Visitors have accessed this post 659 times.

30 வகை சித்த மருத்துவ குறிப்புகள் 2022

Visitors have accessed this post 659 times.

20 சித்த மருத்துவ குறிப்புகள்

தலைவலி, ஜலதோஷம், இருமல், வாந்தி 

வணக்கம் ,

சித்தர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகைகளின் பயன்களை அடைவதற்கு நாங்கள் சிறப்பான வழி காட்டியாக இந்நூலை வெளியிட்டு இருக்கிறோம். சித்தர்கள் நமக்கு வழங்கிய சித்த வைத்திய மூலிகைகளை நாம் பயன்படுத்துவதன் மூலம் நோய் வராமல் தடுக்க முடியும். நமது மூலிகைகளை சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். காலையில் 9 மணிக்குள் முழு உணவு சாப்பிடுங்கள். மதியம் 3 மணிக்குள் பங்கு அளவு உணவு சாப்பிடுங்கள் இரவு உணவு 3 பழம், முடி தேங்காய் மட்டும் சாப்பிடுங்கள் உடல் ஆரோக்கியமாக வாழ உணவு முறைகளை சரியாக அமைத்துக் கொள்ளுங்கள்.

1.தலை சுற்றல் குணமாக: சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச் சை வேர், சீரகம் ஆகியவகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தின சரி காலை, மாலை % கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும். 

2. இருமல் குணமாக: அரச மரத்துப்பட்டையை காயவைத்து வறுத்து கரியானவுடன் தூளாக்கி 1 டம்ளர் நீரில் 1 கரண்டி போட்டு கொதித்ததும் வடிகட்டி சர்க்கரை பால் சேர்த்து குடிக்க இருமல் குணமாகும்.

3. ஜலதோஷம் : ஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழ ங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல் கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.

4. வறட்டு இருமல் குணமாக: கருவேலமரக் கொழுந்தை கச க்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்கள் குணமாகும். :

5. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக: முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குணமாகும்.

6.பிரயாணத்தின் போது வாந்தி நிறுத்த: தினசரி ஒரு நெல் லிக்காய் என தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட வாந்தி வராது.

7.தலைவலி, மூக்கடைப்பு நீங்க: நெல்லிக்காயில் கொட்டை யை நீக்கி % லிட்டர், சாறு எடுத்து அதில் அளவு உப்பு சேர்த்து 3 நாள் வெயிலில் காயவைத்து பின் தேங்காய் எண்ணையை கொதி க்க வைத்து அதில் நெல்லி சாறு கலந்து கொதிக்க வைத்து கொண்டு மூக்கில் நுகர தலைவலி போகும்.

 8. நெஞ்சு சளி: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.

9. ஜலதோஷத்தின் போது உள்ள தலைவலி நீங்க: சிறு கெண்டியில் நீர் ஊற்றி ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை போட்டு க் கலக்கி கெண்டியை அடுப்பில் சுடேற்றி ஆவி வெளிவரும். வெளிவரும் ஆவியை பிடித்தால் தலைவலி குணமாகும்.

10. தலைபாரம், நீரேற்றம் நீங்க: இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து சூடாக்கி தலையில் நெற்றியில் குணமாகும். 

 11. சளித் தொல்லை நீங்க: 

ஒரு கரண்டியில் நெருப்புத் துண் டங்களை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டுப் புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித் தொல்லை நீங்கும்.

12.கபம் நீங்கி உடல் தேற:

கரிசலங்கன்னி செடியை வேரு டன் பிடுங்கி அலசி நிழலில் உலர்த்தி பொடியக்கி 100 கிராம் வறுத்து 5 கிராம் தினமும் காலை, மாலை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட சுபம் நீங்கி உடல் தேறும். மருந்து சாப்பிடும் காலத்தில் புலால் சாப்பிடக் கூடாது.

 13. இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்க இளைப்பு, இருமல் குணமாகும்.

14. சளிகபம் ஏற்படாமல் தடுக்க: சுண்டைக்காயை வத்தல் செய்து, அதை மிக்ஸியில் அரைத்து பவுடரை சாம்பார், குருமா போன்ற எல்லா குழம்புகளிலும் 1 கரண்டி, மசால் பவுடருடன் சேர்த்து சாப்பிட சளிகபம் இருந்தாலும் குணமாகும்.

15. காசநோய் குணமாக: செம்பருத்திபூவை எடுத்து சுத்தம் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும். 

16. இருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த: ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.

17.சுவாசகுழாய் அலர்ஜி குணமாக: குங்கும பூவுடன், தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ள குணமாகும்.

18. மழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக: முசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வரை சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.

19. மூச்சுத்திணறல்: தேள் கொடுக்குச் செடியின் காயை நசுக்கி துளசி இலையைச் சேர்த்து கஷாயமாக்கி தினம் ஒரு வேளை சாப்பிட்டு வர மூச்சுத் திணறல் குணமாகும்.

20. தொடர் இருமல் குணமாக: கண்டங்கத்திரி வேரை அரைத்து வெள்ளாட்டுப்பாலில் காய்ச்சி கொடுக்க குணமாகும். 

21. மூக்கு சம்பந்தமான நோய் குணமாக: நாயுறுவி செடி விதை களை பொடி செய்து உட்கொண்டால் குணமாகும். 

22.. மூக்கில் இரத்தம் வடிதல் குணமாக: மாதுளம் பழச்சாறு, அரு கம்புல் சாறு சமளவு கலந்து 30 மி.லி 3 வேளை சாப்பிட குணமாகும். 

23. சளி தொல்லை நீங்க:

தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட ஜலதோஷம் ஓடும். 

24. தலைவலி குணமாக: கீழாநெல்லிச்சாறு, உத்தாமணிச்சாறு, குப்பைமேனிச் சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசிய மிட ஓயாத தலைவலி தீரும்.

25. தலைச்சுற்றல் குணமாக:

கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைசுற்றல் நிற்கும். 

26. தலைவலி குணமாக: திருநீற்று பச்சிலை சாறு, தும்பை சாறு இரண்டும் கலந்து பச்சை கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்ச தலை வலி பாரம் குணமாகும்.

27. தலைவலி குணமாக: குப்பைமேனி சாறு தடவ குணமாகும். 

28. ஒற்றை தலைவலி நீங்க: தேத்தாங் கொட்டைபுடன், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து தாய்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட ஒற்றை தலைவலி குணமாகும்.

29. இருமல் நிற்க: முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.

30. வரட்டு இருமல் குணமாக: மஞ்சள் துண்டுகளை சுண்ணாம் புத் தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்துத் தூள் செய்து 1 தேக்கரண்டி பாலில் கலந்து கொடுக்க குணமாகும்.

By Sarvan

மேலும் உங்களுக்கு உதவும் சில குறிப்பு 

மூட்டுவலி தரும் மோசமான உணவு பட்டியல். இதனை மோசமான உணவு என்கிறார் உணவியல் நிபுணர்

Images Credit to Google, Canva

Leave a Comment

Write and Earn with Pazhagalaam