Visitors have accessed this post 403 times.
நடிகர்கள்: பாரதிராஜா, வசந்த் ரவி, ரோகிணி, ரவீனா ரவி; ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா; இசை: தர்புகா சிவா; இயக்கம்: அருண் மாதேஸ்வரன்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் ‘ராக்கி’ படத்தின் டீஸர் வெளியானபோது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ந்துதான் போனார்கள். அந்த டீசரில் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர், உட்கார்ந்திருக்கும் ஒரு நபரை துருப்பிடித்த ரம்பத்தை வைத்து நிதானமாக அறுக்கும் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்தது. டீஸரே இப்படியிருந்தால் முழுப் படமும் எப்படியிருக்கும் என்ற எண்ணமே அச்சமூட்டியது.
படத்தின் கதை இதுதான்: சிறையில் இருந்து பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் வரும் ராக்கி (வசந்த் ரவி), தன் தாய் மல்லியையும் (ரோகிணி) தங்கை அமுதாவையும் (ரவீணா ரவி) தேடுகிறான். ஆனால், தாய் கொல்லப்பட்டிருக்கிறாள். தங்கையைக் காணவில்லை. ராக்கி வெளியே வந்த தகவல் அறிந்ததும் பழைய பகைவனான மணிமாறன் (பாரதிராஜா) இவனைப் பழிவாங்கத் துடிக்கிறான். இதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை குருதி கொப்பளிக்கச் சொல்கிறது இந்த “ராக்கி”.
ராக்கி – வன்முறையின் அழகியலை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்கிறது.