Visitors have accessed this post 323 times.
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
தேவையான பொருட்கள்:
1 கிலோ சிக்கன்
1/2 கிலோ பாஸ்மதி அரிசி
4 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
2 கப் தயிர்
1 கைபிடி புதீனா,
1கைபிடி மல்லி
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
2 ஸ்பூன் கரம் மசாலா
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2பிரிஞ்சி இலை
2 பச்சை மிளகாய்
1 துண்டு பட்டை
4 கிராம்பு
4 ஏலக்காய்
கல் பாசி பூ சிறிது
1/2 லிட்டர் சமையல் எண்ணெய்
1/4 கப் எழுமிச்சை சாறு
1/4 கப்பால்
1 சிட்டிகை குங்குமப்பூ
1 கப் மைதா மாவு
ஸ்டெப்ஸ்
1.
ஒரு பாத்திரத்தில் காஷ்மீரி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் கரம் மசாலா உப்பு…
2. எலுமிச்சை சாறு, சிக்கன், ஒரு கப் தயிர் போன்றவற்றை……
3. கலந்து அரை மணி நேரம் தனியே ஊறவிடவும்
4. இதனை 90% எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
5. அதே எண்ணெயில் பிரியாணி இலை,கல்பாசி பூ, ஏலக்காய்,பட்டை, கிராம்பு, போன்றவற்றை பொரித்தெடுக்கவும்.. பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கி, அதனுடன் பச்சைமிளகாய் சேர்க்கவும்…
6. இதற்கிடையில் பாதி அளவு உப்பு சேர்த்து அரிசியினை 70% வேக வைத்து முற்றிலும் தண்ணீரை,வடித்து வைக்கவும்
7. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
8. கரம்மசாலா, மஞ்சள்தூள், நறுக்கிய புதினா மல்லி சேர்த்து நன்கு வதக்கவும்
9. இதனுடன் தயிர் சேர்த்து நன்கு வதக்கி பின்னர் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்…இதனுடன் பொரித்து வைத்துள்ள சில்லி சிக்கனை பாதி அளவு மட்டும் சேர்க்கவும்….
10. சிக்கன் சேர்த்ததும் நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி இறக்கவும்.
11. நான் சுவைக்காக தம் வைக்க மண் பாத்திரத்தை பயன்படுத்தியுள்ளேன்..
12. தம் வைக்கும் பாத்திரத்தில் ஒரு அடுக்கு சிக்கன் கலவையும் மற்றொரு அடுக்கு வடித்த அரிசியையும் சேர்க்கவும்.
13. இதன் மீது புதினா,மல்லி இலை, வறுத்த வெங்காயம் சேர்க்கவும்… பாலில் குங்குமப்பூ கலந்து அரிசியின் மீது வண்ணத்திற்காக ஊற்றவும்…
14. மைதா மாவினை சப்பாத்தி மாவு போல பிசைந்து, ஆவி வெளியில் போகாமல் சட்டியின் ஓரங்களில் ஒட்டவும்.
15. நன்கு மூடி கனமான சுடுநீர் பாத்திரம் வைக்கவும்.இதனை மிகக் குறைந்த தீயில் 20 நிமிடம் தம்மில் விடவும் தேவைப்பட்டால் மீதமுள்ள சில்லி சிக்கனை மேலே அடுக்கி வைக்கலாம்.
- 16. தம் ஆறியவுடன் மாவினை அகற்றி விட்டு,சாதத்தினை கிளறி அல்லது கிளறாமல் பரிமாறலாம்…..
- 17. நான் பரிமாறும் முன்பு மீதமுள்ள சில்லி சிக்கனை பிரியாணியின் தம்மில் இருந்து இறக்கி அதன் மீது அடுக்கி பரிமாறி உள்ளேன்…. இதை நீங்கள் செய்து உங்கள் குடும்பத்தினரை, மகிழ்விக்க எனது வாழ்த்துக்கள்…