Visitors have accessed this post 1186 times.

வெற்றி

Visitors have accessed this post 1186 times.

ஆரம்பமாயிடுச்சு,

                    புத்தாண்டு ராசி பலன்கள்….

 

எல்லா TV சேனலிலும் புத்தாண்டு ராசி பலன்கள்…..

       இந்த ராசி OK 

       அந்த ராசி Not good 

       இந்த ராசி Super.

 

அவரவர் ராசிக்கு என்ன பலன் என்று பார்த்து, அதை அப்படியே எண்ணங்களாக நமக்குள் ஆழமாக பதிவிட்டு விட்டால், அந்த எண்ண அலைகள் அடுத்தடுத்து வந்து உங்களை திசை திருப்பி விடும்.

         ஈர்ப்பு விதி அறிந்தவர்களுக்கு நான் சொன்ன இந்த ரகசியங்கள் புரியும்…..

 

நல்ல பலனாக இருந்தால் OK. 

தவறான பலன்களாக இருந்தால் தொலைந்தோம்.

 

பலன்கள் பலிக்குமா என்பதும் 

Million dollar Question.

 

இதை எல்லாம் மறந்துவிட்டு, நம் மேல் நம்பிக்கை வைத்து நல்ல எண்ணங்களாக நம்முள் மலர்ந்தால் நாளும் கோள்களும் என்ன செய்யும்…..?

              துணைக்கு சித்தர்கள் காட்டிய ஞான மார்க்கமும், உங்களில் இறைவன் மீது வைத்துள்ள சரணாகதி பக்தியும், உங்களுடைய நேர்மறையான எண்ணங்களும், செயல்களும் இணைத்துக் கொண்டால், எல்லா ராசிகளுமே எல்லா நாட்களும் நல்ல நட்பு ராசிகள்தான்….

      எல்லாமே நன்மைதான் செய்யும்…..

 

என் ராசி இந்த வருடம் மிக சிறப்பு என்று சொல்லிக் கொண்டே, சரியாக சிந்திக்காமல், தெளிவாக முடிவெடுக்காமல், எந்த நற்செயலுமே செய்யாமல் வாழ்வில் தவறிழைத்தால் உங்கள் ராசிதான் என்ன செய்யும்?

 

அவரவர் எண்ணங்களே அவரவர் வாழ்க்கை. எண்ணங்களை தூய்மையாக்கி கொண்டால் செய்யும் செயல்களும் சிறப்பு… 

வாழ்விலும் வெற்றி.

 

நம் எண்ணங்களை நேர்வழி செலுத்தவே சித்தர்கள் ஞானிகளின் சிந்தனைகளும் வழிகாட்டுதல்களும்….

 

நாளென் செயும், வினை 

தானென் செயுமெனை,

நாடிவந்த கோளென் செயுங்

கொடுங் கூற்றென் செயுங்கும்…

                    – அருணகிரி நாதர் அருளிய

கந்தர் அலங்காரம்…

 

புது வருடத்தில் நற்சிந்தனைகளாலும், 

நல்ல உழைப்பாலும் வெற்றிகரமாக 

சாதனை படைப்பேன் என்று நமக்குள் 

உறுதி பூண்டால், எல்லாம் நலமே….

 

சிந்திப்போம் தெளிவோம்

சிந்தனையால் உயர்வோம்.

Leave a Comment

Write and Earn with Pazhagalaam