Visitors have accessed this post 454 times.

புரட்டாசி மாதம் பரிதாபங்கள்

Visitors have accessed this post 454 times.

நாங்கள் இப்போது 17/10/2022  கடந்த காலத்தில் இருக்கிறோம்

 

ஸ்டீவ் ராஜாஸ் : டேய் போர்ட்துக்கு வராம அங்க என்னடா பண்ற

 

தோர் : தூண்டில  தேடிக்கிட்டு இருக்கேன்

 

ஸ்டீவ் ராஜாஸ் : அதெல்லாம் ஜாக் ஸ்பர்ரோவ் கப்பல்லயே இருக்கும் நீ கிளம்பி வா

 

தோர் : சரி இதோ வரேன்

 

( துறைமுகத்தில் தோர் )

 

ஸ்டீவ் ராஜாஸ் : ஜாக் ஸ்பர்ரோவ்  இவன் புதுசு கொஞ்சம் பத்துரமா பார்த்துக்கோ

 

ஜாக் : கேப்டன் ஜாக் ஸ்பர்ரோவ்ணு சொல்லுங்க

 

ஸ்டீவ் ராஜாஸ் : இந்த திமிருக்கு ஒண்ணும் குறச்சல் இல்ல

 

ஜாக் : திமிரு இருக்குறதுனாலடானா இவளோ பெரிய கப்பலுக்கு கேப்டன்னா  இருக்கேன்

 

ஸ்டீவ் : அப்பரம்

 

ஜாக் : அதான் சொல்லிடிங்களா நா இவனே என் போண்டாத்தி மாதிரி பாத்துக்குறேன் நீங்க  எதுக்கும் கவல படாதீங்க போய்ட்டு வாங்க

 

ஸ்டீவ் : ஒரு நிமிசம் ஜாக்

 

ஜாக் : ம்ம்ம் போயி டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க

 

( ரெண்டு பேரும் தனியா பேசிட்டு இருக்காங்க )

 

ஸ்டீவ் : இவன் கிட்ட கொஞ்சம் உசாராவே இரு

 

தோர் : ஏய் எனக்கு எல்லாம் தெரியும் நாங்க ஏற்கனவே அறிமுகம் ஆகிட்டோம்

 

ஸ்டீவ் :  எங்கடா

 

தோர் : நேற்று ஒயின் ஷாப்ல

 

ஸ்டீவ் : நீயெல்லாம் திருந்தவே மாத்தடா

 

தோர் : ( சிறிது குரலை உசத்தி ) நாங்க இல்லனா அரசாங்கமே இயங்காது பார்த்துக்கோ

 

ஜாக் : அப்படி போடு தலைவா

 

ஸ்டீவ் : சரி கிளம்புங்க நீங்கலாம் எங்க திருந்த போறீங்க

 

ஜாக் : சரி வா தோர் நம்ம போலாம்

 

(படகில்)

 

தோர் : ஆமா ஜாக் இந்த வளைய  ஏன் அவுகவே முடியல

 

ஜாக்: டாய் டாய்

 

தோர் : என்ன ஜாக்

 

ஜாக் : இதோ இந்த தூண்டிலயும் இதையும் புடி கீழ போ சின்ன மீனா பார்த்து புடி

 

தோர் : புடிக்கிறது சின்ன மீனா பெரிய மீனானு  எப்படி தெரிஞ்சிக்கிறது

 

ஜாக் : அந்த  எடத்துல எல்லாம் சின்ன மீனாதான் வரும் போ

 

தோர்: சரி ஜாக்

 

ஜாக்: ம்ம்

 

( சில நிமிடங்கள் கழித்து )

 

தோர் : ஜாக் மீனோட சேர்ந்து நண்டும் வருது

 

ஜாக் : அப்படியா இதோ வரேன் இரு

 

தோர்:  பார்

 

ஜாக் : மீன் ஓட சேர்த்து நண்டும் வரும்  risk இல்லாம எப்படி மீன் புடிக்க முடியும்

 

தோர் : அட படுபாவி பயலே கொஞ்ச நேரத்துல என்ன பரலோகத்துக்கு அனப பாத்தயேடா. ஸ்டீவ் அப்பவே சொன்னான் இவன் ஒரு  

யாதாகூட  மாணவனு  கரெக்டா தான் இருக்க

 

ஜாக் : சரி விடு என் கூட வா

 

தோர் : இனி நா உன்  கூட வரல

 

ஜாக் : இதோ பாரு நா மீன் புடிக்கிறதா வெடிக்க மட்டும் பாரு நீ எதுவும் பண்ண தேவயில்லா சரியா

 

தோர் : இப்போ சொன்னா பாத்தியா இதுதான் கரெக்ட்தானா வார்த்தை

 

