Visitors have accessed this post 483 times.
- சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும் வழிமுறை
சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும் வழிமுறைகளை அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் வழிகாட்டிய சிறு குறிப்புகளை இப்பகுதியில் பார்ப்போம்.
தற்போதைய காலகட்டத்தில் சிறுநீரகத்தில் கல் இருப்பின் அதனை அறுவை சிகிச்சை மூலமாகவோ அல்லது மருந்து மாத்திரை மூலமாகவோ குணப்படுத்த இயலும் என்பது அனைவருக்கும் தெரிந்தவையே.
இருப்பினும் தன் வறுமையின் காரணமாகவும் தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும் தான் சம்பாதித்தவையை தனது சிகிச்சைக்காகவும், மருந்து மாத்திரைகளு௧்கும் செலவு செய்ய இயலாமல் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடும்பத்திற்காக செலவு செய்து வாழும் சில மக்களுக்காகவும் , ஆங்கில வழி மருத்துவத்தை விரும்பாத சில மக்களுக்காகவும் தான் இப்பதிவு…
சிறுநீர் கற்களை எளிதில் கரைக்கும் அதிசய பூ என்று கூறினேன் அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ம௧்களே ?…
அந்த அதிசய பூவின் பெயர் பூளைப் பூ. மேலும் இது சிறு கண் பீளை.‘பூளைப்பூ,’பொங்கல் பூ’,‘சிறு பீளை’என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இது உண்மையில் அதிசய பூவே ஆகும் ஏனென்றால் இச்செடியில் தண்டு வேர் பூ இலை என அனைத்தும் சிறுநீர் கற்களை எழுதிய கரைக்கும் தன்மையை கொண்டது. அதுமட்டுமல்லாமல் சிறுநீரை பெருக்கும் தன்மையைக் கொண்டது.
பூளைப் பூவை நன்றாக வெயிலில் காய வைத்து தூசி ஏதுமின்றி பவுடராக அரைத்துக் கொள்ளவும். இந்த மருந்து சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள் நண்பர்களே!…
மருந்து தயாரிக்கும் முறை :
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 டம்ளர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு பூளைப் பூ பவுடரை போட்டு மெதுவான தீயில் நன்றாக கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதித்து ஒரு டம்ளர் அளவிற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு அதில் சிறிதளவு நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது பனைவெல்லம் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து காபி போன்று காலை மாலை என இரு வேளை குடிக்க வேண்டும்.
- காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- இரவு உணவு உண்பதற்கு முன்பு அதாவது மாலையில் 6 மணி போன்ற அளவில் சிறிதளவு வயிறு காலியாக இருக்கும்போது வேறு எதையும் உண்ணாமல் இவ்வாறு குடித்து வந்தால் சிறுநீரகக் கல் என்பது இருந்த இடம் தெரியாமல் கரைந்து ஓடிவிடும்.
நண்பர்களே மீண்டும் ஞாபகப் படுத்துகிறேன் சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும் வழிமுறைகள் பல இருப்பினும் அனைத்தையும் விட இதுவே அதிக பலன் தரும் மறந்துவிடாதீர்கள்.
உங்களுக்கு தெரிந்த இந்த குறிப்பை பலரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். தேவையுள்ள அனைவருக்கும் பயன் பெறட்டும். ஏனோ இன்று எனக்கு இந்தப் பதிவை பதிவிட வேண்டும் என்று தோன்றியது அதற்கு காரணம் எனது தம்பி..
ஏனென்றால் அவனுக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது எங்களது இன்றே தெரியவந்துள்ளது. இதுவே நான் இப்பதிவை யிட காரணம்……
சிறுநீரக கற்களால் பாதிக்கப்படும் பலருக்கும் இப்பதிவு நன்மை தரும் என்று நம்பி விடைபெறுகிறேன். உங்களுக்கு இந்த சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும் வழிமுறை பதிவு பிடித்திருந்தால் கமெண்ட் பண்ணுங்கள் நண்பர்களே …..
நன்றி!……
Hi