Visitors have accessed this post 762 times.
தமிழே நீ இல்லை என்றால்
மனிதருக்கு வாழ்வே இல்லை
உன்னைப் பலரும் புகழ்ந்து
பெருமையுடன் போற்றுகின்றனர்
உன்னால் இன்று தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது சிறப்போடு
தமிழருக்குத் தெரிந்த மொழி அறிந்த
அழகிய மொழி தமிழ் செம்மொழியே
தமிழில் புலவர்கள் எழுதிய நூலோ பல
எளிதில் கற்கவும் பேசவும்
அழகிய மொழி நீயே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்
நீதானே பேசுவதற்கு எளிதான மொழி
பழமை வாய்ந்த மொழி நீ
உயர்ந்து நிற்பது பெருமையே
உன்னைப் பற்றி மேடைகளில் பேசி
வென்றவர்கள் பலர் தமிழ் தென்றலாக உன்னைப் பற்றி
பேசும்போது என் மனதில்
தோன்றுவதோ தமிழர் என்ற உணர்வே
உன்னை இனிமையான மொழி என்று
அழைப்பேன் என் மனம் நிறைவாக!.