Visitors have accessed this post 238 times.
ரவை இல்லாமல்… ரவா லட்டு வா?
தேவையான பொருட்கள்:-
1 டம்லார் : அரிசி
1/2 டம்லார் : சர்க்கரை
1/2 முடி தேங்காய் (துருவல்)
3 தேக்கரண்டி :- நெய்
1/2 டம்லார் : பால்
இவ்வளவு தான் தேவையான பொருட்கள். குறைந்த பொருட்களை வைத்துச் சுவையாக சமைப்பதே சிறப்பு…
வாங்க நாம் லட்டு செய்யலாம்
அடுப்பில் கடாய் வைக்கவும்
கடாய் சுடானதற்க்குப் பிறகு அதில் அரிசியைச் சேர்த்து வறுக்கவும் பின் அதை ஒருத் தட்டில் மாற்றி ஆரவைக்கவும்.
அதே கடாய்யில் நெய் சேர்த்த பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன் நிறத்தில் வருக்கவும், இதையும் வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்…
ஒரு மிக்ஸி ஜாரில் வருந்த அரிசி மற்றும் சர்க்கரை சேர்த்து அரைக்கவும் (நன்கு மாவாக அரைக்காமல்) கோர கோர வென்று அரைத்து எடுக்கவும்… இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அத்துடன் வருந்த தேங்காய் துருவலையும் சேர்த்து விறவிக் கொள்ளவும் பின் அத்துடன் சிறிது பால் சேர்த்து உருன்டைப் பிடித்து வைத்தால் நம்முடைய லட்டு தயார்…..