Visitors have accessed this post 808 times.
40 வயதிலும் முகம் பொலிவுடன் இருக்க 20 வயதில் இருந்தே உண்ண வேண்டிய உணவுகள் என்ன தெரியுமா???
ஆண் பெண் இருவருமே தங்களது இளம்வயதில் வசீகரத்திற்க்கு அக்கறை படும் அளவிற்கு வயதான பின் எதையும் செய்வதில்லை. இதுதான் நாற்பதுகளில் நமது அழகு குறைந்து போக காரணமாக இருக்கிறது. செல்லத் தொப்பை, சிசேரியன் தொப்பை என உடலில் வரும் புதுபுது மாற்றங்களை நாம் திருத்திக் கொள்ளவில்லை எனில் அழகு என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கும்.
நமக்குதான் 40வயது ஆயிடுச்சு இனி எதுக்கு சீவி சிங்காரித்து கொள்ள வேண்டும் என்று அலட்சியப் படவேண்டாம்.ஓய்வின்றி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த நவீன கால கட்டத்தில்தான் துணையின் ஈர்ப்பும் அரவணைப்போம் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. இது எப்போதும் எந்த வயதிலும் தம்பதியினரிடம் நிலைத்திருக்க நாற்பதிலும் அழகாய் இருப்பது அவசியமாகத் தான் இருக்கிறது.
மேலும் தனக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கவும், தளர்ச்சியைதலைகாட்ட விடாமலிருக்க நம் உடலும் முகமும் அழகாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
40 வயதிலும் பளிச்சென இருக்க என்ன செய்ய வேண்டும்
அழகு என்பது இன்ஸ்டன்ட் காபி போல உடனே வந்துவிடாது. கண்ட கண்ட அழகு கிரீம்களால் முகத்தைப் பட்டி பார்த்து பளபளக்க செய்வது அழகல்ல. நாம் உண்ணும் உணவிற்க்கும்,
-
முகத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. உணவு தேர்வில் தான் உங்கள் அழகு தேர்வு தொடங்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ” என்பார்கள். அகம் என்பது வயிற்றையும் தான் குறிக்கிறது.
-
உங்கள் முகத்தில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருந்தால் தினசரி சீரகத்தண்ணீர் அருந்தவும்.
-
பால் வகைகளை ஒதுக்கிவிட்டு பல ஆகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
-
முக்கியமாக தோலை பளபளப்பாக்கும் பாலிஃபீனால்கள் நிறைந்த பப்பாளியை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
கேரட் தக்காளி சேர்ந்த ஜூஸ் அதனுடைய ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையால் முகத்தில் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.
-
நிறைய பருக்கள் உடன் உங்கள் முகம் பார்ப்பதற்கு பொலிவுடன் இல்லையா? வெள்ளை பூசணிக்காய் பாசிப்பயறு சேர்த்து கூட்டாக சமைத்து அடிக்கடி சாப்பிடுங்கள். அதன் கூடவே ஆவாரம்பூ ரோஜா இதழ் சமபங்கு எடுத்து இது பங்கு மூல்தானி மெட்டி கலந்து நன்கு மாவாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையை பன்னீரில் குழைத்து வாரம் மூன்று முறை பூச வேண்டும் பிறகு 4 மணி நேரம் கழித்து கழுவினால் பத்தே தினங்களில் பளபள என மாறும்.
-
உங்கள் முகம் உடல் இயக்கத்தின் பொழுது மனிதனின் ஒவ்வொரு செல்லும் அழிவை ஏற்படுத்தும். இதுதான் வயோதிகத்தில் ஏற்படும் தோல் சுருக்கம் நரை திரை மூப்பு எல்லாம் ஏற்பட இதுதான் அடிப்படை காரணம்.
-
ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துள்ள உணவு களும் மூலிகைகளும் தான் இந்த செல் அழிவை கூடியவரை தள்ளிப் போடுகின்றன.
அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் வித்திடும் வண்ணமிகு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தோல் வசீகரமாக மாற வேண்டுமா
தோல் பளபளவென வசீகரமாக மாற வைட்டமின்கள் ஏ சி இ இவை மூன்றும் மிக முக்கியமாக தேவைப்படுகின்றன. இவை கேரட்டில் மட்டும் தான் உள்ளது என்று நினைப்பது மிக தவறு.
முருங்கைக் கீரை முள்ளங்கி வெந்தயம் பப்பாளி ஆரஞ்சு கருவேப்பிலை கொத்தமல்லி இவற்றில் அனைத்திலும் பீட்டா கரோட்டின்கள் உள்ளன. இவை தோல் வறண்டு போகாமல் வனப்புடன் வசீகரமாக இருக்க அதிகம் உதவுகின்றன. இவற்றை தினசரி உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம் கண்களுக்கு மட்டும் தேவைப்பட்ட இந்த வைட்டமின்கள் இப்பொழுது சிறுநீரகம் தொடங்கி பல்வேறு பயன்களுக்கும் வைட்டமின் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மென்மையான தோலுக்கு என்ன செய்யலாம்
தோல் மென்மையாக மாற என்ன செய்யலாம் வைட்டமின் சி யும் தோல் வனத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. வைட்டமின்களும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தோலை வனப்புடன் வைப்பதுடன் இளமையையும் பாதுகாக்கிறது. ரைஸ்ப்ரான் என்ற அரிசித் தவிட்டு எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், நல்லெண்ணெய் முதலான தாவர எண்ணெய்களில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. இது தவிர பசலைக்கீரை, சோளம் இவற்றிலும் வைட்டமின் ஈ உள்ளது. ஆண்மை குறை தீரவும் மலடு நீங்கும் இந்த வைட்டமின் டி அவசியம் என்பது அழகை தாண்டிய இன்னொரு அருமையான செய்தி.
அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்காயை நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து முதுமையைப் போக்கும் மாமருந்து மட்டுமல்ல நோய் எதிர்ப்பாற்றல் வழங்கிடும் அமுதம் கூட தான்.
தினசரி நெல்லிக்கனியை உணவாகவோ மருந்தாகவோ சாப்பிட்டு வந்தால் இளமை நிச்சயம் நிலைபெறும். நீடித்த ஆரோக்கியத்துடன் வாழலாம்.
இது தவிர முட்டைக்கோஸ், முருங்கைக் கீரை கொத்தமல்லிக் கீரை யிலும் இந்த வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.
காயகல்பம் என்றால் என்ன
நம் முன்னோர்கள் உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் உறுதியுடன் இருக்க செய்ய அந்தக் காலத்தில் தமிழ் சித்தர்கள் காட்டிய உணவுப்பழக்கமும், ஒழுக்க முறையும், யோகா பயிற்சியும் சேர்ந்ததுதான் காயகல்பம் என்று கூறுகிறார்கள் இது தவறாக புரிந்து கொண்ட பலர் இது ஒருவகை லேகியம் என்று நினைத்து உடலை அழகுடன் வசீகரத்துடன் வைத்துக் கொள்வதற்காக அதை உணவாக உட்கொண்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறு நாற்பதிலும் அழகு நிலைத்திருக்க ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கேற்ற உணவு குறிப்பிட்ட அளவு தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும் இப்படி செய்தால்தான் நாம் நாற்பதிலும் இருபது போல் இருக்க முடியும்.