ஜாக் : சீக்கிரம் வா  வளை அருந்து கீழ விழுந்துட போது அவளோ மீன் மாத்திற்கு 

 

தோர் : ஏன் வளைய ஸ்ட்ராங்கா கட்டளையா

 

ஜாக் : பலமாதான் காத்திருக்கேன்   ஒரு பொறம்போக்கு வந்து அறுத்து எடுத்துட்டு போயிடும்

 

பேசிட்டு திரும்பும்போது

 

ஜாக் : ஓஓ நெனச்சேன் எப்படி நடக்கும்னு

 

தோர் : எங்க வளைய கானம்

 

ஜாக் : நான் சொன்னானே ஒரு பொறம்போக்கு வந்து வலைய அறுத்துட்டு போய்டும்னு அதுதான் வந்துருக்கும்

 

தோர் : என்னையா அசால்டா சொல்ற இப்ப என்ன பண்ண போற

 

 

ஜாக் : என்ன மருபடியும் பேட்மேன் கிட்ட சொல்லவேண்டியதுதான் ஆனா என்ன அவனுக்கும் எனக்கும் வாய்க்காதகறாரு வேற ஆகிடுச்சி

 

தோர் : என்ன

 

( பேட்மேனுக்கு ஜாக் வாட்ஸ்அப் செய்தி அனுப்பினார் )

 

ஜாக்: பேட்மேன்

 

பேட்மேன்: சொல்லு ஜாக்

 

ஜாக் : அதுவந்து

 

பேட்மேன் : அதெல்லாம் மனசுல வச்சிகல என்னனு சொல்லு

 

ஜாக் : ஜோக்கர் வந்தான்

 

பேட்மேன் : மருபடியும் வந்துதானா அவன்

 

ஜாக் : வந்தது மட்டும் இல்ல மீன்கள  வலையோட அறுத்து  எடுத்துட்டு போயிட்டான்

 

பேட்மேன் : என் கிட்ட சொல்லிடல நா பாத்துக்குறேன்

 

ஜாக் : சரி பேட்மேன்

 

தொலைபேசி உரையாடல் முடிந்ததும்

 

ஜாக் : இனி நம்ம கவலை பட தேவையில்லை பேட்மேன் பார்த்துக்குவான்

 

( இரவு 9.17 மணிக்கு )

 

பேட்மேன்: ( ஜாக்கிற்கு வாட்ஸ்அப் மெசேஜிங் ) வெளியே வந்து பாரு

 

ஜாக்: ( ஆன்லைனில் ) சரி

 

ஜாக் : குடுத்த வேலைய சரியா முடிச்சிட்டான்

 

தோர் : அதான் எல்லா மீனையும் புடுச்சிட்டோமே கரைக்கு போலாம்

 

ஜாக் : ம்ம்ம் இப்போ அங்கதான் போகித்து இருக்கோம் 

 

( ஜாக் கப்பல் கரை ஒதுங்கிய பிறகு )

 

ஜாக் : ஸ்டீவ் நீங்க அப்படி இங்க

 

ஸ்டீவ்: பேட்மேன் யெல்லாதயும் சொல்லித்தான்

 

ஜாக் : சொல்லிடாரா சரி விடுங்க ஒரு கை புடிங்க

 

 ஜாக் : இன்னைக்கி நைட்டோட புரட்டாசி மாசம் முடியுது நாளைக்கு மக்கள் கூட்டம் அலைமோத போது

 

ஸ்டீவ்: நாளைக்கு இல்ல 19th

 

ஜாக்: ஆனா நா காலண்டர்ல பார்த்தேனே 17th தான் முடியுது

 

ஸ்டீவ்: சரிதான் ஆனால் 18 செவ்வாய் சாப்ட மாட்டாங்க

 

ஜாக் : அதுவும் சரிதான் தோர் திரும்ப பாப்போம்

 

தோர் : திரும்பவும் உன் கூட வந்தா என்ன செருப்பாலயே அடி

 

ஸ்டீவ்: தோர் கொஞ்சம் சும்மா இரு

 

தோர் : உனக்காக தான் நா அமைதியா இருக்கேன் இல்ல இவனே

 

ஜாக் : கோவ படாத தம்பி கோவ பட்டா வாழ்கைல எப்படி முன்னேற முடியும்

 

தோர் : டேய்

 

ஸ்டீவ் : தோர் நம்ம போலாம் தேவையில்லாம பிரச்சனை வேண்டாம்

 

தோர்: சரி

 

ஸ்டீவ்: சரி ஜாக் பாப்போம்

 

ஜாக்: ம்ம்ம் பாக்கலாம்

 

 

                              முடிந்தது

Leave a Comment

Write and Earn with Pazhagalaam