Visitors have accessed this post 573 times.

யார் உண்மையான சாதனையாளர்?

Visitors have accessed this post 573 times.

v:* {behavior:url(#default#VML);}
o:* {behavior:url(#default#VML);}
w:* {behavior:url(#default#VML);}
.shape {behavior:url(#default#VML);}

Normal
0
false

false
false
false

EN-IN
X-NONE
TA

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:””;
mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt;
mso-para-margin-top:0cm;
mso-para-margin-right:0cm;
mso-para-margin-bottom:8.0pt;
mso-para-margin-left:0cm;
line-height:107%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,sans-serif;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;
mso-fareast-language:EN-US;
mso-bidi-language:AR-SA;}

இந்த உலகில் பலவிதமான தொழில் துறை மற்றும் புதிய கண்டு பிடிப்புகள் இருக்கின்றனர். மேலும் பல துறைகள் உருவாக்கப்பட்டு கொண்டு இருக்கின்றனர். வரும் காலங்களில் பல புதிய துறைகள் மற்றும்  புதிய கண்டு பிடிப்புகள் வர இருக்கின்றனர். இவை அனைத்தும் மக்களின் நலனுக்கும் உலக முன்னேற்றத்திற்கும் எனபது நாம் அறிந்தது.

இது போன்ற பல துறைகளும் மற்றும் கண்டு பிடிப்புகளும் உருவாக்கப்பட்டது பல விதமான மனிதர்களால் தான். இப்படியான புதிய கண்டுபிடிப்பிற்கு பலரும் அவர்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கலாம் அல்லது வாழ்க்கையின் முக்கால் பகுதியை செலவிட்டு இருப்பார்கள். கண்டுபிடிப்பில் வெற்றி பெற்ற பிறகு சிலர் அதை மக்கள் பயன்பாட்டிற்கு பணம் பெறாமல் வழங்குவார்கள் மற்றும் சிலர் அதற்கு பணம் பெறுவார்கள். இதன்மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். அனைவரும் ஏதோ ஒன்றை  எதிர்நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் அல்லது அதை அடைய முயற்சி செய்கிறோம். இதன் அர்த்தம் அனைவரின் எதிர்பார்ப்பும் ஒன்றை நோக்கி உள்ளது அது அவர்கள் துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதே.                                       

சிறிது காலமாக வெற்றியை பெற சிலர் பல தவறான வழியை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த  குறுக்கு  பாதையின் மூலம்  வெற்றி பெறுவது சிறிது சுலபமான காரியம் என்பது நமக்கு தெரிந்த ஒன்று. இவ்வாறு தவறான வழியை பயன்படுத்த காரணம் மனிதர்கள் சுயநல எண்ணத்திற்கு மனதில் இடம் கொடுத்ததே ஆகும். இதனால் ஒற்றுமை எண்ணம் மறைந்து நான் என்ற சுயநல எண்ணம் அதிகரிக்கிறது. அதே நேரம் மனிதாவிமானம், ஒருவருக்கு ஓவருவர் உதவுவது,  விட்டுக்கொடுப்பது போன்ற நல்ல குணம் குறைந்து வருகிறது. அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது இயல்பானது ஆகும். அதற்கு அவர்கள் உழைப்பையும், திறமையும் பயன்படுத்தி பெற வேண்டும். அவ்வாறு வெற்றி பெற முடியாவிட்டால் தனது உழைப்பையும், திறமையும் மேம்படுத்தி வெற்றியை பெற வேண்டும்.

இன்றைய காலத்தில் அனைவரும் அவர்களுடைய முயற்சிக்கான வெற்றியை மட்டுமே எதிர்பார்ப்பது குறைந்து மற்றவர்களுடைய வெற்றியை நமது ஆக்க நினைப்பது சிறிது அதிகரித்து வருகிறது. அதாவது சிலர் நாமே அனைத்தையும் பெற வேண்டும் என்ற சுயநல எண்ணம் அதிகரித்து வருகிறது என்று கூறலாம். இது போன்ற தவறான எண்ணம் கொண்டவர்கள் சில நேரங்களில் வெற்றியும் பெறுகிறார்கள். இதனால் உண்மையாக வெற்றியை பெறவேண்டியவர் அங்கே வெற்றியை இழக்கிறார். அந்த காரணத்தால் வெற்றியை இழந்தவர் நியாமான பாதை விட்டு தவறான பாதையை சில நேரங்களில் தேர்வு செய்து விடுகிறார்கள். இப்படி தவறான முறையில் பெறும் வெற்றி உண்மையான வெற்றி அல்ல.அவர் உண்மையான வெற்றியாளர் இல்லை.

தற்போது அனைத்தும் பணத்தால் பெற முடியும் என்ற தவறான கருத்து பரவி வருகிறது. அந்த பணத்தால் பெற முடியாத சில விஷயங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறது. அது எந்த நிலையிலும் மாறாத குணம் கொண்டவர்களுடைய உறவு ஆகும். ஏன்னென்றால் அவர்கள் போலியாக இருக்க மாட்டார்கள் மற்றும் சில சுயநலம் கொண்டவர்கள் மத்தியில் சரியாக நடந்து கொள்ள நினைப்பார்கள். என்றும் தவறானவர்கள் கூறும் “அது உன்னால் முடியாது” ” இது உன்னால் முடியாது” போன்றவற்றை முடித்துக்காட்ட முழுமுயற்சி எடுப்பவர்கள். அவர்களால் எப்போதும் தனக்காக மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டார்கள். உண்மையான வெற்றியாளர்களை அவர்கள் எதற்கும் தடுக்க மாட்டார்கள். மாறாக உண்மையான வெற்றியாளர்களை மற்றவர்கள் அறிய வெளிப்படுத்துவார்கள் மற்றும் அதன்மூலம் மற்றவர்களும் இதே போல் செயல்பட வழிவகுப்பார்கள்.

ஒரு உண்மையான வெற்றியாளன் என்பவர்  எப்போதும் சரியான பாதையை தேர்ந்துதெடுப்பவர், எந்ததொரு நிலையிலும் தவறான வழியால் மற்றவர்களுடைய வெற்றியை பறிக்க முயற்சிக்காதவர், அவர்களது உண்மையான முயற்சி மற்றும் திறனால் வெற்றி பெற நினைப்பவர், ஒரு வேளை மற்றவர் வெற்றியை பெற அவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெறாமல் உரியவர் பெற வழிவகை செய்பவர், வெற்றி பெற்ற அவர் அந்த வெற்றியை என்னுடையது என்று எண்ணாமல் அதற்கு உதவியவரையும் வெற்றியாளராக கருதுவர்.

இதன்மூலம் நாம் உணர வேண்டியது வெற்றி அனைவராலும் பெற முடியும்.  அதே போல் உண்மையான வெற்றியாளரின்  சிறப்பை  அறிவதும்  அவசியம்.  உண்மையான வெற்றியாளர் வெற்றி பெற இருக்கின்ற வழியை மட்டும் பார்க்காமல் அந்த வெற்றி யாரையும் பாதிக்காத வகையில் இருக்கும் ஒரு வழியை உருவாக்குவார். அதன் பொருள் அவரது இலக்கு வெற்றி மட்டும் அல்ல, அது எவரையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதும் சேர்த்து ஆகும்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam