Visitors have accessed this post 779 times.
மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான இந்த பூமியின் தூய்மையை கட்டுக்குள் வைத்திருக்கு சிறுமுயற்சி செய்கிறாரோ,அவரே இன்றைய காலகட்டத்தின் சிறந்த மனிதராக போற்றப்படுகிறார்.
இயற்கைக்கு நமக்கு உகந்த பல கொடைகளை வழங்கியுள்ளது தூய்மையான காற்று ,தூய குடிநீர் ,சுகாதாரமான வீட்டு சூழல் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது,ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் காற்று மாசு ,நீர்மாசு ,மண் மாசு என மனிதன் தன் சுயநலத்திற்க்காக இந்த பூமியின் வயிற்றில் தீராத வடுவை ஏற்படுத்திவிட்டான் ,இதன் காரணமாக எப்போதும் இல்லாத அளவுக்கு இயற்க்கை பேரிடர்கள் ,தீரா தொடர் நோய்கள் என மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள் அரங்கேற தொடங்கிவிட்டதா,இவற்றை கட்டுக்குள் வரவழைக்கும் முதல் படி சுற்றுப்புற தூய்மையே ஆகும்
சுற்றுப்புற தூய்மையை கடை பிடிக்க வேண்டிய அவசியம்
நான் எனது வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன் ஆனால் எனது தெருவை சுத்தமாக வைக்க அரசின் உதவி வேண்டும் என்ற நிலைப்பாடே சுற்றுப்புற சீர்கேட்டிற்கு முதற்படியாகும் ,மக்களுக்கு சேவை செய்யும் அரசு எவ்வளவு முயன்றாலும் இந்த தனி மனித சுகாதாரம் கொடுக்கும் தீர்வுக்கு ஈடு ஆகாது.வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்ற அதை வீதியில் தள்ளுவது மிக பெரிய கொடூர சிந்தனையாகும் ,நம் வீடு என்ற எண்ணத்தை மாற்றி எனது தெரு என்ற எண்ணத்திற்ற்கு மாறுவதே முதல் படியாகும் ,பின் எனது ஊர் ,எனது நாடு ,எனது உலகம் என்று தொடர் செயல்பாடுகளால் இந்த பூமி மீண்டும் மனிதர்க்கு சிறந்த இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை
கழிவு நீர் அகற்றம்
வீட்டில் இருந்து கழிவு நீரை பொதுவாக வாய்க்கால் மூலமாகவே நாம் அகற்று கின்றோம் ,ஆனால் அந்த கால்வாய்கள் நேரடியாக நமக்கு குடிநீர் கொடுக்கும் நதி,ஓடை ,குளம் போன்ற இடங்களில் கலப்பதினால் நீர் மாசு படுகிறது ,இதற்க்கு பல தீர்வுகள் சொல்ல பட்டாலும் ,நம்முடைய பங்காக நச்சுத்தண்மை உடைய துணி துவைக்கும் பொடிகள் ,சோப்பு வகைகளை தவிர்த்தல் ,மிக அதிக ரசாயன பூச்சுக்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற சிறு செயல்கள் மட்டுமே,நமது சுற்றுப்புறத்தில் உள்ள நன்னீர் வளங்களை பாதுகாப்பதில் முதல் பாடியக கொள்ளப்படுகிறது ,பூமியில் குழிதோண்டு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தும் நவீன பழக்கங்கள் நகரம் முதல் கிராமம் வரை கொண்டுவரப்பட வேண்டும் ,அரசின் உதவியுடன் இது போன்ற சுத்திகரிப்பு தொட்டிகள் வீட்டில் அமைக்கலாம்
தூய காற்று
- மரம் வளர்ப்பதே தூய காற்றுக்கு ஒரே தீர்வு என்ற போதிலும் ,தேவை இல்லாத சமயங்களில் குளிர்சாதன பெட்டிகள் ,குளிர்சாதன அறைகளை பயன்படுத்துவதை குறைத்தாலே காற்றில் ஆக்ஸிஜன் அளவை உயர்த்தலாம் ,மிக பெரிய தொழிற்சாலைகள் வெளியிடும் காற்று மாசுபாடே அனைத்திற்கும் கரணம் என்று ஒதுக்கி தள்ளாமல் ,நம்மால் முயன்ற உதவிகளை இயற்கைக்கு செய்து நாமல் வளம் பெற,தனிமனித தூய்மையே முதல் படியாகும்