Visitors have accessed this post 761 times.

புதிய சினி தூறல்கள்

Visitors have accessed this post 761 times.

 

 

ஜாக்கிசான் படத்தில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட வலிமை கிளைமாக்ஸ் ; வைரலாகும் வீடியோ

 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் சண்டை காட்சிகளும், பைக் சாகச காட்சிகளும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுக்களை பெற்றன. இந்தப்படத்தின் சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் மாஸ்டர் வடிவமைத்திருந்தார்.

 

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு முன்னதாக வில்லன் கார்த்திகேயா, அஜித்தின் குடும்ப உறுப்பினர்களை இரும்பு வடங்களில் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு, ரிமோட்டின் மூலமாக இயக்கி அவர்களை கீழே விழ செய்வது போல போக்கு காட்டி அஜித்தை பயமுறுத்துவார்.

 

இந்தநிலையில் தற்போது இந்த காட்சி 2004ல் ஜாக்கிசான் நடிப்பில் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் இருந்து ‘தழுவி’ எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஜாக்கி சானுக்கும் இதேபோன்ற அனுபவம் தான் அந்தப்படத்தில் நடக்கிறது. இந்த இரண்டு சண்டை காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய திரைப்படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தைத் தொடர்ந்து ‘தோழா’ படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். வம்சி இயக்கும் படத்தின் பணிகள் தொடங்கவுள்ள நிலையில் ரசிகர்கள் விஜய்யின் அடுத்த படம் குறித்து முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் அடுத்த படத்தில் விஜய் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் தற்போது கமல் நடிக்கும் ”விக்ரம்” படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்ட மாஸ்டர் மகேந்திரனின் அடுத்த படத்தின் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 1994-இல் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக, படையப்பா போன்ற பல படங்களில் நடித்து பிறகு விழா படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். இவர் சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

 

தற்போது ரிப்பப்பரி என்ற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக உருவெடுக்கிறார். ரிப்பப்பரி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். இப்படத்தை சூப்பர் டூப்பர் படத்தை இயக்கிய அருண்கார்த்திக் இயக்குகிறார்.

 

விஜய், விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை சொல்லி இருக்கிறார்.

 

மாநகரம், கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்தை கமலை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்க உள்ளார்.

 

சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்தார். இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

 

இந்நிலையில், தான் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாகவும், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்ததாகவும் லோகேஷ் கனகராஜ் வாக்களித்த விரல் மையுடன் கூடிய புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கொரோனாவால் இருந்து மீண்ட லோகேஷ் கனகராஜ்க்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

பிரபல இயக்குனர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்

 

மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை பிரபல இயக்குனர்களுடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.

 

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மார்ச் 14ஆம் தேதி இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

 

இந்நிலையில், தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களான மணிரத்னம், சங்கர், கவுதம் மேனன், சசி, வசந்தபாலன், லிங்குசாமி ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தனது பிறந்தநாளில் அவர்கள் கலந்துகொண்டதற்கு லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார்.

 

வேட்டை மன்னன் படத்தை தூசி தட்டும் சிம்பு

 

ரஜினியின் 169-வது படத்தை முடித்த பிறகு சிம்புவின் வேட்டை மன்னன் படத்தை மீண்டும் இயக்க நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

2018-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து ’டாக்டர்’ படத்தை இயக்கினார். இதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, ரஜினியின் 169-வது படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டிச் சென்றார்.

 

நெல்சன் திலிப்குமார் முதன் முதலில் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கினார். சில மாதங்கள் படப்பிடிப்பு நடைப்பெற்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் தடைப்பட்டு வெளியாகாமல் போனது. அன்றைய பொழுது அப்படத்தில் இடம்பெற்ற சிம்புவின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இன்றளவும் சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களில் வேட்டை மன்னனும் ஒன்று. இந்நிலையில் இப்படத்தை மீண்டும் கையில் எடுக்க சிம்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்சன் இயக்கவிருக்கும் ரஜினிகாந்த்தின் 169-வது படத்தை 6 மாதத்தில் முடித்து விட்டு சிம்புவை வைத்து மீண்டும் வேட்டை மன்னன் படத்தை துவங்க நெல்சன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் வேட்டை மன்னன் திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிம்புவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்தது. 2015-இல் பீப் பாடலின் சர்ச்சைக்காக சிம்பு மற்றும் அனிருத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

 

இந்நிலையில் கோவை நீதிமன்ற விசாரணை அறிக்கையில் நடிகர் சிம்புவுக்கு எதிரான புகாருக்கு ஆதாரம் இல்லை என்பதால் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிராக வழக்குகளை ரத்து செய்யக்கோரிய நடிகர் சிம்பு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ரசிகர்களுக்கு முன் உதாரணமாக மாறிய சிம்பு

 

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தோன்றி பிறகு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு. 1984-இல் இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ’உறவு காத்த கிளி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் தொடர்சியாக குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து காதல் அழிவதில்லை, தம், அலை போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்தார்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam