாகிறது. இடையூறற்ற என் எழுத்துத் தவத்தைப் பூரண நிலைக்குக் கொண்டு வர இதை நான் அர்பணிப்புடன் எழுதிச் சமர்பிக்கிறேன். சிமார்ட் போனும் கையயுமாக உழன்று சகதி குளித்தே வீழ்ந்து போகும் ,அப்பாவி இளம் சந்ததியினரை நினைத்து ,நான் மிகவும் மனம் வருந்து கிறேன். ஆன்ம ஞானத்தை அருளுவதன் மூலமே இவர்களை மீட்டெடுக்க முடியுமென்று நான் நம்புகிறேன். ஆன்மா என்றால் என்ன என்று கேட்கிற பாமர உலகம் இது இன்றைய தமிழ் இளைய தலைமுறையினரிடம் இதைப் பற்றிக் கேட்டால் விழி பிதுங்குவார்கள். கடவுளும் அவரைப் பிரதிபலிக்கிற ஆன்மாவும், இன்று வெறும் கேள்வியளவில் தான். நவீன நாகரீக வசதிகள் பெருகிய இக் காலத்தில் ,வெளிநாட்டு மோகம் இங்கே எம் மண்ணில் தலையெடுத்த, பின், நாம் தாரை வார்த்துக் கொடுத்த விடயங்களை நினைத்தா.ல் தலையைச் சுற்றும். அப்படி நேர்ந்தாலு,ம் ,புறம் தள்ளி மறந்து விட வேண்டிய விடயங்களல்ல இவை. ஆன்மாவைப் பேணி கடவுளை வழிபடுகிறவர்களால், அப்ப டி இருக்கவும் முடியாது. ஏனென்றால் இது எங்கள் இரத்தத்தில் ஊறிய விடயம் ..நாம் அப்படி ஆன்ம சமாச்சாரங்கள் கொடி கட்டிப் பறக்க வாழ்ந்திருக்கி றோம். இவை பொய்த்துப் போனால் ,நாமும் மடிந்து போன மாதிரித் தான். ஜடம் வெறித்து காட்டிலே நமக்கு வேலையில்லை.
நமது நாட்டில் சிறீலங்காவின் யாழ்ப்பாணத் திருநகரமே இன்று வெறிச்சோடிக் களையிழந்து விட்ட மாதிரி உணர்கிறேன். பணம் வந்தும் வாழ்க்கை மறு துருவத்தில் தான் என்று சொன்னால் பலருக்கு மனம் வாடும் ஆனால் இது தான் உண்மை. வேரறுந்து வீழ்ந்து விட்ட ஒரு விருட்சத்தைத் தான் இப்போது நான் காண்கிறேன் இது தான் நிதர்ஸனமாக் கண் எதிரே, தெரிகிற கசப்பான உண்மை. . இனிக் கடவுளே வந்தாலும் , நம்மைக் காப்பாற , முடியாமல், கப்பல் கவிழ்ந்து கிடக்கிறது. ஆம் நம் இளைய சமுதாயம் சேறு குளித்து எழுவதை, போதை தலைக்கேறி வீழ்ந்து மடிவதை ஜீரணிப்பதே, கஷ்டமாக உள்ளது எனக்கு. .போதை மருந்து பாவனையால் இளைஞர்கள் வாழ்வே கேள்விக் குறியாகி விட்டது இன்று யாழ்ப்பாணத்தில் இவர்களை இந்த சகதியிலிருந்து மீட்டேடுத்துக் காப்பாற்ற ,ஓர் அவதாரபுருஷன் தான் இனிப் பிறக்க வேண்டும் .. போதை மருந்து வியாபாரம் களை கட்டி நடந்து கொண்டிருந்தாலும், வீழ்வது என்னவோ விருட்சம் தான் ,இதை தூக்கி நிறுத்த ஓர் அவதார புருஷன் தான் பிறக்க வேண்டும், அப்படிப் பிறக்க வேண்டுமென்ற இந்தப் பிராத்தனையை மனமுருகிச் செய்தவாறே, இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்..