Visitors have accessed this post 369 times.

Hidden tourist spot in kodaikanal

Visitors have accessed this post 369 times.

Poombarai village

 

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி மழைத்தொடரின் மையமாக விளங்கும் ஒரு அழகிய விவசாய மலைக்கிறாமமாகும் இக்கிராமமானது கொடைக்கானலில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் சிறப்பாக அழகிய நிலப்பரப்பை வழங்கும் மாடி விவசாயம் உள்ளது.

 

இக்கிராமமானது பூண்டு விளைச்சலுக்குப் பெயர் பெற்ற மொட்டை மாடி வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. பழனி மலையில் கடல் மட்டத்திலிருந்து 1,920 மீ (6,200 அடி) உயரத்தில் தனித்து நிற்க்கிறது இந்த கிராமம் பசுமையுடன் கூடிய அழகிய காட்சியையும் அமைதியயும் மனதை மயக்கும் வன்னம் அமைந்துள்ளது

 

இங்கு சென்று வரும்போது உள்ளூர் விளை பொருட்கலான பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவற்றை வாங்கி அனுபவிக்கவும். சிறிது பூண்டும் வாங்க மறக்காதீர்கள்.இங்கு விளையும் மலை பூடானது மருத்துவ குணமிக்கதாகவும் இயற்கையாணாதாகவும் விளங்குகிறது.

 

இங்கு மனதை கொள்ளை கொள்ளும் வகயில் பசுமையாக அமைக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான வீடுகளைக் காணலாம்.

 

இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தின் முக்கிய ஈர்ப்பு அம்சமாக குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது மேலும் இக்கிராமமானது கொடைக்கானலின் சிறந்த ரகசியம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

இங்கு விளையும் மலை பூடானது அதெற்கென தனித்துவமான வாசனயை கொண்டுள்ளது.

 

பூம்பாறையின் வானிலை மிகவும் மாறுபட்டது மற்றும் கணிக்க முடியாதது. எனவே, நீங்கள் எப்போது சென்றாலும் சில சூடான ஆடைகளை எடுத்துச் செல்ல பரிந்துரைக்கப்படுகிறது. மற்றொரு குறைபாடு இப்பகுதியில் மொபைல் நெட்வொர்க்குகளுக்கு அதிக கவரேஜ் இல்லை. மற்றும் இந்த அழகான கிராமத்தில் ஹோட்டல்களோ விடுதிகளோ இல்லை. பிரதான சாலையில் உணவகங்கள் மற்றும் சிறிய டீக்கடைகள் உள்ளன இவைகள் உங்களுக்கு உண்மையான கிராமப்புற அனுபவத்தைத் தரும். சுற்றிலும் ஏடிஎம்கள் இல்லாததால் எப்போதும் கையில் பணத்தை வைத்திருங்கள்

 

 

 

 

 

 

1 thought on “Hidden tourist spot in kodaikanal

Leave a Comment

Write and Earn with Pazhagalaam