Visitors have accessed this post 815 times.
நெசவாளர்களின் வேதனை
1. பருத்தி சரியான விளைச்சல் இல்லாததால் பஞ்சுவின் விலை உயருகிறது .இதனால் நூலின் விலை உயர்கிறது . போதுமான நூல் இருப்பு வைக்காமல் ஏற்றுமதி செய்வதால் நூல் பற்றாக்குறை ஏற்பட்டு நெசவு சம்மந்தப்பட்ட சிறு வேலையும் முடங்கி விடுகிறது .
2.அதிக விலை கொடுத்து நூல் வாங்கும் போது நெசவாளர்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது . நூல் விலை ஏற்றத்தால் நெசவு நெய்யும் சேலையும் தாமதமாக நெய்து கொடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
3. சேலை தாமதமாகி நெய்வதால் வியாபாரிகளுக்கு போதிய நேரத்தில் விற்பனைக்கு கொடுக்க முடியாத நிலைக்கு ஒப்பந்ததார முதலாளிகள் தள்ளப்படுகிறார்கள் .
4. நூலின் விலை ஏற்றத்தால் சேலையின் விலை அதிகரிக்கிறது . விலை ஏற்றத்தால் வியாபாரிகள் சேலையை அதிக விலைக்கு வாங்க மறுக்கின்றனர் . சேலையின் தேக்கம் அதிகமாகி அதன் மூலம் நெசவாளர்களுக்கு சரியான கூலி கிடைக்கவில்லை .
5. மழை காலங்களில் தறி நெய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் . இதன் மூலம் வருமானம் பாதிக்கப்படுகிறது .