Visitors have accessed this post 777 times.

நல்ல பண்பு

Visitors have accessed this post 777 times.

கிறிஸ்துவுக்குள் பிரியமான அன்பு சகோதர சகோதரிகளே. உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஆண்டவர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

இந்த ஊடகம் மூலமாக தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன். தியானிக்கும்படியாக தெரிந்து கொண்ட வேதப்பகுதி. 

மத்தேயு 7:12 Matthew 7:12

ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

Therefore all things whatsoever ye would that men should do to you, do ye even so to them: for this is the law and the prophets. 

ஆம் பிரியமானவர்களே. 

மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அவைகளை நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற செயல் இவற்றைத்தான் தேவன் விரும்புகிறார். இதன் மூலமாக மட்டுமே உறவுகள் பெலப்படும். நம்முடைய செயல்கள் வேறுபாடாக காணப்படும் பட்சத்தில். கிறிஸ்துவின் சாயலை நாம் இழந்து விடுகிறோம். ஆகவே கிறிஸ்துவோடு இசைந்த உறவுகளை நிலைநாட்டிக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிசாசனவன் நமக்குள் இடறலுண்டாக்கும்படி தீவிரமாக செயல்ப்படுகிறான் . உறவுகளுக்குள் எப்படி பகை உண்டாகிறது. நாம் நம்மை எப்போது மேன்மையாக என்னுகிறோமோ. அப்போது தான் நமக்குள். சண்டைகள், தீமைக்குப் பதில் தீமை செய்வது.  இப்படிப்பட்ட காரியங்கள் நமக்குள் வருகிறது.  இது எல்லாவற்றுக்கும் காரணம் மேன்மை.  முதலாவது நம்மை தாழ்த்த வேண்டும். மற்றவர்களை விட நாம் பெரியவர்களாக இருக்கலாம் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருக்கலாம் ஆஸ்தி அந்தஸ்த்தில் உயர்ந்தவர்களாக இருக்கலாம் நாம் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமக்குள் தாழ்மை இல்லை என்றால் தேவன் விரும்புகிற வாழ்க்கை நம்மால் வாழமுடியாது. 

தொடரும்

 

 

Leave a Comment

Write and Earn with Pazhagalaam