Visitors have accessed this post 730 times.

சான்றோர் வளர்த்த தமிழ்

Visitors have accessed this post 730 times.

சான்றோர் வளர்த்த தமிழ் கட்டுரை

 

தமிழ் மொழியின் தனித்தன்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

1.    முன்னுரை

2.    தமிழின் தொன்மை

3.    தமிழின் சிறப்பு

4.    தமிழைப் பாதுகாப்போம்

5.    முடிவுரை

முன்னுரை

ஓவ்வொரு மனிதனும் தன்னுடைய உணர்வுகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள மொழி அவசியமாகும்.இடையர் மற்றும் வேடர்யுகத்தில் வாழ்ந்த ஆதி மனிதன் ஒலியெழுப்புவதன் மூலமும் அதன் பின்னர் வாழ்ந்த மனிதன் சைகை மூலமும் தனது கருத்துக்களை பரிமாறினான்.பின்பு அந்த சைகை மொழிக்கு ஒலி வடிவம் கொடுத்தன் மூலம் உருவான மொழியானது படிப்படியாக வளர்ச்சியடைந்து, இன்றைய நவீன யுகத்தில் ஏறத்தாழ 7000ற்கு மேற்பட்ட மொழிகள் உலகெங்கிலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.அவற்றுள் பபிலோனிய மொழி, கிரேக்க மொழி மற்றும் தமிழ்மொழி ஆகியன தொன்மை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.இவற்றுள் தமிழ்மொழியானது மிகவும் தனித்தன்மையானது இதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

தமிழின் தொன்மை

உலகில் வாழ்கின்ற கோடிக்கணக்கான தமிழர்களின் தாய்மொழியாக விளங்குகின்ற தமிழானது குமரிக்கண்டத்தில் தோற்றம் பெற்றதாக நம்பப்படுகின்றது.பிற்காலத்தில் குமரிக்கண்டமானது நீரில் மூழ்கி அழிவடைந்து போனாலும், அதன் எஞ்சியிருந்த நிலப்பரப்புக்களில் வாழ்ந்த தமிழர்கள் கடல் கடந்து அண்டை நாடுகளிற்கு சென்று அங்கும் தமிழின் புகழைப் பரப்பினார்கள்.இவ்வாறு தமிழானது பல்வேறு ஆண்டுகளாக படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்றைய நவீன வடிவத்தை எட்டியுள்ளது.தமிழின் பெருமையை புராணங்கள்கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன்தோன்றி பிறந்த மூத்தகுடிஎன்று தமிழரை குறிப்பிடுவதனூடாக இந்த உலகம் தோற்றம் பெற்றபோதே தமிழும் தோன்றிவிட்டதாக குறிப்பிடுகின்றன.இத்தகைய தொன்மை வாய்ந்த தமிழானது பல்வேறு சிறப்புக்களையும், தனித்தன்மையையும் தன்னகத்தே கொண்டது.

தமிழின் சிறப்பு

தமிழர்களின் தாய்மொழியாக விளங்குகின்ற தமிழ் மொழியின் சிறப்புக்களை ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இலக்கியங்கள் ஊடாக பல அறிஞர்களும், புலவர்களும் எடுத்தியம்புகின்றனர்.மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் சிறப்புக்களை போற்றிப் பாடியுள்ள புலவர்களுள் பாரதியார், பாவேந்தர், மற்றும் திருவள்ளுவர் ஆகியோர் முக்கியமானவர்களாவார்.மக்களின் எழிச்சி கவிஞனாக போற்றப்படுகின்ற பாரதியார்யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்என்றும், “சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பாஎன்றும் குறிப்பிடுகின்றார்.அதாவது மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிமையான மொழி இவ்வுலகில் இல்லை அத்தகைய பெருமை வாய்ந்த தமிழை போற்றித் தொழுது கற்றுக்கும்படி அறிவுறுத்துகின்றார்.அத்துடன்தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்என்று பாவேந்தர் பாரதிதாசன் தமிழானது தமிழ் பேசும் மக்களின் உயிர் மூச்சு போன்றது என தமிழை பெருமைப்படுத்துகின்றார்.பெரும் புகழ் கொண்ட காவியமான இராமயணத்தில் தமிழ் மொழியியைமதுரமான மொழிஎன கவிச்சக்கரவர்த்தி கம்பர் அவர்கள் குறிப்பிடுகின்றார்.தமிழ் மொழியானது மொத்தமாக 247 எழுத்துக்களை கொண்டுள்ளது. அந்த எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், வல்லினம், இடையினம், மெல்லினம் என பலவகையாக பிரிக்கப்பட்டுள்ளன.படிப்பதற்கும், பேசுவதற்கும் எளிமையானதும் இனிமையானதுமான மொழியும் இதுவே.இவ்வாறு தமிழின் பெருமை கூறக்கூற வற்றாத நதி போல தோன்றிக் கொண்டே இருக்கும். அத்தகைய சிறப்பும் தொன்மையும் கொண்டது தமிழ்.

தமிழைக் காப்போம்

தமிழர்களிற்கு உயிராகவும், உயிர் மூச்சாகவும் விளங்கும் தமிழானது இன்று தமிழ் பேசுவது அவமானம் என கருதும் அளவிற்கு அழிவடைந்து வருகின்றது.பிறமொழிகள் மீதான மோகமும், கலாசார மாற்றங்களும் தமிழை இரண்டாம் மொழியாக கருதுவதற்கு உறுதுணையாக அமைகின்றன.தமிழர்களின் பாரம்பரியமான கலாசாரமானது தமிழ்மொழியை அடிப்படையாக வைத்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்மொழியின் அழிவானது தமிழ்கலாசாரத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும். எனவே தமிழ்மொழியை பாதுகாப்பது அவசியமாகும்.இன்றைய நவீன உலகில் ஆங்கில மொழியே அத்தியாவசியமாகக் காணப்படுகின்றது. ஆங்கில வழிக்கல்வி, ஆங்கில மொழியிலான வேலைவாய்ப்புக்கள், அந்நிய வாழ்க்கை முறையின் மீதான அதீத ஈர்ப்பு போன்றன ஆங்கில மொழிக்கான தேவையை உருவாக்குகின்றன. இதனால் தமிழின் தேவையானது குறைவடைகின்றது.இந்நிலை மாறவேண்டுமாயின் தாய்மொழிக் கல்வியானது ஊக்குவிக்கப்படுவதோடு, தமிழ்மொழியை சிறுவயது முதலே குழந்தைகளிற்கு பேசக் கற்றுத்தர வேண்டும்.உலகின் மிகத் தொன்மையான மொழியாகிய தமிழை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

முடிவுரை

உயரிய மொழியாகிய தமிழைக் காக்க முடிந்தவரை பிறமொழி சொற்களை கலக்காது தூய தமிழில் பேசுவதோடு, தமிழின் அரிய நூல்களை பேணிபாதுகாக்க வேண்டும்.“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குஎன்று பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டது போன்று தமிழை நமது வளமாக போற்றி அதன் தனித்தன்மையை காப்போமாக.

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam