Visitors have accessed this post 835 times.
‘பொருள் மரபில்லா ப் பொய்ம்மொழி
யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி
யானும்‘ என்னும் தொல்காப்பிய நூற்பா ,
பழங்காலத்திலேயே கதைகள் வழக்கிலிருந்தன
இந்திய நாட்டில் பல்வே று இடங்களில் வாழ்ந்த தொல்பழங்குடிமக்கள், உலகத்தைப்பற்றியும் உலகத்தோற்றத்தைப் பற்றியும்
காலப்போக்கில் கற்பனைக் கதைகளாகவும்,
இதிகாசங்களாகவும், புராணங்களாகவும் தோற்றம் பெற்றது. பழங்காலச் சமுதாயத்தை அறிய இவ்வகைக் கதைகள் நமக்கு உதவுகின்றன எனவே இந்தியா ஒரு கதைகளஞ்சியமாக திகழ்கிறது
பொழுதுபோக்கிற்கா௧ உருவாக்கப்பட்ட
கதைகள், வளரும் குழந்தை களுக்கு நன்னெ றி
ஊட்டுவதற்காக நீதிக்கதை களாகவும் தோற்றம் பெற்றன. மராட்டிய வீரர் சிவாஜி, இளம்வ யதில் தம் தாயிடம் கேட்ட கதை களே அவர் சிறந்தவீரராக உருவாக உதவின.
கதைப்பாடல்கள்
காப்பியங்க ள் தோன் றுவதற்கு
மூலகாரணமாக கதைப்பாடல்கள்
அமைந்துள்ளன. இதிகாசத் துணுக்குகள்,
கிராம தேவதைகளின் கதை கள், சமூககதைகள், வரலாற்றுக் கதைகள் ஆகியன
கதைப்பாடல்களாக இடம்பெறுகின்றன.
கதையைப் பாடலாகப் பாடுவதே
கதைப்பாடல். குறிப்பிட்டதொ ரு பண்பாட்டில்,
குறிப்பிட்டதொ ரு சூழலில் ஒரு பாடகரோ ,
ஒரு குழுவினரோ சேர்ந்து, மக்கள்முன்
எடுத்துரைத்து இசை யுடன் நிகழ்த்துகின்ற
பாடலே கதைப்பாடலாகும்.
கதைப்பாடலுக்குத் தமிழில் ‘அம்மானை ‘
என்றும் பெயருண்டு. சிலப்ப திகாரத்தில்
‘அம்மானை ‘ என்ற சொ ல் முதன்முதலாகக்
கையாளப்பட்டுள்ளது. கதைப்பா டல் நான்கு
பகுதிகளைக் கொண் டுள்ள து. இறைவனை
வழிபட்டுப் பாடலைத் தொடங்குவது
காப்பு அல்லது வழிபாடு. தனக்குப் பாடம்
சொன்ன குருவுக்கு வணக்கம் செய்து
பாடுவது குரு வணக்கம். பின்னர் , நடந்தநிகழ்வைக் கதைப்பா டலாகப் பாடுவது
வரலாறு. இறுதியாகக் கதை கேட்போரும்,மற்றோ ரும் கடவுளர் அனை வரின் அருளும்பெற்று வாழ்க என வாழ்த்துவது வாழி.
முத்துப்பட்டன் கதை , நல்ல தங்காள்
கதை , காத்தவராயன் கதைப்பா டல்,
வீரபாண்டியக் கட்ட பொம்மு பாடல்,
பஞ்சபாண்டவர் வனவாசம், கான்சா கிபு சண்டை ,
சுடலைமாடன் கதை , வில்லுப்பாட்டு போ ன்றவை
சில வரலாற்றுக் கதைப்பாடல்க ளாகும்.
கதைப்பாடல்களில் அக்காலச்
சமுதாயநிலை புலப்படுகிறது. பழ ங்குடி
மக்களின் நம்பிக்கை கள், பழ க்கவழக்கங்க ள்,
ஆகியவற்றை அறிந்துகொள்ள முடிகிறது.
மாந்தரின் உயர்ந்த பண்பா ட்டுக் கூறுகளை யும்,
சமூகத்தின் சீர்கேடுகளை யும் இப்பாடல்கள்
விளக்குகின்றன. இவை , வீரகாவியங்களாகச்
சித்திரிக்கப்படுகின்றன. இப்பாடல்களில்
இடம்பெறும் கதைமாந்தர்கள், இறப்புக்குப்பின்
தெய்வங்களாகப் போற்றப்ப டுகின்றனர்.